அக்கம் பக்கம் அறிவியல் 2!
விண்வெளி குப்பைகள் ! பூமிக்கு வெளியே சில கி . மீ தூரத்திலேயே பல்வேறு நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கிலான சாட்டிலைட் குப்பைகள் . இதில் வட்டப்பாதையில் சுற்றிவரும் சாட்டிலைட்டுகள் குறைவு . துப்பாக்கி தோட்டாவை விட பத்து மடங்கு வேகத்தில் சுற்றிவருவது செயலிழந்துபோன 95% செயற்கைக்கோள் குப்பைகள்தான் . 1 மி . மீ நீளத்திற்கும் குறைவான 170 மில்லியன் டன்கள் குப்பைகள் பூமியை சுற்றிவந்துகொண்டிருக்கின்றன என்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் . இதில் ரஷ்யா , 6,500 விண்கல குப்பைகளோடு முதலிடமும் , அடுத்து அமெரிக்கா 3,999 பொருட்களோடும் உள்ளன . இவற்றுக்கு அடுத்து விண்வெளி திட்டங்களோடு களமிறங்கியுள்ள சீனா 3,475 பொருட்களோடும் அடுத்த இடம் பிடித்துள்ளது . 2007 ஆம் ஆண்டு anti-satellite weapons test க்காக தன் சாட்டிலைட்டை உடைத்தபோது , 35 ஆயிரம் குறுந்துண்டு குப்பைகளாக மாறின . " விண்வெளி குப்பைகள் தங்களது செயற்கைக்கோளுக்கே ஆபத்து என்பதை நாடுகள் உணரத் தாமதமாகிவிட்டது " என்கிறார் விண்வெளி ஆராய்ச்சியாளரான பில் அய்லர் . 2 2017: டாப் கேட்ஜெட்ஸ் ! Fidget spinners கச்சே