அக்கம் பக்கம் அறிவியல் 2!
விண்வெளி குப்பைகள்!
பூமிக்கு வெளியே சில கி.மீ தூரத்திலேயே பல்வேறு நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கிலான சாட்டிலைட்
குப்பைகள். இதில் வட்டப்பாதையில் சுற்றிவரும் சாட்டிலைட்டுகள்
குறைவு. துப்பாக்கி தோட்டாவை விட பத்து மடங்கு வேகத்தில் சுற்றிவருவது
செயலிழந்துபோன 95% செயற்கைக்கோள் குப்பைகள்தான்.
1 மி.மீ நீளத்திற்கும் குறைவான
170 மில்லியன் டன்கள் குப்பைகள் பூமியை சுற்றிவந்துகொண்டிருக்கின்றன
என்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம். இதில் ரஷ்யா,
6,500 விண்கல குப்பைகளோடு முதலிடமும், அடுத்து
அமெரிக்கா 3,999 பொருட்களோடும் உள்ளன. இவற்றுக்கு
அடுத்து விண்வெளி திட்டங்களோடு களமிறங்கியுள்ள சீனா 3,475 பொருட்களோடும்
அடுத்த இடம் பிடித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு anti-satellite
weapons test க்காக
தன் சாட்டிலைட்டை உடைத்தபோது, 35 ஆயிரம் குறுந்துண்டு குப்பைகளாக
மாறின. "விண்வெளி குப்பைகள் தங்களது செயற்கைக்கோளுக்கே ஆபத்து
என்பதை நாடுகள் உணரத் தாமதமாகிவிட்டது" என்கிறார் விண்வெளி
ஆராய்ச்சியாளரான பில் அய்லர்.
2
2017:டாப்
கேட்ஜெட்ஸ்!
Fidget spinners
கச்சேரி சாலை சுட்டி
முதல் ஸ்டைலீஷ் ஸ்டார் அல்லுஅர்ஜூன் வரை கையில் சுற்றி மன அழுத்தத்தை பஞ்சராக்க உதவிய
பொருள். பிளாஸ்டிக் பால் பேரிங் ஐட்டமான ஃபிட்ஜெட் ஸ்பின்னர், இபே,அமேஸான் சைட்டுகளில் பள்ளி, கல்லூரி என அத்தனை இடங்களிலும் டீனேஜ் டூ அங்கிள்ஸ் வரை வாங்கி ட்ரெண்டிங்கில்
இணைய 2017 ஆம் ஆண்டின் No.1 சக்சஸ் பொருள்.
Rs.50-600 வரை.
Sony A9 camera
ஆட்டோஃபோகஸ் மோடில் 24.2 மெகாபிக்ஸல்களில்
Exmor RS மூலம் படங்களை எடுக்க உதவும் சோனியின் கண்ணாடியில்லாத
ஹைஎண்ட் DSLR கேமரா இது. Rs.3,29,990
Logitech G Powerplay
லாகிடெக் வழங்கும் G903 மௌசில்
மும்முரமாக கேம் விளையாடும்போதே அதனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். பிளாஸ்டிக், துணி என இருவகைகளில் கிடைக்கும் வயர்லெஸ்
மவுஸின் LED கலரை சூப்பராக செட் செய்து, அதிரடியாக விளையாடி களிக்கலாம். Rs. 16,252
3
சூப்பர் கண்டுபிடிப்புகள் 2017!
Nintendo Switch
நின்டென்டோ வெளியிட்டுள்ள
ஏழாவது வீடியோகேம் கன்சோல் இது. மார்ச் 2017 அன்று ரிலீசான
இதன் மெமரி 4ஜிபி, சேமிப்பு 32ஜிபி. 6.2 இன்ச் ஹெச்டி ஸ்க்ரீன், எளிதில் கழற்றி மாற்றும் வகையில் கன்ட்ரோலர்கள் என ஜெல்டா கேமை ஆக்ரோஷமாக விளையாடி
மகிழலாம். இந்த ஆண்டின் பொழுதுபோக்குதுறையில் முக்கிய கண்டுபிடிப்பு
இது. Rs. 35,990
The alpha
OLED—Signature TV W
இந்த டிவியின்
செல்லப்பெயர் வால்பேப்பர்.
65 இன்ச் திரைகொண்ட இந்த டிவியின் எட்டு கிலோ மட்டுமே. மொத்த 2.5mm மெல்லியது. ப்ளூரே
அல்லது அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் ரக வீடியோக்களை டால்பி அட்மோஸில்
சூப்பராக பார்க்கலாம். இந்த ஆண்டின் மறுமலர்ச்சி இன்வென்ஷன் இது.
Rs.29,99,990
DJI Spark
கைகளில் சிறிய
மூவ்மெண்டுகளை செய்தே இந்த ட்ரோன் விமானத்தை இயக்க முடியும் என்பது இதன் ஸ்பெஷல். குறிப்பிட்ட
இடத்தில் ஏரியல் வியூவை 12 மெகாபிக்ஸல் சென்சாரில் அட்டகாசமாக
பதிவு செய்ய ஸ்பார்க் ட்ரோன் கச்சிதமாக உங்களுக்கு உதவும். 300கி எடை.Rs. 43,000
4
ரஷ்யாவின் சீக்ரெட்
ரேடியோ!
-விக்டர் காமெஸி
ரஷ்யாவின் செயின்ட்
பீட்டர்ஸ்பெர்க் அருகிலுள்ள சதுப்புநிலத்தில் துருப்பிடித்த இரும்பு கேட்டை திறந்தால்
தெரிவதுதான் பாழடைந்த ரேடியோ ஸ்டேஷன். பனிப்போர் காலத்தில் செயல்பட்டு
வந்த ரேடியோ ஸ்டேஷனின் பெயர் “MDZhB”. 24X7 என ஆல்டைமும் மோனோடோன்
கேட்கும்; இடையில் திடீரென கப்பலின் ஹார்ன் ஒலி இடையில் வந்துபோகும்.
அறிவிப்பாளர்களின் சில குரல்களைத் தாண்டி இப்படித்தான் கடந்த முப்பது
ஆண்டுகளாக இந்த ரேடியோ ஸ்டேஷன் வேலை செய்து வருகிறது. 4625 kHz ஒலியலையில் ரேடியோ குமிழைத் திருகினால் ரஷ்யாவின் சீக்ரெட் ரேடியோவைக் கேட்கலாம்.
சோவியத் காலத்தில்
நீர்மூழ்கி கப்பல்களுக்கான செய்தி பரிமாற்றத்துக்கு பயன்பட்ட ரேடியோ இது. Buzzer என அழைக்கப்படும் ரேடியோ குற்றலையில் இயங்கக்கூடியது. HF அலைகளை விட SF அலைகள் ஜிக் ஜாக் வடிவில் பல்லாயிரம் கி.மீ தூரம் பயணிக்க கூடியது என்பதே. எ.கா: லண்டனிலிருந்து குற்றலையில் ஒளிபரப்பாகும் பிபிசி
ரேடியோவை பல்வேறு நாடுகளில் கேட்க முடியும். ராணுவத்தினரின் SF
அலைகளை விமானம், கப்பல் உள்ளிட்டவற்றில் செய்திகளை
அனுப்ப பயன்படுத்துகிறார்கள்.
Arcos எனும் ரஷ்யாவின் ஏற்றுமதி இறக்குமதி
அமைப்பின் லண்டன் அலுவலகத்தில் பல்வேறு ரகசிய செயல்பாடுகள் நடைபெறுவதை மோப்பம் பிடித்த
இங்கிலாந்து போலீஸ் ரெய்டு நடத்தியபோது பல்வேறு ரகசிய அறைகளை கண்டுபிடித்தது.
முக்கிய ஆவணங்களை ரஷ்யர்கள் முன்னதாகவே எரித்துவிட்டதால் போலீசுக்கு
உருப்படியான விஷயங்கள் அங்கு எதுவும் தேறவில்லை. ஆனால் ரஷ்யர்கள்
அதன்பிறகு செய்திகளை அனுப்புவதில் இன்னும் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். ரகசியசெய்தியை ரேடியோ வழியாக உலகெங்கும் அனுப்புவது அப்படித்தான் தொடங்கியது.
இந்த செய்திகளையும் அலசி கண்டுபிடிக்கும் அசகாய கோடிங் பில்லாக்கள் ஊரில் இல்லாமலா? அமெரிக்காவில ்2010 ஆம் ஆண்டு 7887Khz அலைவரிசையில் செய்திகளை பெற்ற ரஷ்ய ஏஜெண்டுகளை அமெரிக்கபோலீஸ் கைது செய்தது.
ஏப்ரல் 14, 2017 அன்று இதே தொன்மையான முறையை வடகொரியா
இன்றும் ஃபாலோ செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நன்றி: முத்தாரம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், விக்னேஷ் பிரமோத்தன்