விநோத ரச மஞ்சரி!
சூப்பர்மேன் மாப்பிள்ளை!
கல்யாணத்திற்கு
பிறகு ஆண்கள் சூப்பர்மேன் ஆவது வண்டியில் பண்டல் ஆஃபர் போல மனைவி மக்களை சுமந்துசெல்லும்
சமயத்தில்தான்.
கனடா மாப்பிள்ளை அதற்கு முன்பே தன்னை சூப்பர்மேனாக நிரூபித்து உலகெங்கும்
அப்ளாஸ் அள்ளியுள்ளார். யார் அந்த பாக்கியவான்?
கனடாவைச்சேர்ந்த
கிளெய்டன் குக்,
அந்த புதிய சூப்பர்மேன் மாப்பிள்ளை. அன்று அவருக்கு
திருமணமாகி கல்யாண சந்தோஷத்துடன் ஜாலியாக மனைவி பிரிட்டானியுடன் பார்க்கில் தடபுடல்
போட்டோஷூட் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில்
சிறுவன் தவறிவிழுந்து முழ்குவதை தற்செயலாக கவனித்த கிளெய்டன், பதறி பாய்ந்து குளத்தில் குதித்து சிறுவனைக் காப்பாற்றியிருக்கிறார்.
போட்டோகிராபர் டேரன் ஹேட் பழக்கதோஷத்தில் இதனையும் இரு போட்டோக்களாக
எடுத்தவர், அதனை இணையத்தில் அப்லோட் செய்ய, உலகெங்கும் கிளெய்டனுக்கு கல்யாண வாழ்த்துக்களோடு எக்கச்சக்க பாராட்டுக்கள்
கிடைக்க மனிதர் செம ஹேப்பி.
மில்க்ஷேக் மேஜிக்!
நாட்டில் ட்ரெண்டிங்கில்
ஓடும் விஷயங்களோடு ஓடினால்தானே உலகம் நம்மை வானத்தைப்போல விஜயகாந்தைப் போல மதிக்கும்
என்பதை கப்பென பிடித்த பாகிஸ்தானின் கஃபே ரிலீஸ் செய்த விளம்பரம் பலரையும் ஆசம் சொல்ல
வைத்திருக்கிறது.
அண்மையில் சோஷியல்
தளங்களில் பாலிவுட் பிரபலங்கள் ரன்பீரும், மஹிரா கானும் சிகரெட் அடிக்கும்
காட்சி வைரலானது. மினிமம் ட்ரெஸ் அணிந்து சிகரெட்டா? என பாகிஸ்தான் ரசிகர்கள், மஹிராவை காய்ச்சி எடுத்தனர்.
அதை அப்படியே சுடச்சுட கேஷாக மாற்ற பிளான் போட்டது பாகிஸ்தானின் கராச்சியைச்சேர்ந்த
லிக்யூடெரியா கஃபே. உடனே மஹிரா தம் அடிக்கும் ஸ்டில்லில் சிகரெட்டை
அழித்து, ஸ்ட்ராவை பொருத்தி தன் கம்பெனி சாக்லெட் மில்க்ஷேக்கை
குடிப்பதாக மாற்றி பேனர் வைத்துவிட்டது கஃபே. விளம்பரம் இணையத்தில்
வந்தவுடன், இப்படியொரு மட்டமான விளம்பரமா?, மோசம் படுமோசம் என ஏகத்துக்கும் கேலி, கலாய்கள் மஹிராவை
குறிவைத்தும் குவிய, ஆகமொத்தம் கஃபேயின் பப்ளிசிட்டி பிளான் சூப்பர்
ஹிட்.
அதிபர் மகளின் செல்ஃபீ ஜூரம்!
தன் டெய்லி லைஃபில்
தூங்கி எழுந்தது முதல் நைட் பார்ட்டி வரை பதிவு செய்யும் ஜெனரேஷனில் அதிபர் மகள் மட்டும்
இந்த ட்ரெண்டிங்குக்கு விதிவிலக்கா என்ன?
முன்னாள் சோவியத்
நாடான அஸெர்பைஜன் நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ், ஐ.நா சபை மாநாட்டில் தன் மகளோடு அமர்க்களமாக பங்கேற்றார். பின், அருமையாக பேசி கைத்தட்டல்களை வாங்கினார் என்பதல்ல
நியூஸ். அவரின் மகள் லெய்லா அலியேவா, மாநாட்டில்
மும்முரமாக உலக தலைவர்கள் பேசிக்கொண்டிருக்க இவர், ஜாலி ஷாக்
ரியாக்ஷன் முகத்துடன் போட்டோக்களை போனில் சுட்டுத்தள்ளிக்கொ்ண்டிருந்தார்.
அதோடு விட்டாரா? எடுத்த போட்டோக்களை தானே ரசித்து
கலகலவென சிரித்தது மேடமின் அடுத்த லெவல் விளையாட்டு. இதெல்லாம்
தன் தந்தை பதில் சொல்லும்போது லெய்லா செய்த குறும்புகள். இவை
அனைத்தும் லைவாக அனைத்து நாடுகளிலும் ஒளிப்பரப்பாகி அம்மணியின் புகழை பரப்பிவருகிறது.
போட்டோ மற்றும் வீடியோ என லெய்லா மாஸ் புகழ்பெற்று விட்டார்.
ly:"Arial","sans-serif";
mso-ansi-language:EN-ZW'>
காதல் அழிவதில்லை!
ஜெயப்பிரகாஷ் தன்
ஸ்கூல் நாட்களிலேயே தன் தோழியை நேசிக்க ஆரம்பித்து, பின் 10 ஆண்டுகள் கழித்து அவரை திருமணமும் செய்துகொண்டார். இதில்
இருக்கும் சூப்பர் ட்விஸ்ட்தான் கதையின் நெகிழ்ச்சி சுவாரசியமே.
தன் பதினேழு வயதில்
பள்ளி வகுப்பில் துறுதுறு அழகியை சந்தித்தார். அப்புறம் என்ன? வைத்த கண்ணை எடுக்காமல் அந்த பெண்ணை பார்த்து, பின் நண்பர்களாவதுதானே
அடுத்த லெவல். ஆனால் தோழியுடன் இன்னொரு ஆண் நண்பரை பார்த்தவர்
பின் அவருடன் பள்ளி ஃபேர்வெல் வரை பேசவில்லை. கல்லூரியில் சேர்ந்து
படித்தவர் தன் முன்னாள் காதலியை இறுதியாக சந்தித்த கணம் நெஞ்சையே நொறுக்க கூடியது.
"பெங்களூரு சென்றுவிட்டவளை விபத்தால் வழுக்கைத் தலையாக,
வாய், பற்கள் இன்றி முகமே உருக்குலைந்து முதியர்
போல நடந்து வந்தவளை என்னால் மறக்கவே முடியாது" என்றவர்,
தன் காதலைச் சொல்லி 2014 ஆம் ஆண்டு உறவு,
பொருளாதார சிக்கல்களை கடந்து காதலியை ஊரறிய திருமணம் செய்து கைப்பிடித்திருக்கிறார்
ஜெயப்பிரகாஷின் கதை ஆத்ம காதலுக்கு அற்புத உதாரணம்.
தொகுப்பு: ரிதேஷ் பானர்ஜி, பெலவாடா சரளா