ரோபோக்களுக்கு மனித கைகள்!
ரோபோக்களுக்கு
மனித கைகள்!
வாஷிங்டன் மற்றும்
கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோக்களுக்கான மனிதர்களின் தோல் போன்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர். புதிய
கண்டுபிடிப்பு மூலம் மனிதர்கள் தோல் போன்ற தன்மையை ரோபோக்களின் கைகள் பெறும்.
அதாவது, மனிதர்களின் கைகளின் தொடும் உணர்வு.
சிலிகான் ரப்பரில்
திரவ வடிவிலான உலோகத்தை உட்செலுத்தி செயற்கைத் தோல் உருவாக்கப்பட்டுள்ளது. "நாங்கள் உருவாக்கிய ரோபோ கைகளில், மின்சாரம் பாயும்போது
அவை ஏறத்தாழ மனிதர்களின் கைகளுக்கு ஒப்பானவை. இதிலுள்ள சென்சார்கள்
மனிதர்களின் விரல்களைப் போல வெற்றிகரமாக செயல்படுகின்றன" என்கிறார் ஆராய்ச்சியாளரான ஜியான்சூ யின். மனிதர்கள்
வெடிகுண்டுகளை கண்டறியும் பணியில் உடலுறுப்புகளை இழப்பதால், இந்த
ரோபாக்களை வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்யும் பணியில் ஈடுபடுத்தும் திட்டமிருக்கிறது. தற்போது
அதிர்வுகளை உணரும் சோதனைகளில் ரோபோ கரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2
ஸ்பேக்ஸ் எக்ஸின்
புதிய உடை!
நாம் தீபாவளி, பொங்கல்
என டைப் டைப்பாக உடையை மாற்றுகிறோம். விண்வெளி ஆடைகள் மட்டும்
அப்படியே இருந்தால் நன்றாக இருக்குமா? தற்போது ஸ்பேக்ஸ்எக்ஸ்
நிறுவனம் தனது விண்வெளி வீரர்களுக்காக புதிய விண்வெளி உடையை டிசைன் செய்துள்ளது.
ஸ்பேஸ் சூட்டை
அதன் ஓனர் எலன் மஸ்க் அணிந்து அறிமுகப்படுத்தி அசத்தினார். "டிரெஸ் பங்ஷன்களும் அபாரம்" என பதிவிட்டவுடன் அறிவியல்
வட்டாரமே பரபரப்பானது. நாசாவும் மூன்றாம் தலைமுறைக்கான ஸ்பேஸ்
சூட் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு சரக்குகளை அனுப்பும் பணியை
தனது ரீயூஸபிள் ராக்கெட்டுகளின் மூலம் செய்து வருகிறது ஸ்பேக்ஸ் எக்ஸ். அடுத்த ஆண்டு நாசாவுடன் இணைந்து இரு டூரிஸ்டுகளை நிலவுக்கு அனுப்பிவைக்க ஸ்பேக்ஸ்
எக்ஸ் பிளான் செய்துள்ளது. செவ்வாய் செல்வதுதான் எலன் மஸ்கின்
2018 ஆம் ஆண்டின் இரண்டாவது லட்சியம்.
3
பெருகும் மணல்
தட்டுப்பாடு!
பீச்சுகளிலும், பாலைவனங்களிலும்
குவிந்துகிடக்கும் மணலால் எப்போதுமே வீடுகட்ட மணல் கிடைக்கும் என நினைக்கலாம்.
ஆனால் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் 2020 ஆம் ஆண்டில்
வீடுகட்ட மணல் இருக்காது நாட்டின் கட்டுமானத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டின் உள்நாட்டுத்தேவைக்கே மணல் இல்லாத நிலை.
தொடர்ந்து கனிமங்களுக்காக
மணல் சுரங்கங்கள் ரூல்ஸ்களை மீறி தோண்டப்படுவதால் உலகளவில் சூழல் பிரச்னைகள் விஸ்வரூபமாவதோடு, மணலின்
அளவும் சுருங்கிவருகிறது. சீனாவில் ஓராண்டுக்கு நடைபெறும் மணல்
வணிகத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பவுண்ட்ஸ்.
சீனாவின் ஷாங்காயில் 2000 ஆண்டிலிருந்து
7 மில்லியன் வீடுகள் கட்டப்பட்டு 23 மில்லியன்
மக்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவின் மூன்று பெரிய மணல் சுரங்கங்களைவிட
சீனாவின் Poyang ஏரி மணல் சுரங்கம் மிகப்பெரியது. அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து
ஆகிய இடங்களில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் மக்கள் கடுமையாக சுரங்கங்களை
எதிர்த்து போராடிவருகின்றனர். 4
CHIME டெலஸ்கோப்!
பல பில்லியன் ஒளி
ஆண்டுகள் தொலைவிலுள்ள ரேடியோ அலைகளை அறிய உதவுகிறது சிமி(CHIME – the Canadian
Hydrogen Intensity Mapping Experiment) எனும் ரேடியோ டெலஸ்கோப்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகத்தொடங்கியது தற்போதுதான் செயல்பாட்டுக்கு
வந்துள்ளது.400-800Mhz ரேடியோ அலைகளை ஈர்க்கும் சக்தி கொண்ட சிமி,
3 டைமென்ஷனாலாக இதற்கான வரைபடத்தை அமைக்கிறது. கனடாவின் DRAO வில் சிமி டெலஸ்கோப் அமைக்கப்பட்டு இதனை
தேசிய ஆராய்ச்சி கவுன்சிலால் ஒழுங்குபடுத்துகிறது.
சிமி டெலஸ்கோப்பில் 20m x 100m அளவில் ரெஃப்ளக்டர்களோடு 256 ட்யூல் ஆன்டென்னாக்கள் வானிலிருந்து
வரும் கதிர்வீச்சுக்களை பதிவு செய்ய உதவுகிறது. 2007 ஆம் ஆண்டு
முதன்முதலில் ரேடியோ வெடிப்புகள்(FRB) கண்டறியப்பட்டன.
சிமி டெலஸ்கோப் தினசரி 2-50 வரையிலான ரேடியோ வெடிப்புகளை
கண்டறிகிறது. இத்திட்டத்தில் பிரிட்டிஷ் கொலம்பிய, மெக்கில் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் பங்கேற்றுள்ளன.
5
உடலை சோதிக்கும்
புதிய கேமரா!
எடின்பர்க் மற்றும்
ஹீரியட் வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலை சோதிக்கும் புதிய கேமராவைக்
கண்டுபிடித்துள்ளனர்.
இனி எக்ஸ்ரே போன்ற அதிகசெலவு செய்யும் சிகிச்சையின்றி உடலின் நோய்களை
எளிதில் அறியலாம். உடலை சோதிக்கும் எண்டோஸ்கோப்பின் முனையில்
பொருத்தி உடலை ஆராயலாம்.
சோதனை முறையில் 20செ.மீ அளவுள்ள திசுக்களை வெற்றிகரமாக சோதித்தது. எண்டோஸ்கோப்பின்
ஒளியை பின்தொடர்ந்து உறுப்புகளை சோதிக்கும் கேமரா இது. "பிராக்டிக்கலான் மருத்துவத்துறையின் சவால்களை எதிர்கொள்ளும்படியான கண்டுபிடிப்பு
இது.பிற்காலத்தில் மருத்துவ உலகையே இது மாற்றக்கூடும்"
என உற்சாகமாக பேசுகிறார் டாக்டர். மைக்கேல் டானர்.
தொகுப்பு: ராஸி பானர்ஜி, சுதேஷ் சதன்