இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூர் டைம்ஸ்- 1

மயிலாப்பூருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, செந்தில்நாதன் மெஸ் அறிமுகமானது. அன்றிலிருந்து இன்றுவரை அங்கு சாப்பிடுவது 2 சப்பாத்திகள்தான். இரண்டு சப்பாத்தி என்று கூறுவேன். ஓனரம்மா அதனைத் திருத்தி ஒரு செட் சப்பாத்தி என ஆர்டர் கொடுப்பார். இன்று ஓனரம்மா கண்களில் கண்ணாடி ஏறிவிட்டது. அவரது மகள்,மகனின் கைகளில் ஓட்டல் வந்துவிட்டது. இப்போது ஒரு செட் சப்பாத்தி சொன்னால் சர்வர் இரண்டு சப்பாத்தியா? என்கிறார். காசு தருகையில் ஓனரம்மாவின் மகளும் இரண்டு சப்பாத்தி முப்பது ரூபாய் என்று சொல்லி பணம் வாங்குகிறார். மாற்றம் முன்னேற்றம் மயிலாப்பூர்!

இஸ்லாமோபோபியா!

படம்
பிரான்சின் இஸ்லாமோபோபியா ! பிரான்ஸ் சேனலில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் வகையறா நிகழ்ச்சியில் மினெல் இப்டிசம் பாடிய லியோனல் கோகனின் Hallelujah   என்ற பாடல் நிகழ்ச்சியின் நடுவர்களை நெகிழ்ச்சியாக கரகோஷங்கள் குவிந்தன .   ஆனால் சமூகவலைதளத்தில் அவரின் கணக்குகளை தேடி எடுத்து தன் இருபதுகளில் பிரான்சில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த அவரின் பதிவுகளை மீண்டும் பதிவிட , உடனே மக்கள் மினெலை நிகழ்ச்சியைவிட்டு நீக்கச்சொல்லி வற்புறுத்த , மினெல் அந்நிகழ்ச்சியிலிருந்து தானாகவே விலகிவிட்டார் . எதிர்ப்புக்கு முக்கியக்காரணம் , அவர் இஸ்லாம் பெண் என்பதோடு தலையில் அணிந்திருந்த ஹைஜப் என்ற இஸ்லாமிய உடையும் முக்கியக் காரணம் . 1989 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமியர்களின் உடைமீதான காழ்ப்பு பிரான்சில் உள்ளது . பாரிசின் க்ரெய்லிலுள்ள மூன்று சிறுமிகள் தலைமீதான உடையை அகற்ற மறுத்ததாக பள்ளியைவிட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர் . மாநில கவுன்சில் உடையை அணிய அனுமதித்தாலும் , கல்வி அமைச்சர் லியோனல் ஜோஸ்பின் இது மாணவர்களுக்குத்தான் மக்களுக்கல்ல என்று கூறினார் . மெல்ல இஸ்லாமியர்களாக இருப்பதே பிர

மனித உடலின் ஆயுள்!

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி கடலில் மனித உடல் சிதைந்து போக எத்தனை நாட்கள் தேவை ? கடல்நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது . குளிர்ந்த நீரில் பாக்டீரியாக்களின் வேகம் குறைவாக இருக்கும் . உடல் தசைகள் அழுகி , மீன்கள் தின்று உடல் காலியாக ஒருவாரம் தேவை . நம் உடலிலுள்ள கொழுப்பு உடல் சிதைவை பெருமளவு தடுக்கிறது . 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பல வாரங்கள் , ஆண்டுகள் கடலில் கிடக்கும் பிணங்களை கண்டெடுத்து காவல்துறை அடையாளமும் கண்டுபிடித்திருக்கின்றனர் . ஆனால் அரேபியக்கடலில் நான்குநாட்களில் உடல் பறவைகளுக்கும் மீன்களுக்கு இரையாகி எலும்புகள் மிஞ்சும் . கடலிலுள்ள அமிலத்தன்மையை பொறுத்து எலும்பும் கரைந்துவிடும் வாய்ப்பு அதிகம் .

பேராசையின் சம்பளம்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் ரா . வேங்கடசாமி லெக்ராஸின் கண்ணில் பட்டது ஹோரியின் கர்மா என்றுதான் சொல்லவேண்டும் . " ஏதாவது ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளாயா ?" என்று கேட்க , ஹோரி தன் பழைய பகையை மறந்து உண்மையை உளறிவிட்டார் . " நியூயார்க்கிலுள்ள வின்ஸ்லோ ஹோட்டலில் பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் " என்று சொல்ல லெக்ராஸின் பிளான் மெகா வெற்றி . உடனே ஹோட்டலுக்கு போன் போட்டு ஹோரி போல பேசி , அதை எடுத்துக்கொள்ள ஆட்கள் வருவார்கள் என்று   கூறி ஓவியங்களை எடுத்து விற்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் லெக்ராஸ் . ஆனால் இந்த உண்மை ஏதும் ஹோரிக்கு உடனே தெரியவரவில்லை . ரோம் , பாரிஸ் என அலைந்து திரிந்த ஹோரியை மீண்டும் லெக்ராஸ் சந்தித்தார் . " நான் உன் ஓவியங்களை விற்றுத்தருகிறேன் . ஆனால் நீ இபிஜா தீவில்தான் வசிக்கவேண்டும் . மாதாமாதம் உன் கணக்கில் கரெக்ட்டாக பணம் வந்து சேரும் " என்று லெக்ராஸ் ஒப்பந்தம் போட , ஹோரியும் ஓகே சொன்னார் . சும்மாயில்லை , ஹோரி வசிக்க புத்தம் புதிய மாளிகையை இபிஜாவில் கட்டிக்கொடுத்தார் லெக்ராஸ் . அப்போது லெக்ராஸின் வலையில் டெக்ஸ

"என் மகனைக் கொன்றவர்கள் மனிதர்களே அல்ல"- இம்தாதுல்லா ரஷீதி

படம்
முத்தாரம் நேர்காணல் இம்தாதுல்லா ரஷீதி , நூரானி மசூதி இமாம் ( அசன்சோல் ) தமிழில் : ச . அன்பரசு மேற்கு வங்கத்தில் அசன்சோல் நகரில் நடைபெற்ற ராமநவமி விழாவின்போது சிப்துல்லா என்ற பத்தாம்வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்டார் . இதற்கு பழிவாங்க துடித்த தன் உறவினர்களை இறந்த சிப்துல்லாவின் தந்தையும் மசூதி இமாமுமான இம்தாதுல்லா ரஷீதி தடுத்துள்ளது நாடெங்கிலும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது . உங்கள் மகனின் படுகொலைக்கு பின்னே யார் உள்ளனர் ? போலீசில் புகார் கொடுத்துள்ளோம் . என் மகனைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே அல்ல . நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் ? எனது மகன் படுகொலை செய்யப்பட்டதும் எங்கள் சமூகத்தில் கடுமையான எதிர்வினை உருவானது . நமாஸ் செய்தபின் அனைவரையும் ஓரிடத்தில் அழைத்து பேசினேன் . யாரேனும் பழிக்குபழி என இறங்கினால் நான் அசன்சோல் நகரை விட்டு சென்றுவிடுவேன் என எச்சரித்ததோடு இஸ்லாம் ஈவிரக்கமற்ற கொலைகளையும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்வதில்லை என அறிவுறுத்தினேன் . கோபத்துடன் இருந்தவர்களில் பெரும்பாலோர் எனது மாணவர்கள்

ஐசியூவில் பொதுத்துறை வங்கிகள்!

படம்
வங்கிகள் பிழைக்குமா ? கடந்தாண்டு அக் . 25 அன்று அரசு பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கவும் , வாராக்கடன் சுமைகளிலிருந் மீட்கவும் 2.11 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தது . உடனே பங்குச்சந்தையில் 5 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் உயர்ந்தன . ஆனால் ஆறுமாதத்திற்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது . " அரசு அறிவித்த இரண்டு லட்சம் கோடி என்பது பட்ஜெட்டில் பத்து சதவிகிதம் . இவ்வளவு தொகையை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வது அரசுக்கு பெரும் சுமை " என்கிறார் ஈடல்வைஸ் குழுமத்தின் தலைவரான ரஷீஸ் ஷா . வங்கிகளின் இழப்பு - 19 ஆயிரம் கோடி (2017 இல் 2,718 வழக்குகளில் ) இழப்பு - 17(21 வங்கிகளில் ) - அக் . டிச .2018 மொத்த வாராக்கடன் - 8.5 லட்சம் கோடி . தள்ளாடும் வங்கிகள் - சென்ட்ரல் வங்கி (18.08%), மகாராஷ்டிரா வங்கி (19.5%), யூகோ வங்கி (20.64%), ஐடிபிஐ வங்கி (24.72%), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (21.95%)

ஸ்டார்ட்அப் மந்திரம்! - புதிய தொடர்

படம்
திலீப் பிரசாந்த் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் வெற்றியா, தோல்வியா, புதிய தொழில்முயற்சிகளை விட அமெரிக்க நகல்களாகவே தொழில்முனைவோர் செயல்படுகின்றனரா? ஸ்டார்ட்அப் முயற்சிகளில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? லட்சியத்தை அனைவருக்குமானதாக மாற்றி வெற்றியைப் பெறுவது எப்படி? ஆகியவற்றை எளிமையான மொழியில் வெற்றியாளர்களின்  கதைகளோடும், டிப்ஸ்களோதும் விளக்க வருகிறது ஸ்டார்ட்அப் மந்திரம். முத்தாரம் இதழில் பங்களித்து வரும் கா.சி.வின்சென்ட் இத்தொடரை எழுதுகிறார். 18.5.2018 இதழ் முதல் வெற்றியை உச்சரிப்போம் - ச.அன்பரசு, உதவி ஆசிரியர், முத்தாரம்

சிக்ஸ்பேக்குக்காக சிரத்தை!

படம்
ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தை ! ஜீன்ஸ் அணிந்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது வரை டாக்டர்கள் டிப்ஸ் சொல்லிவிட்டார்கள் . ஆனால் கேரளாவைச் சேர்ந்த ரஜீத்குமார் பேசியது போல உலகில்   யாருமே யோசிக்கவே முடியாது . அப்படியொரு அதிரடி அறிவியல் பேச்சு ! கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஜீத்குமார் , காசர்கோட்டில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் " ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு திருநங்கை குழந்தைகள் பிறக்கும் என்று பேசியதோடு , நடத்தை சரியில்லாத பெற்றோர்களுக்கு ஆட்டிசம் மற்றும் செரிபெரல் பால்சி பாதிப்பு கொண்ட குழந்தைகள் பிறக்கும் " என்று யோசிக்காமலேயே பேசி மக்களுக்கு செம ஷாக் கொடுத்தார் . மக்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சி ; ரஜீத்குமாருக்கு இது இயல்பான பழகிய பேச்சுதான் . முன்பு இதுபோல திருவனந்தபுரத்தில் பெண்கள் கல்லூரியில் தன் பரிசுத்த கலாசாரக் கருத்துக்களை எடுத்துக்கூற அந்த இடமே பெண் மாணவிகளின் போராட்டத்தால் களேபரமானது . ne'>   2 கல்யாணக்கொலை ! கொலைகள் நடக்க இதுதான் காரணம் என்று இன்று சொன்னால் பலராலும் நம்பவே முடியாது .   அப்படித்தான் ஜார்க்க

ப்ரே பண்ணுங்க இந்தியாவுக்காக!

படம்
கருப்பு தாஜ்மஹால் ! உலகளவில் புகழ்பெற்ற பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காதல் சின்னமான வெண்ணிற பளிங்குகல் தாஜ்மஹால் பலருக்கும் ஷாக் தரும் விதமாக மெல்ல கருப்புநிறமாக மாறிவருகிறது . 2015 ஆம் ஆண்டிலிருந்து தாஜ்மஹால் மீது களிமண் பூசி அதன் மீதான தூசு , கறைகளை நீக்க இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முயற்சித்துவருகிறது . தற்போது பெருகிவரும் பூச்சிகளில் கழிவுகளால் தாஜ்மஹால் தன் வெண்ணிறத்தை இழந்து கருப்பு மற்றும் பச்சை நிறமாக மாறிவருகிறது . " யமுனா ஆற்றின் மாசுபட்ட நீரில் உருவாகும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு இது " என்கிறார் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் வல்லுநரான கே . பட்நாகர் . Goeldichironomous எனும் பூச்சிதான் தாக்குதலின் தளபதி . ஆண்டின் ஐந்து மாதங்களுக்கு தொடர் தாக்குதல் நடத்துவது இவ்வகை பூச்சியினம்தான் . " தாஜ்மஹாலுக்கு வெளியே செயல்பட எங்களுக்கு அனுமதி இல்லை . இப்பிரச்னை பற்றி அரசுக்கு அறிகைக அனுப்பியுள்ளோம் " என்கிறார் பட்நாகர் .  2 காவிமயமாகும் தியாகிகள் ! இந்திய சுதந்திரத்திற்காக ஜாதி , மதம் பார்க்காமல் உழைத்தவர்களை இன்று மதச்

சோலார் பேனலும், தாவரசெல் உணவும் உலகை மாற்றும்!

படம்
தலைவன் இவன் ஒருவன் லிஷ் பெச்ட் , ஸ்டெப் பியர்ஸ் பகதூர் ராம்ஸி விலங்குகளை உணவுக்காக வளர்ப்பது என்பது காடழிப்பு , விலங்குகளின் உடல்நலம் , மீத்தேன் உருவாக்கம் , சுவை , பாரம்பரியம் என பல காரணங்கள் உண்டு . குட்ஃபுட் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் லிஷ் பெச்ட் , விலங்கு இறைச்சிக்கு மாற்றான உணவுகளை தேடி உருவாக்க முயற்சித்து வருகிறார் . தாவரவகைகளில் இறைச்சியின் அளவு சத்துக்கள் நிறைந்த விலை குறைந்த உணவு வகையை உருவாக்க லிஷ் பெச்ட் உழைத்து வருகிறார் . பல்வேறு கடைகளில் இறைச்சிக்கு மாற்றான தாவர உணவுகளை கவனித்து பார்த்து விளம்பர அடிப்படைகளை கற்கிறார் . " உணவுத்துறையில் இது மாபெரும் புரட்சி " என்கிறார் லிஸ் . கலிஃபோர்னியா பல்கலையிலும் , ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையிலும் பிஎஸ் மற்றும் பிஹெச்டி படிப்பை முடித்த லிஸ் , படிக்கும்போது விடுமுறைகளில் பல்வேறு உணவு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர் . " தாவர செல்களின் திசுக்களின் மூலம் இறைச்சி , பால் , முட்டை அல்லாத உணவுகளை உருவாக்க எங்களது இன்ஸ்டிடியூட் குழு , முயற்சித்து வருகிறது " என தெம்பாக பேசுகிறார் லி

சூழல்பிரச்னைகளை தீர்க்க கடிதம் எழுதுங்கள்!- டியர் டுமாரோ கதை!

படம்
தலைவன் இவன் ஒருவன் திரிஷா ஷ்ரூம் , ஜில் குபித் பகதூர் ராம்ஸி ஹார்வர்ட் பல்கலையில் படித்தவர்களான திரிஷா ஷ்ரூம் , ஜில் குபித் இருவரும் பருவநிலை மாறுபாட்டை தங்களின் குழந்தைகளிடம் பேசுவதற்கு முயற்சித்தனர் . அதற்காக தொடங்கியதுதான் டியர் டுமாரோ திட்டம் . " சூழல் பிரச்னைகளைப் பற்றி என் மகளுக்கு புரியவைப்பது குறித்து யோசித்தபோதுதான் டியர் டுமாரோ ஐடியா கிடைத்தது . சிறந்த எதிர்காலத்தை குழந்தைகளுக்கு உருவாக்குவது நமது கடமைதானே !" என்கிறார் ஷ்ரூம் . டியர் டுமாரோ என்பது இணையதளத்தில் கடிதம் , ஒளிப்படங்கள் , வீடியோ என எதனையும் பதிவு செய்து அனுப்பி அசத்தலாம் . தற்போதுவரை 500 கடிதங்கள் இதில் எழுதி பரிமாறப்பட்டுள்ளன . " பருவச்சூழல் மாறுபாட்டை நாம் நம் குழந்தைகளின் கண்களின் வழியாக பார்ப்பது இன்றைய அவசியத்தேவை " என புன்னகையுடன் பேசுகிறார் குபித் . எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பத்தாயிரம் கடிதங்களை அனுப்புவதோடு 2 கோடி மக்களை டியர் டுமாரோவில் சேர்ப்பதே ஷ்ரூம் மற்றும் குபித்தின் இலக்கு . நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் , நிதி திரட்டுவது , ஐடியாக்கள் எழு

வணிகத்திலும் சூழல் காப்பாற்றும் சூழலியலாளர்!

படம்
தலைவன் இவன் ஒருவன் ஆன்டனி டோரஸ் பகதூர் ராம்ஸி அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆன்டனி டோரஸ் , சுற்றுச்சூழலுக்கு ஆதரவான தன்னார்வலர் . நிகரகுவாலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த பெற்றோர் மூலம் வறுமை , வெப்பநிலை உயர்வினால் கடல்நீர் மட்டம் உயர்தல் ஆகியவை ஒன்றிணைந்த ஒரே தீர்வினை எதிர்நோக்கும் பிரச்னைகளை என்பதை விரைவிலேய அடையாளம் கண்டு கொண்டார் ஆன்டனி . சியரா கிளப் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இனக்குழு சார்பாக பல்வேறு பேரணிகளை நடத்தி அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முயற்சித்து வருகின்றனர் .  " சூழல் செயல்பாட்டாளர்கள் தம் பிரச்னைகளை எளிய கதைகளாக்கி மக்களுக்கு புரியும்படி விளக்குவது அவசியம் . தடுமாறாத லட்சியமும் நோக்கமும் இச்செயல்பாட்டுக்கு தேவை " என்கிறார் ஆன்டனி . அனைத்து பிரச்னைகளிலும் வர்க்கம் , பாலினம் , நிறம் ஆகியவை அமெரிக்காவில் இணைந்தே நிற்கின்றன என்பதை ஆன்டனி உணர்ந்துள்ளார் . சியரா கிளப்பின் வழியே வணிகத்தில் மக்கள் , ஊழியர்கள் , சுற்றுச்சூழல் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்க போராடி வருகின்றனர் . 1892 ஆம் ஆண்டு சூழலியலாளர் ஜான் ம்ய

வாக்கியப்பிழையை திருத்திக்கொள்வது எப்படி?-தமிழ்வலம்

படம்
தமிழ்வலம்  - இளங்கோ சென்றவாரம் கேட்ட கேள்வி : அது ஓர் அழகிய கிராமம் ராமன் என்றோர் மானுடன் ’ இந்த இரண்டு வாக்கியங்களில் எதுசரி எதுதவறு ?’ என்று கேட்டிருந்தோம் . உண்மையில் இந்த வாக்கியங்களின் கருத்திலும் எந்தப்பிழையும் இல்லை . ஆனால் , எழுத்தில் பிழையுள்ளது . தமிழில் எந்த இடத்தில் ’ ஒரு ’ என்றசொல்லைப் பயன்படுத்த வேண்டும் . எந்த இடத்தில் ‘ ஓர் ’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு விதிமுறை உள்ளது . பொதுவாக , உயிர் எழுத்துகளில் தொடங்கும் ஒருமைச்சொற்கள் வரும்போது ’ ஓர் ’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள் . ஓர் அரசன் , ஓர் ஆடு , ஓர் இலை போன்றவை உதாரணங்கள் . உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் ஒருமைச் சொற்களுக்கு ’ ஒரு ’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள் . எ . கா : ஒருநாடு , ஒருவிலங்கு . ’ அது ஓர் அழகியகிராமம் ‘ என்பதுசரி . அதுபோலவே ’ ராமன்என்று ஒரு மானுடன் ’ என்பதே சரி .