டாட்டூ மம்மி!
டாட்டூ மம்மி!
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில்
உள்ள பதப்படுத்தப்பட்ட மம்மிக்களின் உடல்களில் காளை, செம்மறி ஆடு உள்ளி விலங்குகளின்
உருவங்கள் டாட்டூவாக வரையப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கி.மு.
3351 -3017 காலகட்டத்தைச் சேர்ந்த மம்மிக்களான இவை, டாட்டூ வரலாற்றையே மாற்றியமைத்துள்ளன.
"5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் டாட்டூ கலாசாரம் இருந்தது என்பது
நம்பமுடியாத ஒன்று" என ஆர்வமாக பேசுகிறார் டேனியல் ஆன்டைன்.
ஆண் மம்மி கெபலெய்ன், ஏறத்தாழ உலகிலேயே மிகச்சிறந்த
முறையில் பதப்படுத்தப்பட்ட உடலைக் கொண்டுள்ளது. முதுகில் குத்தி
கொல்லப்பட்டுள்ள இந்த ஆண் மம்மி, கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும்
மேலாகிறது. காளை மற்றும் ஆடு என்பது வலிமையின் குறியீடு எனவும்,
பெண் மம்மியின் உடலில் எஸ் வடிவ குறியீடுகள் இருந்ததையும் குறிப்பிடுகின்றனர்.
டாட்டூ என்பது பொதுவானது என்றாலும் புதிய கண்டுபிடிப்பாக மிகச்சிறந்த
முறையில் பதப்படுத்தப்பட்ட மம்மிகளில் அவை இடம்பெற்றுள்ளது பற்றி ஆய்வை தொடர்ந்துவருகின்றனர்
ஆராய்ச்சியாளர்கள்.
2
போன் புதுசு!
ASUS ZenFone 5Z
தைவான் தயாரிப்பான
ஆசுஸ் ஜென்ஃபோன்
5z, 4 ஜிபி ராம் நினைவகத்தோடு, ஆண்ட்ராய்ட்
8 ஆபரேட்டிங் சிஸ்டத்தோடு மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. அசப்பில் ஐபோன் அழகில் 6.2 திரை கொண்ட மொபைலில் பேட்டரி
முந்தையை போனைவிட நேர்த்தி, கேலக்ஸி எஸ்9 போனைவிட குறைந்த விலை. தனது ஏஐ மூலம் ஆட்டோமேடிக்காக
வெளிச்சத்தை குறைக்கும் வசதி, 12 எம்பி கேமரா, முன்னே 8 எம்.பி கேமரா,
64 ஜிபி நினைவக வசதி, 3300 mAh பேட்டரி ஆகியவை
இதில் உண்டு.
Nuu Mobile G3
5.5 இன்ச்
திரை, ஃபேஸ் அன்லாக், 3டி ஃபிங்கர்பிரிண்ட்
ஸ்கேனர், 13 எம்பி பிளஸ் 5 எம்பி கேமரா,
4ஜிபி ராம், நீக்கமுடியாத 3000mAh பேட்டரி என்றாலும் நூகட் 7.1 ஓஎஸ்தான் இதிலுள்ளது.
வேகமாக சார்ஜ் ஏறும் திறன், அழகிய டிசைன் ஈர்க்கிறது.
LG V30S ThinQ
ஸ்நாப்டிராகன் 835 சிப்,
6 இன்ச் திரை, 6 ஜிபி ராம், கூகுள் அசிஸ்டென்டோடு இணைந்த ஏஐ போட்டோ எடுப்பது முதல் ஷாப்பிங் செய்வது வரை
திறமையாக வேலை செய்கிறது.
Nokia 8110 4G
1996 மாடல்
நோக்கியா இஸ் பேக்! வழுவழு வாழைப்பழ டிசைன், 2எம்பி கேமரா, பட்டன் கீபேட், ஆண்ட்ராய்ட்
ஓஎஸ்ஸோடு களமிறங்கியுள்ளது நோக்கியா. சில குறிப்பிட்ட ஆப்கள்
மட்டும்தான் இதில் இன்ஸ்டாலாகியுள்ளது.
3
இந்தியாவின் பழமையான ஆயுதப்படை!
- இந்தியாவின் பழமையான ஆயுதப்படையான அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு, எல்லைப்பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு என இரண்டுக்கும் உதவுகிறார்கள். அசாம் ரைஃபிள்ஸின் வயது 183.
- தற்போதையை எண்ணிக்கை 67 ஆயிரம். இப்படைக்கு தேவையான வீரர்களில் 70 சதவிகிதம் இந்திய ராணுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.
- முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களிலும், 1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப்போரிலும் ரத்தம் சிந்தி போராடிய அசகாய வீரர்கள் இவர்களே.
- 1835 ஆம் ஆண்டு தேயிலைத்தோட்டத்திற்கு காவலர்களாக உருவாக்கப்பட்ட படையே அசாம் ரைபிள்சாக பின்னாளில் உருவானது.
- 1988-1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஆபரேஷன் பவன் என்ற பிளானை செயல்படுத்தியதோடு, 1980 ஆம் ஆண்டில் காஷ்மீர் பிரிவினை கிளர்ச்சியையும் ஒடுக்கிய படை இது.
தொகுப்பு: பிரின்ஸ் பெர்னான்டஸ், சுப்ரமியா
நன்றி: முத்தாரம்