இடுகைகள்

தீராநதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே மாதிரியாக கட்டுரை எழுதுவதே போர் அடிக்கும் வேலை!

படம்
  நரசிங்கபுரம் 5/2/2023 அன்பு அன்பரசு சாருக்கு, வணக்கம். புத்தகம் படிப்பதால் நலமாக இருப்பீர்கள் என்றுணர்கிறேன். காலம் கடந்துகொண்டிருக்கிறது. சில கடமைகளை காலாகாலத்திற்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஒன்று அரசு வேலை, மற்றொன்று திருமணம். தற்போது இருக்கும் வேலையில் சிக்கலும் இல்லை. வளர்ச்சியும் இல்லை என்று உணர்கிறேன். எத்தனை நாட்களுக்கு கணக்கு கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க முடியும்?   பல வேலைகளைச் செய்வது திடமாக உள்ளது. சென்ற வாரம் பத்திரிகையில்   கணபதி சாருக்கு கணக்கு டவுட் வந்தது. தீர்வு சொன்னதும் வியப்படைந்தார். அன்றிலிருந்து ‘’வேறெதாச்சும் வேலைக்கு போயா, இங்கே வளர்ச்சி இருக்காதுன்னு’’ பேசிக்கிட்டே இருக்காரு. எப்போதும்! அவர்தான் அண்ணனையும் திட்டி விரட்டியிருப்பார் என்றுணர்ந்தேன். வேலைக்கு இதுபோல் என்றால் திருமணம் மற்றொரு கதை. வீட்டில் எனக்கு திருமணம் செய்ய கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அதிகம் பேசுகிறேனாம். பேச்சில் தத்துவங்களை அடுக்கி பேசுகிறேனாம். குடும்ப பொருளாதாரச் சிக்கலில் திருமணம் செய்ய, தற்போது விருப்பம் இல்லை எனக்கு… செ

சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நூல் எழுதலாம்!

படம்
  எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நரசிங்கபுரம் 3/1/2023   அன்புள்ள அன்பரசு சாருக்கு வணக்கம். வலைப்பூ உங்களை வளமுடன் இருக்கச் செய்யும் என நம்புகிறேன். சென்ற வாரம் நீங்கள் எழுதிய கடிதம் ஊக்கம் தருவதாக இருந்தது. மிக்க நன்றி! நீங்கள் வழிகாட்டியது போல சென்ற வாரம் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். இன்னும் படிக்கத் திறக்கவில்லை. காரணம், தீராநதி மாத இதழ். ஆம். இதழ் முழுவதும் படித்தேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துடனான நேர்காணல் சிறப்பாக இருந்தது. தான் சந்தித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதலாம் என கனடாவில் வாழும் அகதிகளைப் பற்றி கூறியுள்ளார். பல மனிதர்கள் புத்தகங்களை எழுதுகின்றனர். சில மனிதர்கள் புத்தகமாகின்றனர் என்ற கருத்து அவரது எழுத்தில் இருந்தது. அதேபோல, ‘தி மேன் ஹூ சோல்டு இஸ் ஸ்கின்’ என்ற படக்கதையும் சிறப்பு. ஆண்களின் தோலை விபசாரமாக்குவது பற்றிய கதை. 2020இல் படம் வெளியாகியுள்ளது. மாணவர் இதழ், 2ஆம் தேதி முதல் பறக்கிறது. அனைவரும் ஓட ஆரம்பித்து விட்டனர். எனக்கு எழுத்தாளர்கள் பலர் எழுதுகின்றனர். செர்ஜின் என்ற எழுத்தாளருடனான சந்திப்பு ஊக்கம் தருவதாக இருந்தது. மேலும் அவரிடம்தான் அ

உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

படம்
  நரசிங்கபுரம் 9.10.2022   அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது. முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம். மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.   எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன

குமுதத்தை விற்பனை சிகரத்தில் ஏற்றிய எடிட்டர் எஸ்ஏபி! கடிதங்கள்- கதிரவன்

படம்
            மொழி எனும் தீராந்தி அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நேற்று அநதிமழை இதழ் படித்தேன் . அதில் உடல் எடை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர் . உடல் பருமன் என்பதை நாம் எப்படி பார்க்கவேண்டும் , பிறர் அதை எப்படி பார்க்கிறார்கள் என எழுதியிருந்தனர் . இதழை முழுமையாகப் பார்க்கும்போது சுமார்தான் . கழுதை மருத்துவர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவங்கள் வாசிக்க நன்றாக இருந்தது . நேற்று தீராநதி இதழைப் படிக்க நினைத்தேன் . அருகிலிருந்த கடைகள் எங்கிலும் இதழ் தீர்ந்துவிட்டது அல்லது இல்லை என்றே சொன்னார்கள் . பிறகு அலுவலக சகாவிடம் சொல்லி வாங்கினேன் . லாக்டௌனில் நின்றுபோன பத்திரிகை இப்போது மீண்டும் வருகிறது . இந்தியாவில் நிலவும் மொழிப்பிரச்னை பற்றி காந்தி பேசிய உரைகளைக் கொண்ட நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்து , முஸ்லீம் ஒற்றுமைக்காக தேவநாகரி லிபியில் இந்தி படிக்க வலியுறுத்துகிறார் காந்தி . 30 பக்கங்களை படித்திருக்கிறேன் . வெயில் தாக்கம் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது . உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் . நன்றி ! அன்பரசு 8.6.2022 மயிலாப்பூர் -------------

எங்கெங்கோ செல்லும் பயணத்தின் கதை! கடிதங்கள்

படம்
            இனிய தோழர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . வணக்கம் . இதோ இங்கு இன்னும் வெறித்தனமாக பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள் . காற்று மண்டலம் கற்கண்டாக மாறுகிறது என ரேடியோவில் சொல்லுவார்கள் . இங்கு கந்தக மண்டலமாக மாறிவிட்டது . புகை மூட்டத்தில் மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது . தினகரன் , விகடன் , இந்து தவிர்த்த தீபாவளி மலர்களில் ஆன்மிகம் தூக்கலாக இருக்கிறது என தினமலர் நாளிதழ் கூறியிருக்கிறது . இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வேலை செய்துள்ளது மகி்ழ்ச்சியாக உள்ளது . வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கிப் பாருங்கள் . குங்குமத்திலிருந்து சென்றுவிட்ட வெ . நீலகண்டன் , கோகுலவாச நவநீதன் ஆகியோரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்பது உண்மை . தீபாவளி மலர் வேலைகளை முடித்தவுடனே அடுத்து பொங்கல் மலருக்கான வேலைகள் இருக்கின்றன . நீங்கள் ஏதாவது புதிதாக படித்தீர்களா ? நான் மாதம்தோறும் காலச்சுவடு , தீராநதி இதழ்களை படித்துவிடுகிறேன் . இனி புதிய நூல்களை விட பழைய புத்தக கடைகளில் நூல்களை வாங்கலாம் என நினைத்துள்ளேன் . பயணம் ஒன்று போதாது - தீபன் எழுதிய நூல்தான் அண்மையில் ப