இடுகைகள்

தாலிபன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாலிபன் எனும் அடிப்படை மதவாத தீவிரவாத இயக்கம் தோன்றிய வரலாறு!

படம்
  பா ராகவன் எழுத்தாளர் தாலிபன் பா ராகவன்   கிழக்கு பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியரும், இந்நாள் மெட்ராஸ் பேப்பர் இணைய பத்திரிகையின் முதன்மை ஆசிரியருமான பா ரா எழுதிய நூல். நாவல்களை எழுதினாலும் கூட கட்டுரை நூல்களை திறம்பட நயமாக எழுதுவதில் சோடை போகாத எழுத்தாளர். வளரும் எழுத்தாளர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து புதிய எழுத்தாளர்களை உருவாக்கி வருகிறார். அதில் அவருக்கு வருமான நலம் இருந்தாலும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. கணபதி துதி முடிந்தது. நூலைப் பற்றி பார்ப்போமா? ஆப்கனிஸ்தான் பற்றிய நூலை படித்து முடிக்கும்போது, அங்கு மீண்டும் தாலிபன் ஆட்சி தொடங்கியிருக்கிறது. அதன் நேரடி விளைவாக மக்கள் துன்பமுற தொடங்கியிருக்கிறார்கள். இந்த அவல வாழ்க்கை ஏன் என பெண்கள் தற்கொலை செய்துகொண்டு வருகிறார்கள். மரணம் மிகப்பெரும் விடுதலை அல்லவா? ஆப்கனிஸ்தானில் ஓபியம் பயிரிட்டு அதை விற்பதன் மூலம் அந்த நாட்டிற்கு பெருமளவு பணம் கிடைக்கிறது. ஆனால் இந்த வியாபாரத்தால் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானுக்கு லாபம் என்றாலும் போதைப்பொருள் சார்ந்த நிறைய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இந்தியாவுக்கு பெரும் தலைவலி.   த

பெண்களை கல்வி கற்க விடாமல் முடக்கும் தாலிபன்கள்-அதிகரிக்கும் இளம்பெண்கள் தற்கொலை

படம்
  தற்கொலை செய்துகொள்வதே மேல் – ஆப்கன் தற்கொலை விவகாரம்   மோசமான மதவாத, தீவிரவாத சர்வாதிகாரத்தை மக்கள் அறியாமையால் தேர்ந்தெடுத்தாலும் கூட விளைவு ஒன்றுதான். மக்கள் மெல்ல சாவார்கள். அதுபோல தீயசக்தி கொண்ட அரசியல் தலைமை ஏற்பாடுகளை செய்யும். மக்களும் அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாதபடி வாழ்வார்கள். அரசிடம் காசு வாங்கி   பிழைக்கும் ஊடகங்கள், அரசின் தவறுகளை கேள்விகேட்கும் செயல்பாட்டாளர்களை அவதூறு செய்து செய்திகளை வெளியிட்டு ஊடக தர்மத்தை காப்பாற்றுவார்கள். 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு   வந்தபிறகு நடக்கும் அலங்கோலம் இதுதான். முழுக்க மத அடிப்படையிலான ஆட்சி என்பதால், கற்காலத்திற்கே நாட்டை கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.   இந்தியாவின் ஆதரவில் அமெரிக்க படைகள் இருந்தபோது பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. வேலைக்கு சென்றார்கள். சுய தொழில்களை தொடங்கினர். ஆனால், இன்று மேற்சொன்ன அனைத்தையும் ஆப்கன் ஆட்சியாளர்கள் தடை செய்துவிட்டனர். பெண்களை போகப்பொருளாக கருதுவதால், தொடக்கப்பள்ளிக்கு மட்டும் அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை செய்ய வைத்து உறவினர்களுக்கு திருமணம் செய்து வைத்த

சிறந்த தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு! - நூல் அறிமுகம்

படம்
  புத்தகம் புதுசு! தி கிரேட்டஸ்ட் தமிழ் ஸ்டோரிஸ்  எவர் டோல்டு தொகுப்பு சுஜாதா விஜயராகவன் மினி கிருஷ்ணன் ஆலெப் 699 கடந்த நூற்றாண்டில் தொடங்கி நடப்பு ஆண்டு வரையிலான சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. பாரதியார், சா.கந்தசாமி, பாமா, பெருமாள் முருகன், பூமணி ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன.  பெட்டர் ஆப் டெட்  லீ சைல்ட் - ஆண்ட்ரூ சைல்ட் பாந்தம் பிரஸ் 699 ஜேக் ரீச்சரை மையமாக கொண்ட சாகச நாவல். இதில் அரிசோனாவில் விபத்துக்குள்ளான காரிலிருந்து எழும் ரீச்சர், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து சூழும் பிரச்னைகளிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே கதை. கூடவே ஃஎப்பிஐ ஏஜெண்ட் மிச்செலா ஃபென்டன் தனது சகோதரியை தேடிக்கொண்டிருக்கிறார்.  தி ஷாடோஸ் ஆப் மென் ஆபிர் முகர்ஜி ஹார்வில் செக்கர்  699 1923ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெறும் கதை. ஆங்கிலேயர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இந்து தத்துவவாதி ஒருவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரைக் கொன்றது யார் என மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஊரில் உருவாகிறது. அதனை தடுக்க குற்றவாளியை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதுதான் கதை.   இந்தியா அண்ட் தி பங்களாதேஷ் லிபரேஷன

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் அரசியல் விளையாட்டு

படம்
  அரசியல் விளையாட்டு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெரும்பாலான மக்கள் பழங்குடிகள் என்பதால் போர் என்பது எப்போதும் அங்கு நின்றது கிடையாது. நிற்கவும் போவதில்லை. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா என அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானை வளைத்து போட முயன்றுகொண்டே இருக்கின்றன.இதனை நேரடியாக, மறைமுகமாக என இரண்டு வகையாகவும் கூறலாம்.  இப்போது அதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.  அமெரிக்கா அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை இனி அவர்களின் வரிப்பணம் போருக்கு என்று செலவிடப்படாது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது சரியில்லை. இந்த வகையில் அமெரிக்க அதிபர், அடுத்த ஆபரேஷன் நமக்குத்தான் என்று சொல்லி பின்வாங்கியது நல்ல விஷயம்தான். அமெரிக்காவை தளமாக கொண்டு தீவிரவாதிகள் இயங்கிய நிலை இனி இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. இதனை ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகளே கூட நம்பாது. உலகின் சூப்பர் போலீஸ் நாடான அமெரிக்கா, இதனை நம்புகிறது. அதோடு அதன் பெருமைமிக்க அந்தஸ்து இருபது ஆண்டு போரில் தோற்று பின்வாங்கியதோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்லேடனை அழித்தது மட்டுமே சாதனை என அமெரிக்கா சொல்லிக்கொள்ளலாம்.

வன்முறையைக் கொண்டாடும் தீவிரவாத இயக்கங்கள்

படம்
  தாலிபன் ஆப்கானிஸ்தானை ஆளுகின்ற தீவிரவாதக் குழு. மதநம்பிக்கைப்படி ஆட்சி நடத்துபவர்கள். இவர்களுக்கு எதிராக இருந்த பஞ்ஷிர் பகுதியையும் நவீன ஆயுதங்களோடு, ராணுவப் பயிற்சியோடு கையகப்படுத்திவிட்டனர்.  இவர்களை ஊக்குவிப்பது பாகிஸ்தான் நாடு. தாலிபன் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் சுலபமாக சந்திக்கலாம்.  ஹபிபுல்லா அகுந்த்ஸாடா, மொகமது ஹசன் அகுந்த், அப்துல் கானி பாரதர் ஆகியோர் தாலிபன் அமைப்பின் முக்கியமான தலைவர்கள்.  ஹக்கானி குழு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற குழு. இப்போது தாலிபனில் முக்கியமான அங்கம்.  தாலிபன், அல்கொய்தா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களையும் இக்குழு ஒருங்கிணைக்கிறது.  இதனை தொடங்கியவர் ஜலாலுதீன் ஹக்கானி. அவரின் மகன் சிராஜூதீன் இக்குழுவின் முக்கியமான தலைவர். புதிய தாலிபன் அரசில் இவரும் முக்கியமான அங்கம். அதாவது அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.  வடக்கு கூட்டணி தாலிபன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கூட்டணி. பஸ்துன் இஸ்லாமிய கூட்டணி. எப்போதும் தாலிபன்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். பஞ்சிர் பள்ளத்தாக்கிலிருந்து தாலிபன்களை எதிர்க்கிறார்கள். இவர்களை தாக்கி பகுதிய

அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலின்போது பிரபலமாக இருந்த மனிதர்கள்!

படம்
  செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பங்கேற்று முக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்பு இது.  மேற்படி அமெரிக்க தாக்குதல் நடந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பிறகு அமெரிக்க மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து தாக்கி ஜனநாயகத்தை மலர வைக்க முயன்றாக கூறியது. பெரும்பாலும் அனைத்து முயற்சிகளிலும் ஆயுதங்களை விற்பனை செய்தது தவிர வேறு எந்த நன்மைகளும் இடைக்கவில்லை.  ஜார் ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்காவில் வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்தபோது, இரண்டாம் வகுப்பு மாணவர்ளுக்கு ஆடுபற்றிய கதையை வாசித்துக்கொண்டிருந்தார். புளோரிடாவில் அவர் மாணவர்களுடன் இருந்தபோது தாக்குதல் செய்திகள் கூறப்பட்டன. அப்போது அவரின் முகம் வெளிறிப்போய் இருந்த புகைப்படம், இணையத்தில் வைரலானது. அப்போது தொடங்கிய முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பார்க்கும் பார்வை இன்றுவரை மாறவில்லை. ஆப்கானிஸ்தான் விவகாரத்தை இன்றுவரையும் பின்தொடர்வதாக கூறிவருகிறார்.  காண்டலிசா ரைஸ்  இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஹூவர் அமைப்பில் இயக்குநராக உள்ளார். புஷ் ஆட்சியில் இருந்தபோது என்எஸ்ஏ அமைப்பில் ரைஸ் வே

தாலிபன்கள் பற்றிய சிறு குறிப்பு!

படம்
  தாலிபன்கள் சிறு குறிப்பு 1866 பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, பல்வேறு மத, இன குழு மக்கள் கசக்கி பிழியப்பட்டு வந்தனர். முஸ்லீம் மக்களை இதிலிருந்து காப்பாற்றவென தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. பழமைவாத கொள்கைகளை தனது பின்னணியில் கொண்டு பிற இந்து, கிறிஸ்தவ அமைப்புகளை போல இயங்கியது. உத்தரப்பிரதேசத்தில் டியோபேண்ட் என்ற இடத்தில் அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பு தொடங்கப்பட்டது.  1919 தியோபேண்ட் முறையில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் பயிற்சி பெறத் தொடங்கினர். இவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  1977 பாகிஸ்தானில் தியோபேண்ட் முறையில் பயிற்சி செய்தவர்கள் இருக்கிறார்கள் என தகவல் அறியப்பட்டது. அதிபர் முகமது ஜியா உல் ஹக் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.  1980 பாகிஸ்தானிய தியோபண்டி ஆட்கள், இஸ்லாமிய சட்டங்களை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள். இவர்கள்தான் ஆப்கானிய ராணுவம, காஷ்மீரில் தாக்குதல் நடத்துபவர்களாக மாறினர்.  சவுதி அரேபியா, ஷியா மக்கள் அதிகம் உள்ள இரான் நாட்டில் சன்னி மக்களைக் கொண்டு சுவர் ஒன

தெருக்களில் பெண்களை தாலிபன்கள் அடிப்பது உறுதி! - ஸார்கோனா ராஸா

படம்
            ஸார்கோனா ராஸா பிரிட்டிஸ் ஆப்கன் பெண்கள் சங்கம் காந்தகாரில் பிறந்தவரான ராஸா , 1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இங்கிலாந்திற்கு அடைக்கலம் தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்துவிட்டார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கி ஆப்கானிஸ்தானுக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார் . ஆப்கனிலுள்ள பெண்களின் நிலை இனி என்னவாகும் என்று அவரிடம் பேசினோம் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள் பெண்கள் விவகாரத்தில் முன்னர் நடந்துகொண்டது போல கடுமையாக நடந்துகொள்ளவில்லையே ? நீங்கள் இதனை நம்புகிறீர்களா ?   முன்னர் தாலிபன்கள் நடந்துகொண்டதை விட இப்போது மென்மையாக பெண்கள் விவகாரத்தில் நடந்துகொள்வதாக நான் நம்பவில்லை . காரணம் இன்று ஊடகங்கள் நிறைய வந்துவிட்டன . அவர்களிடம் நேர்மறையாக தங்களை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது . முஸ்லீம் நாடுகளில் பெ்ணகள் தலையை மறைக்காமல் டிவியில் வந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள் . ஆண்களும் , பெண்களும் கலந்து படி்த்த பல்கலைக்கழகங்ளில் பெண்க்ள் மட்டும் தனியாக படிக்கவேண்டும் என தாலிபன்கள் கூறுவார்கள் . தாலிபன்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் பெண்கள் தலையை மறைக்காமல

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது யாருக்கு சாதகம்?

படம்
                ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறு்ம் அமெரிக்கா அமெரிக்க அதிபரான பைடன் , ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியுடன் முழுமையாக விலகும் என்று அறிவித்திருக்கிறார் . அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் இருபதாவது ஆண்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . டிரம்ப் ஆட்சியின்போது ஆப்கனில் தாலிபன்களுடன் ஆட்சியைப் பகிர்வது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றது . அதில் அல்கொய்தா உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டன . ஆனால் பைடனின் அதிகாரத்தில் இதுபோல எந்த விதிமுறைகளும் கிடையாது . . ஆப்கனில் 3500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர் . கூடுதலாக நேட்டோ படையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் உள்ளனர் . விரைவில் இவர்களும் அங்கிருந்து கிளம்பிவிட வாய்ப்புள்ளது . அதற்கான அறிவிப்பும் விரைவில் அறிவிக்கப்படலாம் . அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் , தாலிபன்கள் ஆப்கானில் பலம் பெறுவார்கள் . ஆப்கானிஸ்தானில் 325 மாவட்டங்கள் உள்ளன . அதில் தாலிபன்கள் 76 மாவட்டங்களை ஆள்கிறார்கள் சதவீத அளவில் இதனை 19 சதவீதம் எனலாம் .