ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது யாருக்கு சாதகம்?
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறு்ம் அமெரிக்கா
அமெரிக்க அதிபரான பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியுடன் முழுமையாக விலகும் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் இருபதாவது ஆண்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
டிரம்ப் ஆட்சியின்போது ஆப்கனில் தாலிபன்களுடன் ஆட்சியைப் பகிர்வது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் அல்கொய்தா உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டன. ஆனால் பைடனின் அதிகாரத்தில் இதுபோல எந்த விதிமுறைகளும் கிடையாது. . ஆப்கனில் 3500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். கூடுதலாக நேட்டோ படையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் உள்ளனர். விரைவில் இவர்களும் அங்கிருந்து கிளம்பிவிட வாய்ப்புள்ளது. அதற்கான அறிவிப்பும் விரைவில் அறிவிக்கப்படலாம்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால், தாலிபன்கள் ஆப்கானில் பலம் பெறுவார்கள். ஆப்கானிஸ்தானில் 325 மாவட்டங்கள் உள்ளன. அதில் தாலிபன்கள் 76 மாவட்டங்களை ஆள்கிறார்கள் சதவீத அளவில் இதனை 19 சதவீதம் எனலாம். அரசு மொத்த மாவட்டங்களில் 32 சதவீதம் ஆள்கிறது. அதாவது 127 மாவட்டங்களை நிர்வகிக்கிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து இங்கு ்தாலிபன்களின் பலம் அதிகரித்து வருகிறது. இதே ஆண்டுதான் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்ய வந்தன.
அதிபர் அஸ்ரப் கானி இதுபற்றி வெளியிட்ட ட்வீட்டில், அமெரிக்காவின் முடிவை மதிக்கிறோம். அவர்களின் உதவியுடன் ஆட்சி மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று கூறியிருக்கிறார். பதிவு பெருந்தன்மையாக எழுதப்பட்டிருந்தாலும் கனியும் அவரது நிர்வாக குழுவும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடிய போராட்டம் அனைத்தும் பயனில்லாமல் போய்விட்டதாகவே சொல்லவேண்டும்.
தாலிபான்கள் தங்களுக்கான மற்றொரு வீடாக வே பாகிஸ்தானை கருதி வந்ததனர். . இந்திய அரசைப் பொறுத்தவரை அமெரிக்காவின் விலகல் பாதகமாகவே இருக்கும். . பாக். கிற்கு இது பெரிய லாபம். அவர்கள் தாலிபன்களுக்கு புகலிடம் அளித்து ராணுவ உதவிகள் வரை வழங்கி வந்தனர். கனி, கர்சாய் ஆகிய ஆப்கானிய அரசுகளுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. ஆனால் இனிமேல் அதுபோல ஒரு உறவை தாலிபன்களிடம் தொடரமுடியுமா என்பது சந்தேகம்தான். ஆப்கன் பக்கம் பாதுகாப்பை பலப்படுத்தி லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொகமத் ஆகிய இயக்கங்களை கவனமாக கண்காணிக்கும் சுமையும் உள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானில் ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் நாடாக பாகிஸ்தான் இருக்கும். நண்பரை நோயுறும்போது தோளில் சுமக்கும் சுமை பாகிஸ்தானுக்கு உண்டு. அங்கு முதல் ஆப்கன் போர் தொடங்கி ஏராளமான அகதிகள் இடம்பெயர்ந்தனர். அதுபோல சிக்கலான விஷயங்கள் நடக்கும்போது , பாகிஸ்தானுக்கு மீண்டும் அகதிகள் இடம்பெயர்வார்கள். அப்படி நடந்தால் அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமாகும் வாய்ப்புள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
நிருபமா சுப்பிரமணியன்
கருத்துகள்
கருத்துரையிடுக