தூக்குத்தண்ட்னைக் கைதியின் பழிவாங்கும் படலத்திற்கு உதவும் காக்கை சித்தர்! சிவரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

 

 

 

 

 

 

 

 

சிவரகசியம்

 https://dheivegam.com/wp-content/uploads/2019/06/palani-temple-1024x576.jpeg


இந்திரா சௌந்தர்ராஜன்


பூமிக்காத்தான் பட்டியில் கோவிலுக்குள் அமைந்திருக்கிறது ஊர். இங்கு பௌர்ணமி தோறும் சித்தர்கள் பூஜை செய்து வருகிறார்கள் ரசமணீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பால் ஊரில் மழை வளம் குறைவதில்லை. தினமும் மழை பெய்கிறது. அங்குள்ள சிவ வனத்தில் சித்தர்கள் வாழ்கின்றனர். இந்தசெய்தி காண்டீபன் என்ற பத்திரிகையாளர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு கூற, வில்சன் எனும் ஆராய்ச்சியாளர் அங்கு வருகிறார். இதனால் நேரும் விளைவுகள்தான் கதை.


இதன் உப கதைகளாக தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி ராமண்ணா, பூமிக்காத்தான் பட்டியில் தொழிற்சாலை தொடங்கும் அர்ஜூன் ஆகியோர் கதை வருகிறது.


தூக்குதண்டனை கைதி கதை மட்டுமே சுவாரசியமாக உள்ளது. மற்ற இரு கதைகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. நாவலின் இன்னொரு பலவீனம். கதையில் தொடக்கத்தில் கூறும் தகவல்கள். சித்தர்கள் பற்றிய தகவல்களை ஆசிரியர் கூற நினைத்திருக்கிறார். அதற்காக இன்னொரு புத்தகம் எழுவதும் அளவுக்கு தகவல்களை குவிப்பார் என்பதை வாசகரும் எதிர்பார்த்திருக்கமுடியாது. ஒருகட்டத்தில் இந்த தகவல்களைப் படித்தவிட்டால் நாவலைப் படிக்கும் ஆர்வமே குன்றிவிடுகிறது. அத்தனை தகவல்கள். … தொடக்கத்தில் சுவாரசியமாக இருக்கின்றனதான். பின்னர் அயர்ச்சி ஏற்படுத்துகின்றன.

https://www.hinduwebsite.org/symbolism/images/lingam-temple.jpg

வாசகரின் கேள்விகளைக் கூட நூலின் பின்பகுதியில் பிரசுரித்திருக்கலாம். நாவலை படிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன. ராமாண்ணா, தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்கிறார். அப்போது நடக்கும் தள்ளுமுள்ளுவில் சிலர் கொல்லப்பட தானே குற்றத்தை ஏற்கிறார். தண்டனை பெறுகிறார். அமரேஷ் என்ற நிஜ குற்றவாளியை எப்படி பழிவாங்குகிறார் என்று பார்த்தால் எந்த திருப்பமும் இல்லை. பெருமாள்துறை செய்தியைப் பார்க்கிறார். தகவல் சொல்லுகிறார். உடனே அமரேஷ் கைது செய்யப்படுகிறார். ஜோதிடர் ரங்கசாமி பாத்திரம் கூட தெரிந்த விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லுவது போல அமைந்துவிட்டது துரதிர்ஷ்டம்தான்.


சிதம்பர ரகசியமும் சிவ ரகசியமும் ஒன்றுமில்லை என நாவலில் ஓரிடத்தில் கூறுகிறார் ஆசிரியர். நாவலைப்படித்ததும் வாசகருக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.


கலங்கிய சித்தம்


கோமாளிமேடை டீம்





கருத்துகள்