இந்திய மக்கள் இறப்பதற்கு அரசின் செயலற்ற தன்மைதான் காரணம்! - ஶ்ரீனிவாஸ் பி.வி. இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர்

 

 

 

 https://gumlet.assettype.com/nationwide%2F2021-04%2F34dd8731-f343-4443-b53b-c752c06e47f5%2Fbv_sixteen_nine.jpeg?rect=0%2C0%2C1200%2C675&auto=format%2Ccompress&fit=max

 

 

கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அரசு முழுக்கவே செயலிழந்துவிட்டதாக என நினைக்கத்தோன்றும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது. பேஸ்புக்கில் மோடிபதவிவிலகு என எழுதும் அளவுக்கு மக்கள் விரக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள். கோபம் கொள்வது சரி, செயல்வேகம் கொண்ட மனிதர்கள் இந்தியாவில் வேறு யாரும் இல்லையா? என்றால் இருக்கிறார்கள் என உற்சாகமாக கூறலாம். இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஶ்ரீனிவாஸ் பிவி, கட்சி பேதமில்லாமல் பலருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார்.


நீங்கள் என்ன விதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறீர்கள்?


நாங்கள் எங்களை தொடர்புகொள்ளும் நோயாளிகளிடம் பேசிவருகிறோம். அவர்களை தனிமைப்படுத்தவும், தேவையான தன்னார்வலர்களாக உள்ள மருத்துவர்களின் உதவிகளைப் பெற உதவுகிறோம். நோயிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய பட்டியலைப் பெற்று அவர்களிடமிருந்து பிறருக்கு பிளாஸ்மா பெற உதவுகிறோம். மேலும் மக்களுக்கு மருத்துவமனை படுக்கை, ஆக்சிஜன் சிலி்ண்டர்களையும் வழங்குகிறோம். நாங்கள் ஆக்சிஜன் வழங்குபவர்களோடு தொடர்பில் இருக்கிறோம் என்வே, ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற முடியாத ஏழைகளுக்கு உதவ முடிகிறது.


டெல்லி அரசு தனது மருத்துவமனையில் உள்ள படுக்கை விவரங்களை கூறியுள்ளது. அதில் கூறியுள்ள விவரங்கள் தோராயமானவை. எனவே நாங்கள் உள்ளூர் மருத்துவமனையிலுள்ள படுக்கை விவரங்களைப்பற்றி பட்டியல் தயாரித்துள்ளோம். உணவு தேவைப்படுபவர்களுக்கான சமையலறை வசதிகளை உருவாக்கி உணவுகளை வழங்கி வருகிறோம். மேலும் தடுப்பூசிகளை மக்கள் பதிவு செய்து பெறுவதற்கு உதவுகிறோம். இந்த வேலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மும்பை, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, கர்னாடகா, சத்தீஸ்கர் , டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள்.




https://static.independent.co.uk/2021/04/30/14/WhatsApp%20Image%202021-04-30%20at%202.15.04%20PM.jpeg?width=982&height=726&auto=webp&quality=75 

 

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு என்பதால் இது அரசியல் பிரச்னையாக கருதப்படுமா?


இந்த நேரத்தில் அரசியலுக்கு நேரமில்லை. இப்போது அரசியல் லாபம் பார்க்காமல் உதவுவதே முக்கியம். இது ராகுல்காந்தி எங்களுக்கு கூறிய வழி. இத்தனை ஆண்டுகளில் நாங்கள் செய்துவந்த பல்வேறு பணிகள் மக்களுக்கு தெரியவில்லை. இப்போதுதான் தெரியவருகிறது. உத்தர்காண்ட் வெள்ளம், கேரளா, மத்தியப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். குறிப்பிட்ட மாநிலம் என்பதால் எங்களைப்பற்றிய செய்தி வெளியே வரவில்லை. ஆனால் இப்போது பெருந்தொற்று காலம் என்பதால் எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பல லட்சம் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு நாங்கள் உதவியுள்ளோம். உலகில் வேறு எந்த அமைப்பும் இதுபோன்ற பணிகளை செய்யவில்லை. நாங்கள் இதுவரை செய்த விஷயங்களில் 5 சதவீதம் மட்டுமே மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஏராளமான செயல்களை நாங்கள் அமைதியாக செய்துவருகிறோம்.


சமூகவலைத்தளம் இப்பணிகளில் எப்படி உதவுகிறது?


அவசரநிலையில் உள்ள நோயாளிகள் பற்றி நாங்கள் சமூக வலைத்தளத்தில் அறிந்து உதவுகிறோம். பெரும்பாலான உதவிகள் வாட்ஸ்அப் மற்றும் தனிப்பட்ட தொடர்பு மூலமே நடைபெறுகிறது. நான் தேசியத்தலைவர் என்பதால் பல்வேறு விஷயங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடவேண்டியுள்ளது. பல்வேறு மாநில தலைவர்கள் தன்னார்வலர்கள் இணைந்து செய்யும் கூட்டு உழைப்பால் உதவிகள் சாத்தியமாகியுள்ளது. எங்களது அமைப்பு முகம் தெரியாத, சுயநலமற்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களைக் கொண்டது.

https://im.indiatimes.in/content/2021/Apr/2_607d2a387cde5.jpg


அடிப்படை விஷயங்களுக்கே அரசு தடுமாறி வரும் நிலையில் எப்படி நீங்கள் உதவிகளை செய்து வருகிறீர்கள்?


அரசு எதிர்காலத்தை சிந்தித்து செயல்படாதபோது, நிலைமை மோசமாகத்தான் செல்லும். அடிப்படை கட்டமைப்பு இருந்தால் வேலைகளை எளிதாக செய்யமுடியும். சில சூழலில் எங்கள் ஊழியர்கள் கூட கண்ணீர் விட்டிருக்கிறார்கள். ஆக்சிஜன் தயாரிப்பில் முன்னணி நாடாக இருந்தும் கூட மக்களுக்கு தேவையானபோது அதனை வழங்க முடியவில்லை. இந்த நேரத்தில் இதனை சரியான வணிக வாய்ப்பாக கருதும் ஆட்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். எங்களை அணுகும் அனைவருக்கும் உதவி செய்யமுடியாத நிலையில் இருப்பது வருத்தமாக உள்ளது.


https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/bodyeditor/202104/IMG20210418123932-1200x3456.jpg?ufc04ITzewLSuI_rYx9lwQ5hldT8eNXG

பெருந்தொற்று காலத்தை எப்படி முன்னமே கணித்தீர்கள்?


ராகுல்காந்தி இதுபற்றி கடந்த ஆண்டே எங்களை எச்சரிக்கை செய்திருந்தார். நடப்பு ஆண்டில் அவர் விவசாயிகள், வேலையின்மை, பெருந்தொற்று ஆகிய பிரச்னைகள் எழும் என்று கூறியிருந்தார். எனவே அனைத்து இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களும் எச்சரிக்கையாக இருந்தோம். இன்று மரணிக்கும் மக்கள் நோய்த்தொற்றால் இறக்கவில்லை. அவர்ளுக்கு தேவையான படுக்கை, மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தான் இறக்கிறார்கள். நோயாளிகளுக்கு தேவைப்படும்போது கிடைக்காத உதவி பிறரையும் அச்சுறுத்துகிறது. இது சமூகம் முழுக்க அச்சமாக மாறுகிறது. அரசுக்கும், மருத்துவமனைகளுக்கும் பெரிய தகவல்தொடர்பு இல்லாததே நோயாளிகள் இத்தனைபேர் இறப்பதற்கு காரணம்.


டைம்ஸ் ஆப் இந்தியா


சுபோத்




கருத்துகள்