டிண்டர் காதலனுடன் ஜல்சா செய்யும் இரவில் தீவிரவாதி வீட்டில் நுழைந்தால்.... இந்து கீ ஜவானி -
இந்து கீ ஜவானி
இந்துவுக்கு காதல் வேண்டும். அதோடு அதுதரும் சந்தோஷம் அனைத்தும் வேண்டும். அதற்காக டிண்டர் ஆப்பில் காதலனைத் தேடுகிறாள். அப்படி கிடைக்கும் ஒருவனோடு செக்ஸ் வைத்துக்கொள்ள வீட்டுக்கு அழைக்கிறாள். அப்போது நேரும் குளறுபடிகள்தான் கதை.
படத்தில் ஒரே உருப்படியான விஷயம் கியரா அத்வானிதான். சிறுநகரில் வாழும் பெண். அவளுக்கு காதல் பிடிக்கும்தான். ஆனால் உண்மையான காதலை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை. இதற்காக அவள் தோழி சோனலை தேடுகிறாள். அவளுக்கு சூரியனுக்கு கீழுள்ள அத்தனை சமாச்சாரங்களும் தெரியும். சோனலைப் பொறுத்தவரை செக்ஸ்தான் காதலுக்கான சத்தியம். அதைச் செய்தால்தான் காதலே கான்க்ரீட்டாக உறுதியாக மாறும் என்கிறாள். அவளின் யோசனைப்படி இந்து என்ன செய்கிறாள் என்பதுதான் இறுதிப்பகுதி.
படத்தின் டைட்டில் கார்ட்டிலேயே அனிமேஷன் வடிவில் கதையை சொல்லிவிடுகிறார்கள். அதற்குப்பிறகு அதையே எதற்கு இரண்டரை மணிநேரம் பார்க்கவேண்டும் என்பது புரியவில்லை.
இந்து வாழும் கவி நகரில் உள்ள அனைத்து ஆண்களுமே அவளின் உடம்பின் மேல் மையல் கொண்டவர்கள்தான். எப்படியேனும் அவளை அனுபவித்துவிட வேண்டும் என துடிக்கிறார்கள். இந்த காட்சிகள் அப்படியே மெலினா படத்தை நினைவுபடுத்துகிறது. ஏன் அப்படி என்றால் அதற்கு எந்த பதிலும் வருவதில்லை.
படத்தில் வரும் சமர் பாகிஸ்தான் காரர். அவர் அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பதற்கான எந்த வாய்ப்பும் படத்தில் இல்லை. இடையில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதி கிளைக்கதை படத்தின் தொய்வை தூக்கி நிறுத்த இம்மியளவும் உதவவில்லை.
இந்துவும் சமரும் வீட்டுக்குள் பேசும் எந்த நாடு பெரியது எனும் விவாதம் எரிச்சல் ஏற்படுத்துகிறது.
உணவை விநியோகம் செய்யவரும் ஜெகதீஷ்குமார் என்பவர் எப்படி உணவை டெலிவரி செய்யாமல் அவ்வளவு நேரம் அங்கேயே இருக்கிறார், இந்துவுக்கு சமர் தீவிரவாதி என தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்காமல் இருப்பது ஏன் ? என பல்வேறு கேள்விகளை படம் முடியும் வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம். .
சூரமொக்கை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக