மக்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள்தான் எங்களை ஊழல்வாதி என விமர்சிக்கிறார்கள்! - யஷ்வந்த் ஜாதவ், சிவசேனா

 

 

 

 

 

 

यशवंत जाधवांची हॅट्रिक, देशातील सर्वात श्रीमंत महापालिकेच्या तिजोरीच्या ...

 

 

 

யஷ்வந்த் ஜாதவ்

சிவசேனா தலைவர்

மும்பை முனிசிபாலிட்டி நிலைக்குழு தலைவர்.



நீங்கள் மக்களுக்கு பைகளை கொடுத்து ஊழல் செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்களே?


நாங்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்.ம எங்கள் மீது குறைசொல்பவர்கள் பணக்கார ர்களின் பக்கம் நிற்கிறார்கள். நாங்கள் ஏழைகளின் பக்கம் நிற்கிறோம். அதுதான் இங்கு வித்தியாசமாக உள்ளது. எனது தொகுதி மட்டுமல்ல தேவையான மக்களுக்கு நாங்கள் உதவிகளை வழங்கியபடியே இருக்கிறோம்.


பதினைந்து ஆண்டுகளாக முனிசிபாலிட்டி தலைமைப் பதவியில் இருப்பது சிவசேனா கட்சிதான் ஆனாலும் கூட வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லையே ?


நாங்கள் இதற்கான கட்டமைப்பை உருவாக்க முனைந்து வருகிறோம். நிலத்திற்கு கீழே நீர்த்தொட்டி ஒன்றையும் கட்டி வருகிறோம். அடுத்து வரும் பருவமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படாது என நம்புகிறோம்.


பலரும் நீங்கள் முடிவை எடுக்கும்போது உறுப்பினர்களுடன் கலந்து பேசவில்லை என்று புகார் கூறியுள்ளனரே?


பெருந்தொற்று காரணமாக வேகமாக செயலாற்ற வேண்டிய சூ்ழ்நிலை. பணத்தை நேரடியாக நிர்வாகம் செய்யும் அதிகாரம் முனிசிபாலிட்டிக்கு கிடைத்தது. . நாங்கள் அதனை உடனே செயல்படுத்தி மக்களைக் காப்பாற்ற முயன்று வருகிறோம். முனிசிபாலிட்டி கமிஷனருக்கு தேவையான முடிவுகளை எடுக்க அதிகாரம் உண்டு. நாங்கள் எங்கள் செயல்பாட்டில் தவறு செய்திருந்தால் தாராளமாக விமர்சனங்களை ஏற்கிறோம். அப்படி எந்த தவறும் நடக்கவில்லையென்று நினைக்கிறேன்.


இரண்டாவது அலையையும் நாங்கள் வெற்றிகரமாக சமாளித்து வருகிறோம். இதில் உத்தவ் தாக்கரே பற்றி எந்த கேள்வியும் கேட்கவேண்டியது கிடையாது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப்பே என இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மாநில அரசு நோய்த்தொற்றை தடுப்பதற்கான பல்வேறு கட்டமைப்புகள் சிறப்பாக உருவாக்கி உலகளவில் பல்வேறு பாரட்டுகளை பெற்றது. நிதிப்பிரச்னைகள் இருந்தாலும் கூட நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம்.


கோவிட் 19 விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக கட்சி கூறியுள்ளதேழ


ஊழல் செய்து வருபவர்கள்தான் இதுபோல குற்றசாட்டுகளை எழுப்புகிறார்கள். கோவிட் 19 தாக்கம் அதிகரித்தபோதுதான் நாங்கள் கோவிட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கினோம். எங்கள் மீது பணத்தை சரியாக செலவு செய்யவில்லை, ஊழல் என்ற குற்றச்ச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அவை உண்மையா இல்லையா என்று அறிய தாராளமாக நிதி தணிக்கை செய்து பார்க்கட்டுமே. அப்போது எந்த ஊழலும் நடக்கவில்லை என்று தெரிந்துவிடும். முனிசிபாலிட்டி மீது நம்பிக்கை இல்லாதபோது எதற்காக எதிர்க்கட்சி தலைவர் மாநிலத்திலேயே தொற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்? மக்களிடம் வரியாக பெற்ற பணத்தை இப்போது நாங்கள் அவர்களுக்காகவே செலவு செய்து வருகிறோம். மும்பை மக்களுக்கு தெளிவாக தெரியும் நான் ஊழல்வாதிகள் என.


கோவிட் 19 தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புகள் கூடியுள்ளதே?


கடுமையான கட்டுப்பாடுகளை நாங்கள் விதிக்கவில்லை. மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை, விதிகளை மதிப்பார்கள் என்று நம்புகிறோம். எங்கள் மீது விமர்சனங்களை வைப்பவர்கள், இதனை தடுப்பதற்காக ஏதாவது ஆலோசனைகளைக் கேட்டால் உடனே கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். உதவி செய்வதற்கு மனமில்லாதவர்கள் குறைகளை சொல்ல தயாராக இருக்கிறார்கள். நோய்த்தொற்று சூழலை நாங்கள் அரசியல்மயமாக்கவில்லை.


முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் பேசித்தான் விதிகளை நடைமுறைப்படுத்தினார். இதில் பாஜக மட்டும் மத்திய அரசை குறை கூறக்கூடாது என நிபந்தனை விதித்து கட்டுப்பாடுகளை ஆதரிப்பதாக கூறினர். அவர்களைப் பொறுத்தவரை அனைத்துமே பேச்சுதான். விமர்சிப்பார்கள் அவ்வளவுதான். எந்த உதவிகளையும் செய்யமாட்டார்கள். அவர்களது ஆதரவாளர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்

சஞ்சனா பலேராவ்



கருத்துகள்