மருத்துவம், டெக் துறைகளில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களைப் பற்றிய அறிமுகம்! தலைவி
தலைவி
டெப்ஜானி கோஷ்
தலைவர், நாஸ்கா்ம்
டெப்ஜானி பற்றி பேசத்தொடங்கினால் நிறைய முதல் முதல் என்று கூறவேண்டிவரும். அத்தனை விஷயங்களை சாதித்திருக்கிறார் என்பதே உண்மை. இன்டெல் நிறுவனத்தில் முதல் பெண் தலைவர் இவர்தான். ஐடி துறைகளின் தலைமை அமைப்பான நாஸ்காமிலும் இவர்தான் முதல் பெண் தலைவர். இதில் தலைமை பொறுப்பு ஏற்று தொழில்துறையின் திட்டங்களை நிறைய மாற்றியிருக்கிறார். திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், திறன்களை வளர்த்துக்கொள்வது என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திய பெண்மணி இவர்.
இந்தியாவிலுள்ள ஐடி துறையை மேம்படுத்த பல்வேறு உலக நாடுகளின் அரசுகளோடு இணைந்து பல்வேறு திட்டங்களை நாஸ்காம் மேம்படுத்தியுள்ளது. ஐடி துறையின் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு பற்றிய பல்வேறு திட்டங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நாஸ்காம் தலைவராக தொழில்நுட்பதை மக்களிடம் கொண்டு சென்று ஜனநாயகப்படுத்தவேண்டும் என்கிறார் டெப்ஜானி கோஷ்.
கார்கி பானர்ஜி தாஸ் குப்தா
இயக்குநர், ஐபிஎம் ஆராய்ச்சி பிரிவு இந்தியா, தொழில்நுட்ப பிரிவு தலைவர் தெற்காசியா மற்றும் இந்தியா
கார்கி, தனது பணிக்காலத்தில் பதினேழு காப்புரிமைகள் பதிவு செய்துள்ளார். மேலும் 36 காப்புரிமைகளை நிறுவன பணியாளர்கள் சார்பாக பெற்றுள்ளார்.
தனது ஆறாவது வயதில் க்யூபிக் மேஜிக் ஸ்கொயர் ஆகிய புதிர்களை வேகமாக தீர்த்து அப்பாவிடம் புத்திசாலிப் பொண்ணு என்ற பெயரை வாங்கியிருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மூளைக்கு வேலை என்று ஏராளமான புதிர்களை தீர்த்ததால் இயல்பாகவே அறிவியலில் ஆர்வம் வந்துவிட்டது பெண்ணுக்கு.
ஐபிஎம் இந்தியாவின் ஆராய்ச்சிப்பிரிவுக்கு முதல் பெண் தலைவராக தேர்வானார். ஐபிஎம் நிறுவனம் ஆராய்ச்சிப்பிரிவிலும் தொழில்நுட்ப பிரிவிலும் மேம்பாடு அடைய பல்வேறு திட்டங்களை உருவாக்கினார். இதற்காக செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தினார். தனது வாடிக்கையாளர்களை க்ளவுட் நோக்கி நகர்த்தினார். பத்தாண்டுகள் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி செய்து வாட்சன் எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கினார். நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு தானியங்கு முறையில் பதில் சொல்லு்மாறு அமைந்த அமைப்பு முறை இது.
கார்கி, 50க்கும் மேலான ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு 12 கட்டுரைகளை எழுதியுள்ளார். பகிரங்கமான விமர்சனம்தான் குழுவை சிறப்பாக செயல்பட வைக்கும் என நம்புகிறேன் என்றார்.
கீதா மஞ்சுநாத்
துணை நிறுவனர், இயக்குநர் நிராமை ஹெல்த் அனாலிடிக்ஸ்
பெருமளவு மக்களை வெப்பநிலை மூலம் எளிதாக நோய்களை கண்டுபிடிக்கும் முறையை உருவாக்க மெனக்கெட்டு வருகிறார். அதுதான் ப்ரோ தெர்மல் சென்சிங் டிவைசஸ்.
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சம்பவங்களால்தான் கீதா, இத்தொழிலுக்கு வந்தார். இதற்கு முன்னர் ஜெராக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தகவல் மற்று்ம ஆராய்ச்சிப் பிரிவுத தலைவராக பணியாற்றியுள்ளார். பின்னர், ஹெச்பி ஆய்வகத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் உரு்வாக்கதிலும் உறுப்பினராக பணியாற்றினார். கணினி அறிவியலில் முனைவர் பட்டம் வென்ற கீதா, சிகாகோவில் நிர்வாக மேலாண்மை படித்தவர். தனது உறவினர் ஒருவரை புற்றுநோய் காரணமாக 42 வயதில் இழந்தார். முதலிலேயே புற்றுநோயை கண்டுபிடித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் என்னை வாட்டியது. என்றார் கீதா. இதனால் நிராமை என்ற நிறுவனத்தை தொடங்கினார். தெர்மால்டிக்ஸ் எனும் கணினி முறையிலான நோய் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.
இதன் மூலம் மார்பக புற்றுநோயை முன்னதாகவே கண்டுபிடிக்க முடியும். நிராமை குழுவினர் தற்போது தெர்மல் முறையிலான தொழில்நுட்பத்தை தற்போது மேம்படுத்தியுள்ளனர். செல்லில் ஏற்பட்டு சீர்குலைவை 15 நிமிடங்களில் கண்டுபிடித்துவிடும் திறன் கொண்டது இத்தொழில்நுட்பம். மாமோகிராபி என்பதை விட கதிர்வீச்சு இல்லாத தொட வேண்டிய அவசியம் இல்லாத முறை இது. . புதிய முறையில் செலவு 7 லட்சம்தான் ஆகும். பழைய முறையில் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரையில் செலவாகும்.
உலகளவில் நிராமை ஒன்பது காப்புரிமைகளை பெற்றுள்ளது. இதுவரையில் புதிய தொழில்நுட்பம் மூலம் 32 ஆயிரம் பெண்களை பரிசோதித்துள்ளனர். இக்கருவி 35க்கும் மேற்பட்ட பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள புற்றுநோய் அமைப்பு, என்னை தொலைபேசியில் அழைத்து இங்கு நிறைய பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு தானாக முன்வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது என்று கூறியது. என் வாழ்க்கையில் இந்த பாராட்டை முக்கியமானதாக நினைக்கிறேன் என்றார் கீதா மஞ்சுநாத்.
இப்சிதா தாஸ்குப்தா
மேலாளர், ஆப்பிள் சர்வீசஸ் இந்தியா
ஆப்பிள் நிறுவனத்தில் வணிகம், இணைய சேவை, ஆப்பிள் ஒரிஜினல்ஸ் ஆகிய விஷயங்களில் ஆப்பிளின் வணிகத்தை உயர்த்தியுள்ளார்.
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் இப்சிதா தாஸ்குப்தா தலைமையில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. கொலம்பியா மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டதாரி இப்சிதா, ஒரிஜினல்ஸ் எனும் பிரிவில் பல்வேறு மையப்பொருட்களை உருவாக்க முனைந்து வருகிறார்.
ஹாட் ஸ்டார் நிறுவனத்தில் கொள்கை மற்றும் புதிய திட்டங்கள் பிரிவில் தலைவராக இருந்த நான்கு ஆண்டு அனுபவம் தற்போது அவருக்கு கைகொடுத்து வருகிறது. நிறுவனத்தின் மேலாளராக பொறுப்பேற்றவர், ஆப்பிளின் பல்வேறு வணிக சேவைகளை விரிவுபடுத்தி வருகிறார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த தாஸ்குப்தா ஆறுமொழிகளை பேசும் திறமைசாலி. பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர், பொருளாதாரம், கணிதம் ஆகியவற்றில் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், எம்பிஏ படிப்பை ஹார்வர்டிலும் முடித்துள்ளார். ஐபிஎம், சிஸ்கோ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி 23 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் இவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக