வாசிப்பை நேசிக்க வைக்கும் லெட்ஸ் ரீட்ஸ் இந்தியா அமைப்பின் புதுமையான முயற்சி!

 

 

 

 

 

 Reading, Book, Girl, Woman, People, Sunshine, Summer

 

 

 

வாசிப்பை நேசிப்போம்!


சமூக வலைத்தளம் பெருகியுள்ள காலம் இது. இதன் காரணமாக, நூல்களைப் படிக்கம் பழக்கம் மெல்ல குறைந்து வருகிறது. நூல்களை விட அதன் சுருக்கங்களை சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தாலே போதுமானதாக உள்ளது. பலரும் அதனை எளிதாக படித்துவிட்டு அடுத்தடுத்து விஷயங்களுக்கு சென்றுவிடுகின்றனர்.


இதை தடுக்கவே மகாராஷ்டிரா மாநிலத்தில் லெட்ஸ் ரீட் இந்தியா எனும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பணியாளர்களும், பொறியாளர்களும் இணைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இப்பணி, தற்போது வேகம் பிடித்துள்ளது. தற்போது இந்த அமைப்பினர் பத்து லட்சம் நூல்களை மக்களுக்கு வாசிக்க வழங்கி வருகின்றனர்.


எங்களது நோக்கம், சமூக வலைத்தளங்களிலுள்ள இளைஞர்களை வாசிப்பு நோக்கி திருப்புவதுதான். இதன்மூலம் நமது சமூகம் அறிவுள்ள சமூகமாகவும், பொறுப்புள்ளதாவவும் வளரும். நூல்களைப் படிக்க இலவசமாகவே இந்த அமைப்பு வழங்குகிறது. ஒரே ஒரு விதி உண்டு. மொபைல் வேன்களில் வரும் நூல்களை யார் வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம். ஒருவாரம் வைத்து படிக்க இலவசம்தான். ஆனால் அடுத்த நூலை பெற வரும்போது படித்த நூலைப்பற்றி 300 வார்த்தைகளில் விமர்சனம் எழுதி தரவேண்டும். இவர்களது நோக்கம், நூலை ஒருவர் முழுமையாக படிப்பது பற்றியதாகவே இருக்கிறது.


மகாராஷ்டிரா, கோவா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொபைல் லைப்ரரி

அமைக்கும் ஆசை இருந்தாலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால், அத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. லெட்ஸ் ரீட் இந்தியா அமைப்பு, இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தை மட்டுமே குறிவைத்து செயல்பட்டு வருகிறது. சமூக வலைத்தளம் மூலம் தேவையான நூல்களைக் கொண்ட வேன் எங்குள்ளது என அறிந்துகொண்டு நூல்களைப் பெறலாம். யூட்யூப் வீடியோக்களில் எழுத்தாளர்களின் நேர்காணல், புத்தக அறிமுகம், விமர்சனம் ஆகியவற்றையும் பதிவு செய்து வைத்துள்ளார். இதனால் என்னென்ன நூல்களைப் படிக்கலாம் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


சுதீர் சூர்யவன்சி








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்