நான் உண்மையைச் சொன்னால் விபத்தில் கொல்லப்படுவேன்! - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு

 

 

 

 

 

செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தோஷ் பாபு.

 

 

சந்தோஷ் பாபு

மக்கள் நீதி மய்ய வேட்பாளர், வேளச்சேரி


இவர் மாநில அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாரத் நெட் திட்டத்தில் செய்த முறைகேடுகளை தட்டிக்கேடார். அரசு எப்போதும் போல பாபுவுக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுத்தது. இதனால் தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார். அவரிடம் பேசினோம்.



அரசு பணியை விட்டு நீங்கள் விலக காரணம் என்ன?


ஊழலுக்கு எதிரான கோபம்தான் அரசுப்பணியை விட்டு விலக வைத்தது. உலகளவில் தரம் கொண்ட தமிழ்நாடு, அரசு அமைப்பு நிர்வாகத்தில் எப்படி சீர்குலைவுக்குள்ளானது என்பதை நீங்களே பார்க்கலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுளளாக எந்த ஒரு அமைச்சரும் தனது துறைசார்ந்து திட்டம் சார்ந்து எந்தவொரு கேள்வியையும் என்னிடம் கேட்டதில்லை. அவர்களுக்கு அக்கறை ஏலம் மற்றும் பணிமாற்றம்தான். தேசிய சிறந்த நிர்வாக கட்சி என்ற அமைப்பை 2026இல் தொடங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் பாரத் நெட் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. எனவே நான் அரசுபணியை விட்டு விலகி அரசியலுக்கு வர நேரிட்டது.


ஊழலுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?


ஊழல் இங்கு அதிகம் பரவியுள்ளது. அதனை மக்களும் கூட ஏற்றுக்கொண்டு வாழப் பழகி விட்டார்கள். மக்களை அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஊழல் என்பது அங்குலம் அங்குலமாக சிதைத்து வருகிறது என்பதை அவர்கள் அறியவில்லை. இதில் 500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதும் உள்ளடங்கும். மக்கள் இப்படி ஊழலுக்கு விலைபோகிறவர்களாக இருந்தால், அவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் போட்டியிடம் வேட்பாளர்கள் வெல்வதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இவர்களைப் போன்ற புதிய நேர்மையான மனிதர்கள்தான் களத்தில் இறங்கி மக்களுக்காக வேலை செய்வார்கள்.


அரசியலுக்கு வர நினைக்கும் அரசு அதிகாரிகளுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனைகள் என்ன ?


அரசு அதிகாரிகள், தேர்தலில் நின்று அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டுமெனில் அவர்கள் தங்களை புகழுக்காக முன்னிறுத்திக்கொள்ள கூடாது. மக்களுக்கான வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். நான் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்துகொண்டு எனது குடும்பத்தை பராமரிக்கிறேன். எனவே, வெறும் ஐஏஎஸ் அதிகாரி என்பதற்காக அரசியலில் நுழைந்தால் வெல்ல முடியாது. அரசியலில் நுழைபவர்கள் நேர்மையோடு உங்களை அதற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்படவும் தயாராக இருக்கவேண்டும்.


பாரத் நெட் ஊழலை வெளிக்கொண்டு வந்தீர்கள். அதற்கு பிறகு ஏன் மௌனமாகிவிட்டீர்கள்?


நான் இங்கே தனி மனிதனாக நிற்கிறேன். உண்மையைக் கூறி விபத்தில் கொல்லப்பட்டு மக்கள் என் புகைப்படத்திற்கு பூக்களை தூவி சந்தோஷ் பாபு நல்ல மனிதர் என்று கூறிச்செல்ல நான் விரும்பவில்லை. தமிழ் சமூகத்தில் ஊழல் வேர்வரை ஆழமாக கிளைவிரித்து பரவியுள்ளது. எனவே நான் மௌனமாகிவிட்டேன். ஊழல் தொடர்பான விவகாரத்தில் தொடர்புடையவர்களை நான் வெளிப்படையாக கூறாதவரை நான் காப்பீடு பாலிசி உள்ளவராக இருக்கலாம். இந்த விவகாரத்தில் பெரும் பணக்காரர்கள் முதற்கொண்டு சக்தி வாய்ந்த பின்புலம் கொண்டவர்கள் இதில் இணைந்துள்ளனர். பாரத் நெட்டிற்கான விதிமுறைகளை அமலாக்கப்படுவதற்கு முன்னரே ஏலம் முடிந்துவிட்டது இதில் உள்ள தில்லுமுல்லுகளுக்கான சாட்சி.


ராம் சுந்தரம்


டைம்ஸ் ஆப் இந்தியா



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்