இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்
பூபேந்திரசிங் பாதல்
சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ்
உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா?
நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம். 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம். அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம். கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது. தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது. முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு, உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும். அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும்.
மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே?
இங்கே பாருங்கள். ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார். அதற்கான பொறுப்புடன் அவர் இருக்கவேண்டும். ஒருவர் அரசுக்கு குறிப்பிட்ட ஆலோசனைகளை கூறினால், அதற்கு அரசியல் ரீதியாக அல்லாமல் உண்மைகள் அடிப்படையில் பதில் கூறவேண்டும். இந்த நிலையில் ஹர்ஷ்வர்த்தன் அரசின் தவறுகளை மறைத்து பிறரை குற்றம்சாட்டக்கூடாது. எங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தைக் கூட அவர் தாக்கிப்பேசினார். ஒருவர் கூறும் ஆலோசனைகளை தனக்கு எதிராக எடுத்துக்கொண்டதால்தான் இந்தநிலை.
கொரோனா சோதனையில் எங்கள் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. தினசரி நாங்கள் 1800க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து சோதிக்கிறோம். பாஜக அரசுகள் ஒருநாளுக்கு 500 முதல் 900 வரைதான் எடுக்கிறார்கள். நாட்டின் மாதிரி சோதனை என்பதே ஆயிரமாக உள்ளது. எங்கள் மாநிலத்தில் இறப்பு சதவீதம் 1.1 ஆக உள்ளது. மேலும், 17 சதவீத மக்கள்தொகைக்கு தடுப்பூசியை நாங்கள் செலுத்திவிட்டோம். நாங்கள் சில ஆலோசனைகளை சொன்னால் பாஜக அரசுக்கு கோபம் வருகிறது. அவர்கள் தங்களை கடவுளாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உள்நாட்டு தடுப்பூசிக்கு எதிராக நீங்கள் பேசியுள்ளதாக மக்களை திசைமாற்றுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளாரே?
நான் அப்படி ஏதும் கூறவில்லை. நான் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளேன். மக்களுக்கும் அதனை நாங்கள் வழங்கிவருவதை கூறியுள்ளேன். கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனைகள் இன்னும் வரவில்லை. அதனால் அவர் கோபப்படக்கூடும். அவரது மனநிலை மோசமாகிவருகிறது.
இரண்டாவது அலை வரும் என்ற எச்சரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கொடுக்கவில்லையே ஏன்?
இது மத்திய அரசின் தவறுதான். நான் பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்றுதான் பார்க்க முடியும். ஆனால் மத்திய அரசு வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பார்வைத்திறன் கொண்டது. அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்த்து, இரண்டாவது அலையை எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்த்து மாநில அரசுகளை எச்சரித்திருக்கலாம். ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்த மத்திய அரசு, 6.5 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளது. அதனை சொந்த நாட்டிற்கு பயன்படுத்தியிருக்கலாம். நீங்கள் உங்கள் வீட்டை சரியாக பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில் பிறருக்கு உதவிக்கொண்டிருப்பீர்களா?
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளித்துக்கொள்ள கூறியுள்ளார். இதுபற்றிய தங்களது கருத்து?
நாம் ஆண்டு முழுவதும் பிரதமரின் உரைகளை கேட்டு வந்திருக்கிறோம். ஆனால் நோய்ப்பரவல் உலகம் முழுக்க பரவியபோது அரசு அதனை மாநிலங்களுக்கு கூறவில்லை. நாங்கள் எப்படி ஐரோப்பாவில் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்க முடியும்? அவரது உரையில் கூட இரண்டாவது அலை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
கும்பமேளா, தேர்தல் பேரணிகள்தான் கொரோனா நோய்த்தொற்றுக்கு காரணமா?
இதனை அனைத்து நாடுகளும் சந்,தித்து வருகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் இரண்டாம் அலையை சந்தித்து ஆகவேண்டும். தேர்தலை அதற்கேற்ப ஆணையம் திட்டமிட்டிருக்கவேண்டும். எட்டு கட்டமாக தேர்தலை நடத்துவது தவறான முடிவு. நோய்த்தொற்று பற்றிய எச்சரிக்கைகளை பிரதமர் முன்னதாகவே தெரிவிக்கவில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மனோஜ் சி.ஜி.
கருத்துகள்
கருத்துரையிடுக