குளிரான குளத்தில் ஏரியில் குளித்தால் ஆபத்தா?

 

 

 

 

 

What Is Cold Water Shock? | First Aid Wirral | TL Training

 

 

 

ஜில்லென்ற குளத்தில் குளிக்கலாமா?


இன்று உலகம் முழுக்க உள்ள வினோதமான துணிச்சல் கொண்ட மனிர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? மிகவும் குளிர்ச்சி கொண்ட குளத்தில் ஏரியில் குதித்து குளித்து மகிழ்ச்சியுடன் ஏறி வருகிறார்கள். எதற்கு இப்படி செய்கிறார்கள் என்றால் அப்படி செய்யும்போது எனது மூளை அமைதியாக உள்ளது. நான் எனது உடல் மீது கவனம் செலுத்த முடிகிறது என்று கூறுகிறார்கள். புதிதாக விளக்கம் இருக்கிறதல்லவா?


இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்டில்டன் இந்த வினோதமான பழக்கத்தை செய்பவர்தான். இவர், அன்டார்டிக் பகுதியில் கடந்த ஆண்டு ஒரு கி.மீ. தூரம் ரத்தத்தை உறைய வைக்கும் நீரில் நீந்தியுள்ளார். இதற்கு ப்ரீசரில் தினசரி உட்கார்ந்து பயிற்சி வேறு எடுத்துள்ளார். இன்று கொரோனா பிரச்னை காரணமாக உலகமெங்கும் உள்ள பல்வேறு ஏரி குளங்களில் செல்லுவதற்கு மக்களுக்கு அனுமதி கிடையாது. சரியான டைம் கிடைச்சிருச்சேய் என பல லட்சம் மக்கள் ஜில் குளங்களுக்கு குளிக்க சென்று வருகிறார். அதிலும் இந்த எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகம். இதற்கென வின்டர் ஸ்விம்மிங் அசோசியேஷனும் கூட உண்டு.


சீனா, ரஷ்யா, பின்லாந்து ஆகிய நாடுகளில் இதுபோல ஜில் குளங்களில் குளிக்கவென ஆர்வமான நீச்சலாளர்கள் உண்டு. எதற்கு இப்படி செய்கிறார்கள்? தங்களை தனித்துவமாக காட்டுவதற்கு இப்படி செய்கிறார்களா என யாருக்கும் சந்தேகம் எழத்தானே செய்யும்? இது தொடர்பான ஆராய்ச்சியில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கு குளிர் நீச்சல் பயன் அளிப்பது தெரிய வந்துள்ளது. டிமென்ஷியா பாதிப்புக்கும் உதவுவதோடு மூளையில் மன அழுத்தம் தொடர்பான சிக்கலும் தீர்கிறதாம்.


ஆனால் இது புதுசு என்று சொல்ல முடியாது. விக்டோரிய

பிரிட்டன் காலத்திலேயே நீர் மருத்துவம் அங்கு புகழ்பெற்றிருந்தது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் நீர் மூலம் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுத்தார். மேலும் சார்லஸ் டார்வினும் கூட தனது வயிற்றுவலிக்கு நீர் சிகிச்சையை நாடியுள்ளார். 1870ஆம் ஆண்டு வழக்கிலிருந்து குளிர் நீச்சல் பின்னாளில் புகழ்பெறவில்லை. இப்போது ரெட்ரோ ஜூரமாக மக்கள் யோசிக்க தொடங்க மீண்டும் புகழ்பெற்றிருக்கிறது. . நீரின் வெப்பநிலை எட்டு டிகிரி செல்சியஸிற்கு குறைவாக இருக்கும்போது உடல் தனது தற்காப்பு நிலைக்காக கோல்டு ஷாக் எனும் நிலைக்கு மாறும். இதனால் உடலிலுள்ள உணர்விகள் வலி உணர்வை மூளைக்கு கடத்தும், மூச்சு அதிகம் விடவேண்டியதாக மாறும். இந்த சூழலில் ஒருவர் நீரை குடிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர் அப்படியே நீரில் மூழ்கி இறக்கவேண்டியதுதான்.


இதய நோய் உள்ளவர்கள் இந்த வீர விளையாட்டில் ஈடுபடக்கூடாது. இதயம் துடிக்கும் வேகம் குறைந்து மூச்சு விடுவதும் குறையும் வாய்ப்புள்ளது. இன்னொரு விஷயத்தையும் இதனுடன் சொல்லுகிறார்கள். உடல் அதிர்ச்சி அடையும் குளிரில் குளிப்பதால், அதனை சமாளிக்கும் திறனை உடல் வளர்த்துக்கொள்கிறது. இது உடலுக்கு நல்லதுதான். சிக்கலான ஆக்சிஜன் குறைவான சூழலில் உடல் சமாளித்து தன்னை தக்கவைத்துக்கொள்வது சிறந்த உடற்பயிற்சி புதுவிதமான டிப்ஸை சொல்லுகிறார் ஆராய்ச்சியாளர் எலிசா எபெல்.


பொதுவாக குளிரை எப்படி வீர ர்கள் சமாளிக்கிறார்கள்? இதற்கு பின்னால் பெரும் உழைப்பு உள்ளது. மூச்சுப்பயிற்சி செய்வதோடு உடலில் அட்ரினலின் அளவை அதிகரித்துக்கொண்டு நீரில் இறங்குகிறார்கள். இப்படி குளிர் நீரில் இறங்கும்போது என்ன செய்யவேண்டும்ழ


நீரில் வாலா, கடப்பாரை எல்லாம் போடக்கூடாது. மெல்ல நீரில் இறங்கி மூழ்கிக் குளிக்க வேண்டும்.


அடுத்து தனியாக குளிக்க கூடாது. உங்களுக்கு ஆபத்து என்றால் யார் உதவி செய்வது?


முறையான பல்வேறு பயிற்சிகளை செய்துவிட்டு இதனை மேற்கொள்ள வேண்டும்.


குளிர் நீச்சலை முடித்துவிட்டு உடனே வெந்நீரைப் போட்டு குடித்தால் அதோடு சோலி முடிந்துவிடும். சூடான காபி குடித்து உடல் வெப்பத்தை மெல்ல அதிகரிக்கவேண்டும். வெந்நீரை ஷவரில் போட்டு குடித்தால் உடனே உடலில் ரத்தவோட்டம் மெட்ரோ ரயிலாக வேகமெடுக்க மயக்கம் வந்துவிடும்.


அலிசன் ஜார்ஜ் - நியூ சயின்டிஸ்ட்


13 மார்ச் 2021





கருத்துகள்