சட்டவிரோத கேசினோவில் பணியாற்றும் கஞ்சத்தனமான பௌன்சரின் கதை! - தி கிரேட் கேங்ஸ்டர்
தி கிரேட் கேங்ஸ்டர்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் கேங்ஸடர்களுக்கு இடையிலான போட்டிதான் கதை.
தொடரின் முதல் காட்சியே கேசினோ ஒன்றின் வாசலில் பாடிகார்டு ஒருவர் கடுமையாக அடிவாங்குகிறார். அவரை காப்பாற்றாமல் அவரது பார்ட்னர் அமைதியாக நிற்கிறார். ஏன்டா அப்படியே நிற்கிறே என்றால், நீ உதவி வேணும்னு கேட்கவே இல்லையே என்று அவன் சொல்கிறான். சரி எனக்கு உதவி செய் என்கிறான். சரி என்றவன் அங்கு ரௌடித்தனம் செய்பவர்களின் முகரையைப் பெயர்க்கிறான்.. யெஸ் வேறுயார் அவன்தான் காட்டெரும் உடம்பு கொண்ட நாயகன் லெஸ் நார்டன். இவன்தான் ஊரில் வந்த பிரச்னை காரணமாக உயிர்பிழைக்க சிட்னியை ஒட்டிய நகருக்கு வந்து கேசினாவில் பௌன்சராக இருக்கிறான். எதற்கு காசு வேண்டுமே? அதற்குத்தான்.
கேசினாவின் முதலாளி பிரைஸ் கேசிலியைப் பொறுத்தவரை தான்தான் அங்கு ராஜா. அதற்கேற்ப அங்குள்ள காவல்துறை சார்ஜென்ட் டெம்பர், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர் என அனைவருக்கும் காசை இறைத்து தனக்கு தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய குழுவில் லெஸ் சேர்கிறான். அவன் வந்தவுடன் பிரைசுக்கு அதுவரை இல்லாதிருந்த சிக்கல்கள் எல்லாம் மெல்ல்த தொடங்குகின்றன. அவனால் அல்ல. கர்மாவினால் என்றுதான் சொல்லவேண்டும். பிரைஸைப் பொறுத்தவரை கேசினா வியாபாரம் செய்தாலும் விபச்சாரம் போன்ற எல்லை மீறல்களை எப்போதும் சகித்துக்கொள்பவரல்ல. அவரது ஊரில் அவருக்கேற்ற சட்டம்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் அங்கு டோரன் என்ற பெண்மணி அங்கு வந்து விபச்சார விடுதியை தொடங்குகிறாள்.
தாய்லாந்திலிருந்து அங்கு ஏமாற்றி அழைத்து வரப்படும் அழகிகளின் வயது 16தான். எனவே பிரைஸ், தாய்லாந்து அழகிகளை மீட்டு சொந்த நாட்டுக்கே தனது செலவில் அனுப்பி வைக்கிறார். இதில் அவர்களை கடத்தும் பணி நார்டனுக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்படும் சொதப்பலால் லெஸ் நார்டன், எடி, அவர்களது பாஸ் பிரைஸ் கேசிலி சிக்கிக்கொள்கிறார்கள்.
இந்த விவகாரத்திலிருந்து எப்படி பிரைஸ் கேசிலி மீள்கிறார். இலவசமாக கிடைத்தால் எதையும் சாப்பிடும், குடிக்கும், பெண்களை படுக்கையில் புரட்டும் பழக்கம் கொண்ட லெஸ் நார்டனின் வாழ்க்கை என்னாகிறது என்பதையும் அவல நகைச்சுவை காட்சிகளாக சொல்லியிருக்கிறார்கள்.
அனைத்து நடிகர்களும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். தலைப்பு கதாபாத்திரம் தவிர பிரைஸ் கேசிலி, டோரன், டோலஸ் பாத்திரத்தில் நடித்த ரெபெல் வில்சன், லெஸ்ஸின் நண்பர்களாக வரும் எடி, பில்லி, ஜார்ஜியா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பிராத்தல் ராணியாக டோரன், டோலஸ் எனும் பாத்திரங்கள் வருவதால் எக்குதப்பான காட்சிகள் தொடர் முழுக்க உள்ளது. நாயகன் பெரும்பாலும் ஷார்ட்ஷில்தான் இருக்கிறார். தொடரே கவர்ச்சிகரமானது என்று கூட சொல்லலாம்.
தொடர் முழுக்க அவல நகைச்சுவை என்பதால் இதில் நெகிழ்ச்சியான காட்சிகள் ஏதும் கிடையாது. இரவு உணவோடு செக்சும் இலவசமாக கிடைத்தால் போதும் என்பதுதான் லெஸ் நார்டனின் வாழ்க்கைத் தத்துவம் . இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் செக்ஸ் வைத்துக்கொள்ளும் உணர்வுப்பூர்வமான ஒரே பெண் பெட்டி என்பவள்தான். மற்றபடி பிரைஸ் கேசிலியின் மனைவியோடு வெறித்தனமாக செக்ஸ், டோலஸோடு மாரத்தான் செக்ஸ் என பல வகையில் லெஸ் கார்டன் இயங்கிக்கொண்டே இருக்கிறார்.
ஏழு எபிசோடுகள் என்றாலும் கேங்ஸ்டர் கதையை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். கதை 1985இல் நடக்கிறது. எனவே அதற்கேற்ற கார்கள்தான் தொடரில் உள்ளன.
கேசினோ குற்றங்கள்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக