இடுகைகள்

டூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திண்டுக்கல் டூர் புகைப்படங்கள்!

படம்
  இடம் - கச்சைகட்டி, எல்லையூர் திண்டுக்கல் பேருந்து நிலையம் சென்று அங்கு மதுரை செல்லும் பேருந்தில் வாடிப்பட்டி செல்லுமா என்று கேட்டு ஏறவேண்டும். டிக்கெட் ரூ.31. வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி, எல்2 என்ற பாலமேடு செல்லும் அரசு பேருந்தைப் பிடித்து நடத்துநர் கையில் ஒன்பது ரூபாய் கொடுத்தால் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ள எல்லையூரில் இறங்கிக்கொள்ளலாம். thanks prithivi jeeva adthidev varman

உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

படம்
  நரசிங்கபுரம் 9.10.2022   அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது. முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம். மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.   எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் ...

ஊருக்கு நல்லது செய்யும் மோட்டார் சைக்கிள் கிளப்புகள்!

படம்
  யமஹா, கவாசாகி நின்ஜா, ஹீரோ இம்பல்ஸ், பல்சர் என பைக்குகளை ஓட்டும் இளைஞர்கள் எப்போதும் சமூகத்தில் ஆபத்தான ஆட்களாகவே பொறுப்பற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் நடந்துகொள்ளும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற அவசரமான மனநிலையும் முக்கியமான காரணம்.   ராபர்ட் எம் பிர்சிக் என்பவர், ஸென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெயின்டனன்ஸ்   என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘’மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வது என்பது தெரபி போலத்தான். பைக் பயணம் மூலம் ஒருவர் உலகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் கவனம் கொள்கிறார்’’ என்று பேசுகிறார். இங்கு நீங்கள் படிக்கப்போவது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பீச்சில் பந்தயத்திற்கு போய் வாக்கிங் வரும் தொப்பை அங்கிள்கள் மீது மோதுபவர்கள் அல்ல. சமூகத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் நன்மை செய்யும் ஆட்களைப் பற்றித்தான். ஊர்வதி பத்தோலுக்கு இப்போது வயது 35 ஆகிறது. அவர் முதன்முதலில் தனது அக்காவின் தோழி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்தார். அதனால், பின்னாளில் ராயல் என்பீல்ட் பைக் ஒன்றை வாங்கி ஓட்டத் தொடங்கினார். முதன்முதலில் பைக் ஓட்டத் தொடங்கியபோது...

கோடைக்கால டூரில் டிராகுலா குடும்பத்தை தீர்த்துக்கட்ட பிளான் போடும் வான்ஹெல்சிங் குடும்ப வாரிசு! - ஹோட்டல் டிரான்சில்வேனியா 3

படம்
              ஹோட்டல் டிரான்சில்வேனியா 3   Director: Genndy Tartakovsky Produced by: Michelle Murdocca Writer(s): Genndy Tartakovsky, Michael McCullers டிராகுலா இம்முறை பஸ்சில் மனிதர்களுடன் தன்னை மறைத்து சென்றுகொண்டிருக்கிறார் . அவரைத் தவிர்த்து பிற நண்பர்கள் எல்லோருமே வேறுபட்ட உடல் வடிவைக் கொண்டவர்கள் . இதனால் மக்கள் பயந்துவிடுவார்கள் என தங்களை மறைத்து பயணிக்கிறார்கள் . அப்போது அங்கு வரும் வான்ஹெல்சிங் குடும்பத்தின் தாத்தா , அவர்களை பழிகொண்டு குடும்பத்தின் பெருமையை நிலைநாட்ட நினைக்கிறார் . ஆனால் மனிதர்களால் டிராகுலாக்களை கொல்ல முடியாது என்பதை ஏற்காமல் அவர்களை வேட்டையாடத் துடிக்கிறார் . இதனால் டிராகுலா தன் நண்பர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் தள்ளிவிட்டு அவரை எதிர்கொண்டு வெல்கிறார் . அதாவது அப்படி நினைத்துக்கொண்டு தனது ஹோட்டலுக்கு நண்பர்களுடன் செல்கிறார் .    பல நூறு ஆண்டுகளாக மனைவி இல்லாமல் வாழ்ந்துவிட்டதால் அவருக்கு தனிமை விரக்தியைத் தருகிறது . இதைக் கவனித்த அவரது மகள் அவருக்கு கோடை கால டூர் ஒன்றை ஏற்பாடு செய்கிறார் ....

சியர்ஸ் ஃபோக்ஸ் - இன்ஸ்டாகிராமில் காதல் தம்பதிகள்

படம்
Hiking.org இன்ஸ்டாகிராமைக் கலக்கும் ஜோடிகள் இவர்கள். இதில் என்ன புதுசு. அனைவரும் உலகை தம்பதிகளாக சுற்றிவந்து நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் என்பதுதான் செம ரவுசு. ரிஷப் - நிராலி -gypsycouple இழுத்தணைச்சு ஒரு உம்மா தரூ என்ற போஸில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடும் ஜோடி. உலகமெங்கும் 42.7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். போகும் இடமெங்கும் தெறிக்கும் ரொமான்ஸ் படங்களை ஷூட் செய்து பதிவிடுவதுதான் வெற்றிக்கு காரணம். பிடித்த ஸ்பாட்கள்: லேக் பேலஸ், உதய்பூர். கிரண் - சச்சின் wroom _with kiran _sachin தனித்தனி பைக்கில்  வ்வ்ரூம் என பாய்வது இந்த மும்பைத் தம்பதிக்கு பிடித்தமான ஒன்று. ஹோண்டா சிபிஆர் 250 ஆரில் ஒருலட்சத்து 75 கி.மீ பயணித்து சாதனை செய்திருக்கிறது இந்த ஜோடி. எனக்கு பில்லியனில் உட்கார்ந்து சென்று அலுத்துவிட்டது எனும் கிரண், முன்னர் ஐடியில் வேலை பார்த்தவர். சச்சின், ரேசிங் மனிதர். கிரண், பாரம்பரிய பஞ்சாபிக் குடும்பம் என்றாலும் பைக் ஓட்டுவதற்கு அஞ்சவில்லை. இரண்டே மாதங்கள்தான் ட்ரெய்னிங் எடுத்தேன். அப்புறம், நானே துணிச்சலாக வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டேன் என்கிறார் ...