இடுகைகள்

கருத்துயுத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருத்து சொல்றோம் ப்ரோ! - ஆங்கில இந்தியர்கள் அட்டூழியம்- சேட்டன் பகத்!

படம்
பெட்ரோல், டீசல் விலை, மாணவி வல்லுறவு, கள்ள உறவு, அந்நிய செலாவணி கையிருப்பு, புதிய மசோதா, பட்ஜெட் ஆகிய விவகாரங்கள் சூடுபிடிப்பது எங்கு தெரியுமா? மாநில மொழி ஊடகங்களில் அல்ல; முழுக்க ஆங்கில மீடியத்தில் படித்து ஆங்கிலேய நாவல்களை படித்து அதிலேயே கனவுகண்டு இந்தியாவில் வாழும் ஆட்களின் உலகம்தான் மேற்சொன்ன விவகாரங்களைப் பேசுகிறது. மக்களிடையே கொண்டு செல்கிறது. திரும்பத்திரும்ப அதனைப்பேசி, மக்களின் மனங்களில் பயத்தை புயலை உருவாக்கி வருகிறது. பிற மக்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதையே இவர்கள் மறக்க வைத்துவிடுகிறார்கள். ஆங்கிலமொழியில் இயல்பான வசதி என்னவென்றால், எளிதாக உலகோடு தொடர்புகொள்ளமுடியும் என்பதுதான். இதன் விளைவாக, ஆங்கில ஊடகங்கள் எந்த டாபிக்கை எடுத்துப் பேசுகிறார்களோ அதைத்தான் உலகம் கவனிக்கிறது. இந்தியாவில் இப்படி நடக்கிறது என சிஎன்என், பிபிசி முதற்கொண்டு புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லுவது கந்தசாமி, பழனிச்சாமி கிடையாது . குறிப்பாக தந்தி போன்ற மாநில சார்பு கொண்ட அரசு சார்பு கொண்ட பத்திரிகைகளில் இதனைப் பார்க்க முடியாது. ஆனால்