இடுகைகள்

தாமரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்ப பாசமா, உலகை காப்பதா என முடிவு செய்யும் கிராமவாசி இளைஞனின் சாகச பயணம்! மார்ஷியல் யுனிவர்ஸ்

படம்
                  மார்ஷியல் யுனிவர்ஸ் சீன தொலைக்காட்சி தொடர் 42 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சீனாவில் சிறு கிராமத்தில் வாழும் கோணங்கித்தனமான குடும்ப பாசம் கொண்ட லின் டாங் எப்படி அசுரர்களைக்க கட்டுப்படுத்தி அடக்கும் தாயத்து குருமாராக மாறினார் , உலகை காப்பாற்றினார் என்பதே கதை . இந்த தொடரின் முக்கியமான பலம் , லின் டாங் என்ற நாயகனின் கோணங்கித்தனமான சேட்டைகளும் , அபாரமான நடிப்பும் , சண்டையும்தான் . இதுதான் தொடரை சலிப்பு தராமல் பார்க்க வைக்கிறது . சில எபிசோடுகளில் போதுண்டா பரந்தாமா என விரக்தி வரவும் வைக்கிறது . லீ வம்சம் நடத்தும் கிளாடியேட்டர் ரக மைதானக் காட்சியில் தொடர் தொடங்குகிறது . அம்மன் பட வில்லன் போன்ற ஒருவரை சன்னமான சைசில் உள்ள லின் டாங் எப்படி தாக்கி வீழ்த்துகிறான் என்பதே காட்சியாக விரிகிறது . அவனுக்கு ஆதரவு தந்து உதவுபவள் அவனது தங்கை குவிங் டாங் . நோயுற்ற தந்தையின் மருத்துவச்செலவிற்காகெ லின் டாங் தனது உயரையே பந்தய மைதானத்தில் பணயம் வைக்கிறான் . இத்தனைக்கும் குங் பூ கலையை முறையாக பயிற்சி செய்யாதவன் . அவன் தான் எந்த வம்சம் என்று கூறாமல் போட்

பெரியார் சொன்னதை அன்றே மக்கள் ஏற்கவில்லை!

படம்
ஹரிஹரன் ராஜா சர்மா என்றால் பலருக்கும் புரியாது . ஹெச் . ராஜா என்றால் அனைவரும் புன்னகை பூப்பார்கள் . அந்தளவு பா . ஜ . கவின் புகழை தமிழகத்தில் பரப்ப பாடுபட்டு வருபவர் இவர் . பெரியாரை அவதூறு செய்வது , உயர்நீதிமன்றத்தை ஏக வசனத்தில் திட்டுவது என எப்போதும் சர்ச்சையின் மையத்தில் இருப்பது இவரது பாணி . அவரிடம் பேசினோம் . உள்ளாட்சித் தேர்தலில் பா . ஜ . க சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லையே . தமிழகத்தில் ஏன் உங்கள் கட்சி இன்னும் தடுமாறி வருகிறது ? இது கற்பனையான வாதம் . நாங்கள் சில இடங்களில் மட்டும்தான் போட்டியிட்டோம் . நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள வாக்குகளைப் பார்த்தாலே தெரியும் . நாங்கள் மெல்ல முன்னேறி வருகிறோம் . தமிழகத்தில் பா . ஜ . கவிற்கு எதிராக இருக்கும் மனநிலையைப் பற்றி .... அது உண்மை அல்ல . நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு மனநிலை இருப்பதாக தோற்றத்தை உருவாக்கினார்கள் . இது மாறிவிடும் தன்மை கொண்டதுதான் . பெரியார் இறந்து நாற்பது ஆண்டுகளுக்கும் பிறகு அவரைச்சுற்றி அரசியல் அமைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

லவ் இன்ஃபினிட்டி: காதலும் லட்சியமும் ஒன்றாக பயணிக்குமா?

படம்
www.pexels.com எங்கே விட்டோம்... காதல்னா எனக்கு புரியல என்பதில்தானே... இந்த பூபதி வேற Ladies Kho Kho Match அன்னிக்கு வந்தான். நான் கண்டுக்கலை. அவனும் சும்மாதான் இருந்தான். இந்த பூங்கொடி(White) அவனுக்கு கேட்கிற மாதிரி என்னை கூப்பிட்டுட்டே இருந்தா. அது எனக்கு பிடிக்கவேயில்லை. அவன் மட்டும் எனக்கு Future இல் என் husband என்றால் நிச்சயம் ஏற்கமாட்டேன்.  சரி,சரி இனிமே Future பத்தி ஏதும் பேச மாட்டேன். நடப்பது நடக்கட்டும்னு எல்லா விஷயத்திலும் இருக்க கூடாது. படிப்பு, மதிப்பு, பணம் எல்லாத்திலயும். தாமரை எழுதிய சவிதா வயது பதினொன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ரெண்டும் Super. சவிதா கதை படிக்கையில் உண்மையிலேயே அழுதுட்டேன். தேவையில்லாம அடிக்கடி கண்ணீர் வருது. சின்ன சின்ன ஏமாற்றங்களைத் தாங்க முடியலைன்னா? ஆனா நீங்கல்லாம் எப்படி கட்டுப்படுத்திக்கிறீங்களோ? Revathy Mam என்கிட்ட சொல்லியிருக்காங்க. நீ என்னதான் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது Love பண்ண நினைச்சாலும் அப்பக்கூட நல்லவங்க Lover - ஆ அமைவாங்கன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க. நீ சொன்ன “வயது ஆக ஆக வாழ்க்கை புரியும் ”ங்கிற வார்