இடுகைகள்

அடிமைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகையிலை அளவுக்கு சர்க்கரையும் ஆபத்தான பொருள்தான் - ஆராய்ச்சியாளர் டேவிட் சிங்கர்மேன்

படம்
    டேவிட் சிங்கர்மேன் ஆராய்ச்சியாளர், வர்ஜீனியா பல்கலைக்கழக பேராசிரியர் சர்க்கரை, தொடக்கத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரின் பொருளாக இருந்து பிறகே அனைத்து மக்கள் பயன்படுத்தும் பொருளாக மாறியது. அதைப்பற்றி விளக்கி கூறுங்களேன். வரலாற்று ரீதியாக பார்ப்போம். தொடக்கத்தில் சர்க்கரையை ஒருவர் பயன்படுத்தினால், அதில் செய்த உணவை சாப்பிடுகிறார் என்றால் அது, அவரின் செல்வ வளத்தைக் குறிப்பதாக இருந்தது. கடந்த ஐநூறு ஆண்டுகளாகத்தான் சர்க்கரை என்பது அனைவரும் பயன்படுத்தும் விதமாக விலை குறைந்து கிடைக்கிறது. தொடக்கத்தில் கரும்பில் தயாரிக்கும் சர்க்கரை எளிதாக அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. ஐரோப்பியர்கள், சர்க்கரை விலையில் கிடைத்த லாபத்தை பேராசையோடு அடையாளம் கண்டனர். லாபத்தை அதிகரிக்க அதை பெருமளவு தோட்டமாக போட முடிவெடுத்தனர். இப்படித்தான் ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்கா, லூசியானா, அட்லாண்டிக் தீவுகளான மெடெய்ரா ஆகியவற்றில் கரும்பு தோட்டங்களை அமைத்தனர். இதில் வேலை செய்ய அடிமைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர். இவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதமும் கொடூரமாக இருந்தது. மனித தன்மையோடு அடிமைகள்...

உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா தடுப்பூசி? - உண்மையும் உடான்ஸூம் அறிவோம்!

படம்
              உண்மையும் உடான்ஸூம்! ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் சென்ற கருப்பின அடிமைகள் உலகம் முழுக்க பரவினார்கள் ரியல் : ஆப்பிரிக்கா என்பது ஓர் நாடு என சிலர் நினைப்பது போலவே இதுவும் தவறான நம்பிக்கை . ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் கருப்பினத்தவர்கள் விற்கப்படவில்லை . ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியிலிருந்துதான் கருப்பினத்தவர்கள் அடிமை வணிகம் தொடங்கியது . தங்கம் தேடி ஆப்பிரிக்காவிற்கு சென்ற போர்ச்சுக்கீசியர்கள் 1442 ஆம் ஆண்டு தங்கள் நாட்டிற்கு பத்து ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர் . பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கானாவில் எல்மினா எனும் அடிமைகள் விற்குமிடத்தை தொடங்கினர் . அங்கு அடிமைகள் விற்பனையோடு , தங்கம் , யானைகளின் தந்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன . 1619 ஆம் ஆண்டுவாக்கில் ஐரோப்பியர்களால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர் . நம் கைகளிலுள்ள கைரேகைகள் பொருட்களை இறுக்கமாக பிடிக்க உதவுகின்றன ரியல் : நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிய நம்...