இடுகைகள்

பவன் கல்யாண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளவரசியைக் கரம்பிடித்து சுரங்க மாஃபியாவை ஒழிக்கும் போலீஸ்காரர்! - சர்தார் கப்பர் சிங் - பவன், காஜல்

படம்
  சர்தார் கப்பர் சிங் இயக்கம் பாபி (கே.எஸ்.ரவீந்திரா) கதை, திரைக்கதை, தயாரிப்பு பவர்ஸ்டார் பவன் கல்யாண் இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி   கப்பர் சிங் படத்திற்கு பிறகு அதேபோல தயாரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். இங்கு கப்பார் சிங்கோடு சர்தார் கூடுதலாக சேர்கிறது. இது தனிக்கதையாக உருவாகிறது. இந்த கதையில் குடும்ப பாசம் ஏதும் கிடையாது. தொடக்க காட்சியில், திருடர் கூட்டத்தை போலீசார் விரட்டி வர,   கழுத்தில் கத்தி வைத்தாலும் கூட துணிச்சலாக அவர்களைக் காட்டிக்கொடுக்கிறான் சிறுவன் ஒருவன். அவன்தான் நாயகன். சர்தார் கப்பர் சிங். அவன் ஆதரவற்ற சிறுவனாக இருக்கிறான். அவனைப்போலவே இருக்கும் இன்னொரு சிறுவனுக்கும் அவனே பெயர் சூட்டி தனது நண்பனாக்கிக் கொள்கிறான். இவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? நட்பிற்கு உதாரணமான சர்தார் கப்பார் சிங்கும், அவரது நண்பரான சாம்பாவும்தான். (பவன்-அலி= நட்பே துணை ) சர்தார் கப்பர் சிங் படம், தெலுங்கு பேசும் ஆந்திரத்தில் உருவாக்கப்படவில்லை. ரந்தம்பூர் எனும் இடத்தில், இன்றும் ராஜாக்கள் தொழில்களை கையகப்படுத்தி இயற்கை வளத்தை மக்களை நசுக்கி வரும் இடத்தில் ...

டிவி நிருபர் காதலைச் சேர்த்து வைக்க ஆடும் ருத்ர தாண்டவம் - பங்காரம்- தரணி

படம்
  பங்காரம் இயக்கம் தரணி இசை வித்யாசாகர் ஒளிப்பதிவு கோபிநாத் டிவி சேனலில் வேலை பார்க்கும் நிருபர், தீவிரவாதி ஒருவரை பேட்டி எடுக்கச் செல்கிறார். ஆனால் அந்த வேலையை டிவி உரிமையாளர் நினைத்தபடி செய்யாததால் வேலை இழக்கிறார். கூடவே வேறு வேலைக்கும் போகமுடியாதபடி சூழல் மாறுகிறது. இதை சரி செய்ய டிவிக்கு நிதி அளிக்கும் பெத்த ரெட்டி என்பவரை சந்திக்கச் செல்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான திருப்பு முனை. இதுவரையில்தான் படம் சற்று படமாக தெரிகிறது. அதற்குப் பிறகு, போட், ஜேபிஎல் என எந்த ஸ்பீக்கரை காதில் வைத்திருந்தாலும் நுவ்வு செப்பக்கூடாதுடா ரே, சம்பெய்ண்டா வாடே, நறுக்குத்தானு, ஏய்..என வில்லன் குழுக்கள்   எழுப்பும் கூச்சல்களால் உடலே அடிக்கடி அதிர்ச்சியில் தூக்கிப் போடுகிறது.   படத்தில் மீரா சோப்ரா இருக்கிறார். ஆனால் அவருக்கும் பங்காரத்திற்கும் காதல் போல பாடல்களை வைப்பார்கள். ஆனால் காதல் கிடையாது என்பதுதான் ட்விஸ்ட். ஆனால் படத்தில் இருக்கும் ஒரே அம்சம். சண்டைதான். கோடரியால் வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெருப்பால் சுடுவது, மூங்கில் குச்சியால் நாயகின் வயிற்றில் குத்துவது என படம...

காதலியின் லட்சியக் கனவுக்காக காதலை ஒத்திவைக்கும் காதலன்! - தொலி பிரேமா - ஏ.கருணாகரன்

படம்
  தொலி பிரேமா 1998 பாலு, அனுவை முதல் முறையாக பார்க்கும் காட்சி தொலி பிரேமா 1998 - இறுதிக்காட்சி  தொலி பிரேமா பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி, அலி, வேணு, நாகேஷ் இயக்கம் ஏ.கருணாகரன் இசை தேவா பாலு என்ற படிப்பில் தேறாத இளைஞன் ஹார்வர்ட் பல்கலையில் சேரும் லட்சியத்துடன் படிக்கும் இளம்பெண்ணை காதலிக்கிறான். அவன் காதல் நிறைவேறியதா என்பதே கதை. படம், வெளிவந்த காலத்தில் அன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த கோக், பைக் என பல்வேறு விஷயங்களை அடையாளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். அதனால் படம் பார்க்கும்போது நிறைய பேருக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வரலாம். காதலே லட்சியம் என நினைக்கும் இளைஞர், ஆராய்ச்சிப் படிப்பே லட்சியம் என வாழும் இளம்பெண். இதுதான் இருவருக்குமான முரண்பாடு. பாலு, படத்தில் நாயகி சொன்னது போல உருப்பட்டு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அவர் தனது காதலை இளம்பெண்ணிடம் சொல்லிவிடுகிறார். அவரின் பெரியப்பாவான நாகேஷ் எப்படி நிம்மதி அடைகிறாரோ அதே திருப்தியை படத்தை பார்க்கும் பார்வையாளர்களும் அடைகிறோம்.   காதலித்தால் கூட கல்யாணம் செய்துகொள்ள விரும்பினால் கூட பெண்ணின் கனவு...

ஊரே மிரளும் கனி, பாலுவாக மாறுவதற்கு காரணமான மருத்துவக் காதலி! - பாலு - கருணாகரன்

படம்
  பாலு இயக்கம் கருணாகரன் இசை பவன், ஷிரியா சரண், சுனில், ஜெயசுதா, பிரம்மானந்தம்   டெல்லியில் நீங்க என்ன செஞ்சுட்டிருந்தீங்க என கேட்கும் டான் டைப் கதை. ஹைதராபாத்தில் பூக்கடை வைத்து ஹோட்டல்களுக்கு பூ விற்றுக்கொண்டிருக்கும் பாலுவைக் கொல்ல டெல்லியில் இருந்து வரும் மாஃபியா டான் கான் பாய் முயல்கிறார். அவரும், உள்ளூர் தாதா நாயுடம்மா என்பவரும் இணைந்து பாலுவை கொல்ல நினைக்கிறார்கள். ஏன் இந்த வன்மம், பழிவாங்க நினைக்கிறார்கள் என்பதே முக்கியக் கதை. அவன் வீட்டிலுள்ளவர்கள் யார் என்பதையும் இயக்குநர் நிதானமாக கூறுகிறார். படத்தின் காட்சிகளை மணிசர்மா இசையால் தாங்கியிருக்கிறார்.  கனி, பாலு என இரண்டு பாத்திரம் இரண்டிலும் பிஎஸ்பிகே கலக்கியிருக்கிறார். முதல் காட்சியில் சுனிலுடன் பண்டு பாத்திரங்களுடன் வரும்போதே வசீகரிக்கிறார். பிறகுதான், அங்குள்ள தாஸ் என்பவரின் அம்மா போட்டோவை கடையில் வைத்து தண்டல் வசூலிப்பதை தடுக்கிறான். அனைத்தையும் நுட்பமாக செய்து நாயுடம்மா குழுவை ஏமாற்றுகிறான். ஏமாற்றும் பணத்தை அங்குள்ள சந்தை ஆட்களுக்கே கொடுக்கிறான். அந்த சந்தைப்பகுதி யாருடையது, ஏன் அங்கு ரவுடிக்கள்...

நக்சலைட்டாக இருந்து கல்லூரி மாணவராக மாறியவனின் கதை! ஜல்சா - பவன் கல்யாணம், இலியானா, பார்வதி மெல்டன்

படம்
  ஜல்சா இயக்கம் திரிவிக்ரம் சீனிவாஸ் இசை பான் இந்தியா ராக்ஸ்டார் டிஎஸ்பி பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு மட்டுமேயான படம். படத்தில் எந்த லாஜிக்கும் கிடையாது. அனைத்துமே மேஜிக்தான். அதைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஒருவர் இந்தப் படத்தைப் பார்க்கமுடியும். பவன் கல்யாண் கல்லூரியில் டிகிரிக்கு மேல் டிகிரியாக படித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு காதலி இருக்கிறார். அவர்தான் கமாலினி முகர்ஜி. அவர் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜின் பெண். இதனால் அவரது காதல், கல்யாணம் வரை செல்வதில்லை. இதனால் தனது காதலி கல்யாணத்திலேயே பந்திக்குப் போய் சாப்பிட்டு வருகிறார். இந்தளவுக்குத்தான் பவன் கல்யாணின் வாழ்க்கை இருக்கிறது. இப்படி இருக்கும் வாழ்க்கை, இரு பெண்களை வல்லுறவு செய்ய முயலும் கேங் ஒன்றை அடித்து துவைக்க மாறுகிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு இரு பெண்கள் பவனை காதலிக்கிறேன் என்று சொல்லி வருகிறார்கள். அதில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணை பவன் காதலிக்கிறார். அவருக்கு முன்பே அந்த பெண் அவரை காதலிக்கிறாள். இந்த நேரத்தில் சிறைக்குள் இருந்தபடியே ஒரு ரவுடி நிலங்களை செட்டில் செய்து வருகிறான். அவன் பவனைத் தேடி வருகி...

ஆந்திராவுக்கு தனி அடையாளத்தை உருவாக்குவேன்! - பவன் கல்யாண்

படம்
பவன் கல்யாண்\ தி ஹேன்ஸ் இந்தியா பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவி பின்னர் கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனால் இது பிடிக்காத அவரது தம்பி பவன் கல்யாண், ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியை தீவிரமாக எதிர்த்து வருபவர்களில் இவரும் ஒருவர். தேர்தல் நிகழ்ச்சிகளில் வேட்டி, குர்தா அணிந்து வலம் வருகிறீர்களே? என்ன காரணம்? எனக்கு சிறுவயதிலிருந்தே வேட்டி என்பது பிடிக்கும். என்னை அதில்தான் போட்டு தூங்கவைப்பாள் எனது அம்மா. அதற்குப்பிறகு விழாக்களுக்கு வேட்டி கட்டத் தொடங்கினேன். கலாசார அடையாளம் என்பதோடு, நம்மைக் குறித்த அடையாளமாகவும் வேட்டியைப் பார்க்கிறேன். நான் கட்சி சார்ந்தும், ஆந்திராவை தனியாக தனித்துவமாக  அடையாளப்படுத்த முயற்சிக்கிறேன். ஒருவர் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேவை என்ன?  நான் இலவசங்களை நம்புபவனல்ல. நீண்டகால நோக்கில் நன்மைகளை வழங்கும் திட்டங்களை நான் ஆதரிக்கிறேன். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதே நிஜம். ஆக்கப்பூர்வ சமூகநலத்திட்டங்களை நான் அமல்படுத...