டிவி நிருபர் காதலைச் சேர்த்து வைக்க ஆடும் ருத்ர தாண்டவம் - பங்காரம்- தரணி
பங்காரம்
இயக்கம் தரணி
இசை வித்யாசாகர்
ஒளிப்பதிவு
கோபிநாத்
டிவி சேனலில்
வேலை பார்க்கும் நிருபர், தீவிரவாதி ஒருவரை பேட்டி எடுக்கச் செல்கிறார். ஆனால் அந்த
வேலையை டிவி உரிமையாளர் நினைத்தபடி செய்யாததால் வேலை இழக்கிறார். கூடவே வேறு வேலைக்கும்
போகமுடியாதபடி சூழல் மாறுகிறது. இதை சரி செய்ய டிவிக்கு நிதி அளிக்கும் பெத்த ரெட்டி
என்பவரை சந்திக்கச் செல்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான திருப்பு முனை.
இதுவரையில்தான்
படம் சற்று படமாக தெரிகிறது. அதற்குப் பிறகு, போட், ஜேபிஎல் என எந்த ஸ்பீக்கரை காதில்
வைத்திருந்தாலும் நுவ்வு செப்பக்கூடாதுடா ரே, சம்பெய்ண்டா வாடே, நறுக்குத்தானு, ஏய்..என
வில்லன் குழுக்கள் எழுப்பும் கூச்சல்களால்
உடலே அடிக்கடி அதிர்ச்சியில் தூக்கிப் போடுகிறது.
படத்தில்
மீரா சோப்ரா இருக்கிறார். ஆனால் அவருக்கும் பங்காரத்திற்கும் காதல் போல பாடல்களை வைப்பார்கள்.
ஆனால் காதல் கிடையாது என்பதுதான் ட்விஸ்ட். ஆனால் படத்தில் இருக்கும் ஒரே அம்சம். சண்டைதான்.
கோடரியால் வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெருப்பால் சுடுவது, மூங்கில் குச்சியால் நாயகின்
வயிற்றில் குத்துவது என படம் நெடுக ரத்த குழம்பு கொதிக்கிறது.
நாயகனை தலை
மட்டும் தெரியுமாறு புதைத்து மாடுகளை விட்டு தலையை இடறச்செய்வதுதான் வில்லனின் திட்டம்.
அதாவது பூமா ரெட்டியின் கொலைத்திட்டம். அதிலிருந்து நாயகன் பங்காரம் தப்புவது இருக்கிறதே..
பங்காரம் படத்தைப் பற்றிச் சொல்ல இந்த சீன் சாலு…..
காமெடியெல்லாம் படத்தில் வைக்க இடமேயில்லை. அனைத்து
இடங்களிலும் சண்டைதான். வெட்டுக்குத்துதான். நாயகனை வேட்டையாட துரத்தும் ஆட்களால் படமே
நிறைந்துபோய்விட்டது. ரீமாசென் பாடலுக்காக வந்து போகிறார். தூள் படத்தில் உள்ள ரீமாவின்
பாத்திரத்தின் அளவு கூட இதில் இல்லை.
வித்யாசாகர்
பின்னணி இசைக்காகவே ஆற்றலை செலவழித்துவிட்டதால், பாடல்கள் ஒன்றும் பெரிதாக தேறவில்லை.
பாடல் வரும் இடங்களும் வைத்தே ஆகவேண்டும் என்பதுபோல இருக்கிறது. இசையமைப்பாளரும் என்னதான்
செய்வார்.?
மீரா சோப்ரா
அதாவது நாயகியின் தங்கையை மலையாள சிறுமி ஒருவர் நடித்திருந்தார். வயதுக்கு வரும் காட்சி
தொடங்கி, அவரை வில்லன்கள் துரத்தி மணப்பெண்ணாக்க முயல்வது வரையில் கத்திக்கொண்டே இருக்கிறார்.
காதில் ரத்தமே வந்துவிடும் போல.. எதற்காக இந்தளவு சத்தம்.
பாசமான அப்பா, அன்பைக் கொடுத்து வளர்த்து மகளை திருமண விஷயத்தில் புரிந்துகொள்ள மாட்டேன்கிறார். மகளும் அப்பாவிடம் தனது மனதைப் பற்றி கூறவில்லை. இந்த இடத்தில் பங்காரம் நாயகியின் அப்பாவின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவளுக்கு வாழ்க்கை அமைத்து கொடுக்கிறான். இந்த விஷயத்தை உணர்ச்சிகரமான காட்சிகளாக மாற்றியிருந்தால் பார்க்க நன்றாக இருந்திருக்கலாம். படத்தின் மையக்கதை என்பது இதுதான். அன்பை விட வெறுப்பும், வன்மமும் அதிகமாகிவிட்டது.
பங்காரம்
– இரைச்சல் ரீங்காரம் குறையவில்லை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக