மூளையில் ஏற்படும் தவறான சிக்னல்களே ஆளுமை பிறழ்வுக்கு காரணம்!

 













பொய்கள், ஏமாற்றுவது ஆகியவற்றுக்கு காலாவதி காலம் என்று ஒன்றுண்டு. எனவே, தங்களது பொய்கள் பிறருக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என சைக்கோபாத்கள் , வேறு வேறு நகரங்களுக்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி செல்லும் பயணத்தில்தான் காதலும், உடலுறவும், அடுத்த தலைமுறையும் உருவாகின்றனர். சீனு வைட்லாவின் படத்தின் பாத்திரங்கள் போல தாங்கள் உருவாக்கிய பொய் உலகத்தில் அவர்களே மாட்டிக்கொள்ள நேரிடும்போது, உடனே அதிலிருந்து விலகி காணாமல் போய்விடுகின்றனர். வேறு நகர், வேறு நண்பர்கள். நட்புக்குழுக்கள், காதலிகள், திருமணங்கள் என வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள்.

இதில் சில கோட்பாடுகளைச் சொல்லுகிறார்கள். அதாவது, சைக்கோபாத்களுக்கு மூளையில் குறிப்பிட்ட பகுதி முழுமையான வளர்ச்சி பெறுவதில்லை.இதனால்தான் அவர்களால் அவர்கள் பெற்ற குழந்தையைக் கூடன வளர்க்க முடிவதில்லை. மேலும் அவர்களின் தூக்கம் குறைவு என்பதால் மூளையின் வளர்ச்சியும் மிக குறைவாகவே உள்ளது என வாதிடுகிறார்கள். இதை தன்முனைப்பு அதிகம் கொண்ட, கோபம் கொண்ட குழந்தைகளுக்கும் கூட பொருத்திப் பார்க்கலாம். இயல்பு, ஊக்கம், நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை பலரும் குழப்பிக்கொள்கிறார்கள். பத்து வயது சிறுவன் வன்முறையும், வல்லுறவும், பொய் சொல்லுதலும், திருட்டுகளும் செய்யும்போது பெற்றோருக்கு எப்படி அவனிடம் நடந்துகொள்வது என பீதி வருகிறது. மூளையில் முன்பக்க பகுதி ஃபிரான்டல் லோப். இதில் அடிபடும்போது ஒருவரின் ஆளுமை முழுக்க மாறிவிடும். விபத்திற்கு முன்பு, பின்பு எனும்படி நிறைய மாறுதல்கள் இருக்கும். கட்டற்ற கோபம், எரிச்சல், திட்டமிட முடியாமை, குறைந்த சகிப்புத்தன்மை, கொந்தளிப்பான மனம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள். சைக்கோபாத்களுக்கு  இதுபோல சோதனை செய்தால் அவர்களுக்கு அடிபடாமலேயே அடிபட்ட நோயாளிகள் போலத்தான் நடந்து வருகிறார்கள் என தெரிய வந்தது. அப்படியென்றால் மூளை சர்க்யூட்டில் ஏதேனும் வயர்கள் தவறாக கனெக்‌ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் என புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

படம் - ஆராதனா சேத்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்