குற்றவாளியுடன் சில நாட்கள்- குற்றத்தை உணர முடியாத நண்பர்கள், காதலிகள்

 


1974ஆம் ஆண்டு கார்ஸ்வெல் கார், அவரது பதினைந்து வயது மகன் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை பால் என்பவர் வீடு புகுந்து கொன்றார். பிறகு, அவர்களின் கார், துணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அட்லாண்டாவில் உள்ள ஹாலிடே இன் என்னும் இடத்திற்கு வந்தார். இங்குதான் அவருக்கு பத்திரிகையாளர் சாண்டி ஃபாகெஸின் அறிமுகம் கிடைத்தது. சாண்டி, விடுதியில் உள்ள பாருக்கு மதுபானம் அருந்த வந்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி பால், அவருடன் பேசினார். பிறகு சாண்டியும் பாலும் இரவு உணவு அருந்தினார்கள். அடுத்து என்ன செக்ஸ்தான். அதில்தான் சாண்டி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். பால், பிறரின் தூண்டுதல் இன்றி சுயமாக உடலுறவு கொண்டு திருப்தி கொள்ள முடியாதவர் என  சாண்டி அறிந்தார். தனது குறைபாட்டைக்கூட கிண்டலாக பால் பேசியது சாண்டியை ஆச்சரியப்படுத்தியது.

சாண்டிக்கு பாலுடன் சிறிதுகாலம் வாழ்ந்து பார்க்கலாம் என தோன்றியது. ஒருமாத காலம் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகுதான் சாண்டி, பாலை விட்டு பிரிந்து சென்றார். அவரை தொடர்புகொள்ள பால் நிறைய முறை முயன்றார். ஆனால் காவல்துறை சாண்டியைத் தேடி வந்து பால் பற்றிய தகவல்களை கேட்டபோதுதான் அவர் தொடர் கொலைகாரர் என செய்தியை அறிந்தார்.  இவர் பால் பற்றிய நூல் ஒன்றை எழுதினார்.

பாலுக்கு மனதில் தான் புகழ்பெற்ற தொடர்கொலைகாரன் என்ற பெயரை சம்பாதிக்கவேண்டும் என நினைத்தார். அதனால் பத்திரிகையாளரான சாண்டியுடன் பழக்கம் வைத்துக் கொண்டார். பிற பெண்களை வல்லுறவு செய்த கொல்வது போல சாண்டியை கொல்லாமல் விட்டதன் காரணமே, அவளை வைத்து தனது புகழைப் பரப்பிக் கொள்வதுதான். இறந்தபிறகு அதை பால் ஒருவகையில் சாதித்தும் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். நிறைய பெண்களைக் கொன்றார் என அறிந்த சாண்டி அதன் பின்புலத்தை யோசித்து காரணத்தை மெல்லத்தான் புரிந்துகொண்டார்.

கழுகிடமிருந்து தப்ப முடியுமா?

மீண்டும் டெட்டின் கதை. டெட் இந்த முறை டா ரோன்ச் என்ற பெண்ணை அணுகினார். தன்னை காவல்துறை அதிகாரி என்றவர், அப்பெண்ணின் கார் திருடு போயுள்ளது அதை விசாரிக்க அந்தப் பெண் காவல்நிலையம் வரவேண்டும் என்றார். இளம்பெண் தனது காரை சோதித்தபோது அனைத்து பொருட்களும் இருந்தன. எதுவும் காணாமல் அல்லது களவும் போகவில்லை. ஆனால் டெட்டின் வசீகரம் டா ரோன்ச்சை வசீகரிக்க போலீஸ் அதிகாரியின் அடையாள அட்டை, பெயரைக்கூட பார்க்காமல் ஃபோக்ஸ்வேகன் காரில் ஏறிவிட்டார். சீட் பெல்ட் போட முயன்றபோது அதை அணிய வேண்டாம் என்று சொல்லிய டெட் பண்டி, கட்டிடம் ஒன்றைநெருங்கினார். அதுதான் துணை காவல்நிலையம் என்று சொன்னார். ஆனால் டாரோன்சுக்கு சந்தேகம் வந்துவிட காரில் இருந்து வேகமாக இறங்க முயன்றார். டெட், அந்த பெண்ணின் கையில் விலங்கை மாட்ட முயன்றார். ஏதோ தவறாக இருக்கிறது என  டாரோன்ச் உணர்ந்தார்.

பிறகு வேகமாக காரின் கதவை தள்ளித் திறந்தவர், பதற்றத்தில் தனது செருப்பைக் கூட போட்டுக்கொள்ளவில்லை. வேகமாக ஓடியவர் சாலையில் வந்த காரை நிறுத்தி  விவரத்தை சொல்ல காவல்துறை டெட்டின் அடையாளத்தை குறித்து வைத்தது. அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் டெட் அடுத்த இரையைக் குறிவைத்தது யாருக்குத் தெரியும்?

கிறிஸ்டோபர் வைல்டர் தனக்கு தேவையான அழகான பெண்களை பல்வேறு இடங்களில் பிடிப்பார். அப்படித்தான் ஒரு பெண்ணை மால் ஒன்றில் சந்தித்தார். அந்த பெண்ணின் அழகைப் பற்றி புகழ்ந்து பேசி புகைப்படம எடுக்க சம்மதம் பெற்றார். ஒருமணி நேரத்திற்கு 25 டாலர்கள் என பேரம் பேசியபிறகு,  அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு காருக்கு சென்றார். காரில் நிறைய மாத இதழ்கள் கிடந்தன. அதில் வந்த புகைப்பட்டங்களை தான் எடுத்தது என கிறிஸ்டோபர் கூறினார். ஆனால் அதைப் பார்த்த மாடல் பெண்ணுக்கு ஏதோ  தவறாக இருக்கிறது என மனதிற்கு பட்டிருக்கிறது. இன்னொருநாள் வருகிறேன். வாய்ப்பிற்கு நன்றி என்று சொல்லி விலக முயன்றார். கஷ்டப்பட்டு பிடித்த இரை விட்டுவிடமுடியுமா? மாடல் பெண்ணை வயிற்றில் ஓங்கி குத்தி பிறகு முகத்திலும் இரண்டு குத்துகளை விட்டார். ஆம் கும், குபீர் குத்துகள்தான். கண்களின் பட்டாம்பூச்சி பறந்த மாடல் பெண்ணை காரில் தூக்கிப் போட்டு வண்டியைக் கிளப்பினார். கையில், காலில் டேப் ஒன்றை ஒட்டியிருந்தார். டிக்கியில் பெண்ணை பத்திரப்படுத்தியிருந்தார். மோட்டல் ஒன்றுக்கு வந்ததும் பெண்ணின் உடலில் இருந்த துணிகளை அவிழ்த்தார். பிறகு தானும் உடைகளை கழற்றியபிறகு சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கினார். பிறகு பெண்ணின் கண் இமைகளில் பசையை ஒட்டி டிவியில் வந்த நிகழ்ச்சியில் ஆடியவர் போல ஆடச்சொன்னார். கண் தெரியாமல்ஆட மறுத்த போது, செம்பு கம்பிகளில் நேரடியாக ஷாக் கொடுக்கப்பட்டது. துடிதுடித்துப் போனார் மாடல் பெண். பசை முழுமையாக கண்களில் ஒட்டாத காரணத்தால் இமைகள் முழுக்க ஒட்டப்படவில்லை.

கிறிஸ்டோபர் டிவி சேனலை மாற்றி அமைக்கும்போது பாத்ரூமுக்கு ஓடிய மாடல் பெண் கதவை அடைத்துக்கொண்டார். கத்தி கூப்பாடு போட்டவரை சமாளிக்க முடியாது கிறிஸ்டோபர் தப்பித்து சென்றார். பிறகு வெளியே வந்த மாடல் பெண் விடுதி மேலாளரிடம் விஷயம் சொல்லி உயிர் தப்பினார்.  பிறகு காவல்துறையிடம் அடையாளம் சொல்லி சமூகத்திற்கே  உதவினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை