தன்னம்பிக்கை இல்லாதவர்களை தாக்கும் சைக்கோபாத்கள்!
அசுரகுலம் 5
மனமென்னும்
இருட்குகை 1.0
சைக்கோபாத்களுக்கு
சொற்கள், வாக்கியங்கள் தெரியுமே ஒழிய அதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் முன் மரணம் என்று
எழுதி வைத்தாலும் அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தெரியாது. நாம் கண் மருத்துவமனையில்
பல்வேறு வேறுபட்ட எழுத்துகளை பார்த்து ஒவ்வொன்றாக சொல்லுகிறோம். அதன் அடிப்படையில் கண் பார்வை மங்கலை அறிகிறார்கள்.
ஆனால் சொல்லும் வார்த்தையில் ஒருவருக்கு அதன் பொருளே தெரியாது என்றால் என்ன செய்வது?
இப்படி குற்றங்களைச்
செய்துவிட்டு அது ஒன்றும் குற்றமல்ல என்று சொல்லும் ஆட்களை எப்படி பெண்கள் காதலிக்கிறார்கள்,
நிறையப் பேர் காதல் கடிதங்களை எழுதுகிறார்கள். பொதுவாக உலகமெங்கும் தீவிரவாத செயல்கள்,
கொலைகளைச் செய்பவர்களை அந்த காரணங்களுக்காக
நிறையப் பேர் விரும்புகிறார்கள். அதாவது, அதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.
இல்லாதபோது
நிஜத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர், தங்கள் மனதில் ஆண் என்றால்
இப்படித்தான் எதற்கும் பயப்படாமல் இருக்கவேண்டும். அவன்தான் ஆண்மகன் என் நினைக்கிறார்கள்.
அதாவது, முத்துவீரன் நண்பர்களைக் காப்பாற்ற துப்பாக்கியை எடுத்து சுட்டுத்தள்ளியதும்
ஒரு குரல் சொல்லும். இனி நீதாம்லே… முத்து என அதே உற்சாக குரல்கள்தான் இங்கும் ஒலிக்கின்றன.
சில ஆண்கள்,
தங்களை ஏமாற்றிவிட்டு இன்னொரு ஆணுடன் சுற்றும், குற்றங்களை செய்யும் பெண்தோழிகளை விட்டுக்கொடுக்காமல்
பேசுவார்கள். நம்புவார்கள். இதன் காரணமாக அவர்களும் ஒருநாள் காவல்நிலையத்தில் விசாரணைக்கு
அழைக்கப்படுவார்கள். அதுவரைக்கும்கூட அப்படியேதான் இருப்பார்கள். இதெல்லாம் உளவியல்
செய்யும் தந்திரம். அதாவது, அவர்களுக்கு பிறர் மூலமாக பெண்தோழி பற்றிய உண்மை தெரிய
வந்திருக்கும். ஆனால் அந்த வலியை மறைக்க அவள் அப்படியல்ல என முட்டுக்கொடுத்து வலியை
மறைப்பார்கள். மறப்பார்கள்.
சைக்கோபாத்கள்
தங்களை விரும்பும் அல்லது தன்னைப் பற்றி முழுக்க தெரியாத பெண்களை திருமணம் செய்துகொள்வார்கள்.
அவர்களுக்குச் செய்யும் குற்றங்களிலிருந்து திருமணம் மூலம் பாதுகாப்பு கிடைக்கிறது.
நினைத்தபடி குற்றங்களை அப்படியே மறைமுகமாக தொடரமுடியும். அப்புறம் என்ன? குடும்பம், குழந்தை என வந்துவிட்டால் பெண்களால் நினைத்தபடி
நகர முடியாது. எனவே, இப்போது கணவரிடம் சண்டை போட்டால் அவர் என்னை விட்டுவிட்டு, குழந்தையை
கைவிட்டுவிட்டு சென்றுவிடுவார். எனவே நான் அவர் என்னிடம் எப்படி நடந்துகொண்டாலும் நல்லவிதமாக
நடந்துகொள்ளவேண்டும். அதை அவர் உணர்ந்தால் பிற பெண்களை நாட மாட்டார். என்னை ராணிபோல
பார்த்துக்கொள்வார் என அப்பாவியாக நம்புகிறார்கள். ஏன் இப்படி கருப்பு வெள்ளை கால தியாக
குத்துவிளக்காக பெண்கள் இருக்கிறார்கள்? இந்த வகை பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைவு,
பிறரை சார்ந்து வாழ்வார்கள். தனிப்பட்ட அடையாளம் ஏதும் இருக்காது. எப்படி என்றால் இனிமே
அப்படித்தான். அவர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. இப்படி நினைத்து வலி பொறுக்கும் அவமானம் சகிக்கும்
பெண்களுக்கு அதற்குப் பிறகும் கூட நல்ல விஷயங்கள் ஏதும் நடக்கப்போவதில்லை. கடைசிவரைக்கும்
உடல், மனம், பொருளாதாரம் என அனைத்திலும் நசுக்கப்பட்டு ஒடுக்கப்படுவதை அவர்களுக்கு
கிடைக்கும் பரிசு.
தனியாக இருக்கும்
பெண்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வாழுபவர்களையே குறிவைத்து தங்களுக்கு ஏற்ப
அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக