சிறுவயது குற்றவாளிகளை அடையாளம் கண்டு தடுப்பது எளியது அல்ல!

 








அசுர குலம் 5

மனமென்னும் இருட்குகை 1.0

 

குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்கு எல்லாம் இப்படி பெயர் வைப்பது நல்லதா என சிலர் நினைக்கலாம். ஆனால் இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. அவர்கள் குழந்தைகளை எந்த மாதிரியான சூழலில் வளர்க்கிறார்கள். அதன் மூலம்  அவர்களின் மனம் எப்படி விளைகிறது என்பதன் அடிப்படையில்தான் அறிகுறிகளைப் பார்க்கவேண்டும். உளவியலாளர்கள் சிறுவர்களை ஆராய்ந்தபோது பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயது வரை சோதித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பலரும் வயது வந்தவர்களைப் போன்ற தன்மையில் இருந்தனர்.  சைக்கோபதி செக்லிஸ்டில் சிறுவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர்.

இளைஞர், வாலிபர் ஆகியோரிடம் அவர்களின் மனநிலை பற்றி பேசும்போது தங்களை தற்காத்துக்கொள்ள முனைவார்கள். அந்த இயல்பு சிறுவர்களிடம் இல்லை என்பதுதான் மகிழ்ச்சியான ஒரே விஷயம். தன்னிடமுள்ள வன்முறையான குணத்தை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு சிறுவன், எனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. நான் ஏதேனும் பிரச்னையில் சிக்கிக் கொள்ளும்போது பெற்றோர் அதிகம் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு நல்ல நேரம் இருக்கும் வரையில் கவலைப்பட ஏதுமில்லை. நான் எப்போதும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளவே நினைக்கிறேன் என்றான்.  

தெருவில் வாழும் ஆதரவற்றவர்களை தாக்கி பொருட்களை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருந்தான் அந்த சிறுவன். அவர்கள் காவல்துறையிடம் புகார் கூற மாட்டார்கள் என்பதால், அவர்களை எளிதாக தாக்கி கொள்ளையடிக்க முடிந்தது என சிறுவன் கூறினான்.  பெற்றோரிடமிருந்து பணத்தைத் திருடுவது, பள்ளியில் உள்ள மாணவர்களை அடித்து மிரட்டி மிட்டாய், பொம்மைகளைப் பிடுங்குவது, உள்ளூர் கடைகளில் பொருட்களை திருடுவது என சிறுவன் வாழ்ந்து வந்திருக்கிறான்.

இந்த சிறுவனைப் பொறுத்தவரை இவனுக்கு மோசமான வாழ்நிலை கிடையாது. வறுமையிலும் இல்லை.

சமூகம், தன்னைக் காப்பாற்றிக்கொண்டு எப்படி இத்தகைய சிறுவர்களின் உரிமைகளை காப்பாற்றுவது?

சமூகத்தில் இதுபோல மனநல குறைபாடு கொண்டவர்கள் அதிகரிக்கும்போது அது சமூகத்தை அழிக்கும் ஆபத்தாக மாறும். இதை உடனே கருத்தில் கொண்டு சைக்கோபாத்களுக்கான சிகிச்சையை அளிப்பது அவசியம். இல்லையென்றால் ஏற்படும் பாதிப்புகளை நம் நினைத்தே பார்க்க முடியாது. அந்தளவு வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும்.

புற்றுநோய்க்கு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு என்ன பிரயோஜனம்? ஆனால் அதுதான் இன்று பொது சமூகத்தில் நடந்து வருகிறது? அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்றால் அதை செய்தால்தான் ஒருவரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில கடினமான முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும்.

அமெரிக்காவில் அறுபது, எழுபதுகளில் சிறுவர்கள் நிறைய கொலை, வல்லுறவு, கொள்ளை, வன்முறை தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டார்கள். இவர்கள் சிறுவர் காப்பகங்களும் நிரம்பி வழிந்தன. இதில் சென்று சில மாதங்கள் இருந்தவர்களும் வெளியே வந்தபோது பயிற்சி பெற்ற குற்றவாளிகளாக இருந்தன. இதை சீரமைக்க அப்போது எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.

ஒன்பது வயது சிறுவன், தனது பள்ளி நண்பர்களை கத்தி முனையில் வல்லுறவு செய்து தாக்கினான். இவனை கைது செய்ய முடியாது. அப்படி செய்தால் அவனால் பாதிக்கப்பட்டவர்களை விட மோசமான நிலையை சிறுவன் அடைவான் என அமெரிக்க குழந்தை உரிமை பாதுகாப்பு அதிகாரி கூறினார். இப்படி சிறுவன் குற்றச்செயல்களை செய்வது என்பது இயல்பானது அல்ல. மேலே கூறியதும் மிகைப்படுத்தப்பட்ட டெய்லி பூந்தியில் எழுதும் செய்தியும் அல்ல.

சிறுவயதில் குற்றச்செயல்களில் ஈடுபடுவர் வளர்ந்து என்ன மாதிரியான மோசடிகளைச் செய்வார், ஒருவேளை அவர் அரசியல்வாதியாக மாறலாம், கொலை குற்றவாளியாகவும் மாறலாம். அனைத்துக்குமே வாய்ப்புள்ளது.


கருத்துகள்