மாரத்தான் வல்லுறவு - பாபியின் மனதிலுள்ள வக்கிரத்தின் காரணம்

 













1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினேழு வயது இளம் பெண் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதரிலிருந்து ஒருவர் வேகமாக வந்து அந்த பெண்ணை மறித்து, கடத்திச் சென்றார். கத்தி, துப்பாக்கியை வைத்திருந்தவர் லிசா என்ற இளம்பெண்ணை கண்களை துணியால் கட்டி கடத்தினார். கட்டில் தெரிந்த இடைவெளியில் அந்நபர் கொண்டு வந்த காரை மட்டுமே பெண் பார்த்தாள். தனது வீட்டுக்கு கூட்டிச் சென்றவர், அந்த பெண்ணை உடைகளை கழற்றச் சொன்னார். தொடர்ந்து 26 மணிநேரங்கள் மாரத்தான் வல்லுறவு செய்தார். குளிப்பதைக் கூட அந்த பெண்ணுடன் சேர்ந்து செய்தார். அந்த பெண் உயிர்பயத்தில் தன்னை ஏதும் செய்துவிடாதே  என கெஞ்சினார். முதலில் ஆணுறுப்பை சுவைக்கச் சொன்ன மனிதர் பிறகுதான் வல்லுறவில் இறங்கினார்.

அப்போது தன்னை கடத்திய மனிதர் விடுதலை செய்ய மாட்டார் என உணர்ந்திருந்தார். எனவே அவரது நம்பிக்கையைப் பெற்றால் உயிர் வாழலாம் என நினைத்தார். எனவே நான் உன்னை விரும்புகிறேன். நீ சொன்னதை செய்கிறேன் என சொன்னார். இதனால் நம்பிக்கை பெற்ற மனிதர் தேவடியா என்று சொல்லியதை மாற்றி பேபி என அழைக்கத் தொடங்கினார். அவளை தன் கூடவே வைத்திருக்க விரும்புவதாக சொன்னவர், அவளோடு சேர்ந்து செய்த உடலுறவு சலித்துவிட்டது என்று கூறி லிசாவை ஓரிடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

நாளிதழ்களில் ஏதாவது விலைக்கு உள்ளது என்று சொல்லி பெண்கள் விளம்பரம் கொடுத்தால் அந்த பெண்களை தேடிச்சென்று வல்லுறவு செய்வது அவரது வழக்கம். அனைத்து பெண்களும் வேசிகள், அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே பாபியின் ஒரே கருத்து. தன்னை நம்பியதால், விரும்புவதால் பாபி  லிசாவை உயிரோடு விட்டார். இல்லையென்றால் அந்த பெண்ணும் அப்பளமாகி நொறுக்கப்பட்டிருப்பார்.

பிடிஎஸ்எம் முறையை கையாண்டு அதில் தன்னை நம்பி வந்த பெண்களை கொன்று பேரல்களில் உடலை ஊற வைத்த ஆள்தான் ஜான் ராபின்சன். இவரை நம்பி உளவியலாளர் விக்கி என்ற பெண் கான்சாஸ் நகரத்திற்கு வந்தார். செக்ஸ் அடிமையாக தன்னுடன் ஒப்பந்தம் செய்துகொண்டால் விக்கியின் உளவியலாளர் தொழில் சிறக்க உதவி செய்கிறேன் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் அப்படி ராபின்சன் எதையும் செய்யவில்லை. மாறாக விக்கியின் செக்ஸ் பொம்மைகளை திருடிக்கொண்டார். தான் சொல்வதை மட்டுமே அடிமை கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தியவர், விக்கியின் கழுத்தில் காலரை மாட்டினார். விக்கியின் அனுமதியின்றி அவரது நிர்வாண புகைப்படங்களை போனில் பதிவு செய்தார். இதுபற்றி விக்கி காவல்துறையில் புகார் செய்ய இதற்கெனவே காத்திருந்தவர்கள் அவரை கைது செய்தனர். அவரது வீட்டையும் நாயுடன் சோதனை செய்து இறந்துபோன பெண்களை பிணமாக கண்டெடுத்தனர்.

விக்கி சரியான நேரத்தில் காவல்துறைக்கு புகார் கொடுத்து தப்பித்தார். இல்லையெனில் அவரையும் கொன்று ராபின்சன் உப்புக்கண்டமாக்கி இருப்பார்.

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்