காதலியின் லட்சியக் கனவுக்காக காதலை ஒத்திவைக்கும் காதலன்! - தொலி பிரேமா - ஏ.கருணாகரன்

 

தொலி பிரேமா 1998

பாலு, அனுவை முதல் முறையாக பார்க்கும் காட்சி
தொலி பிரேமா 1998 - இறுதிக்காட்சி தொலி பிரேமா

பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி, அலி, வேணு, நாகேஷ்

இயக்கம் ஏ.கருணாகரன்

இசை தேவா


பாலு என்ற படிப்பில் தேறாத இளைஞன் ஹார்வர்ட் பல்கலையில் சேரும் லட்சியத்துடன் படிக்கும் இளம்பெண்ணை காதலிக்கிறான். அவன் காதல் நிறைவேறியதா என்பதே கதை.

படம், வெளிவந்த காலத்தில் அன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த கோக், பைக் என பல்வேறு விஷயங்களை அடையாளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். அதனால் படம் பார்க்கும்போது நிறைய பேருக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வரலாம்.

காதலே லட்சியம் என நினைக்கும் இளைஞர், ஆராய்ச்சிப் படிப்பே லட்சியம் என வாழும் இளம்பெண். இதுதான் இருவருக்குமான முரண்பாடு.

பாலு, படத்தில் நாயகி சொன்னது போல உருப்பட்டு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அவர் தனது காதலை இளம்பெண்ணிடம் சொல்லிவிடுகிறார். அவரின் பெரியப்பாவான நாகேஷ் எப்படி நிம்மதி அடைகிறாரோ அதே திருப்தியை படத்தை பார்க்கும் பார்வையாளர்களும் அடைகிறோம்.

 காதலித்தால் கூட கல்யாணம் செய்துகொள்ள விரும்பினால் கூட பெண்ணின் கனவுக்கு குறுக்கே நிற்காத பாலுவின் பாத்திரம் முக்கியமானது. ஒருவரின் உயிரைக் காப்பாற்றியவரை எளிதாக மறந்துவிட முடியுமா? அனுவும் அப்படித்தான் இருக்கிறார். இறுதியில் பாலுவை உன்னை எதற்கு ஏர்போர்ட் வரச்சொன்னேன் தெரியுமா என்று சொல்லும்போதுதான் அவர் கண்ணில் நட்பை தாண்டிய பிரியம் கண்ணில் தெரிகிறது.

தொலி பிரேமா படம் கிளாசிக்கானதுதான். ஒளிப்பதிவு, பாலுவின் குடும்ப பாத்திரங்கள் என அனைத்துமே கச்சிதமான ஒழுங்குடன் உள்ளன. அதுவும் தன்னைத்தானே சுயகிண்டல் செய்துகொண்டு பாலு, அனுவின் முன் நிற்பது, அனுவை மனச்சோர்வு ஏற்பட்டபோது பார்த்து மெல்ல உற்சாகம் அடையும் காட்சி, அதற்குப் பிறகு கொசு மருந்து அடித்த புகையில் அனுவைப் பார்ப்பது என நாயகியைப் பார்க்கும்போது நாயகனுக்கு ஏற்படும் உற்சாகம் ஒளிப்பதிவாளருக்கும் ஏற்பட்டது போல தெரிகிறது. நாயகியைக் காட்டும் காட்சிகளிலெல்லாம் ஒளிப்பதிவு புத்துயிர் பெறுகிறது.

படத்தில் சண்டைகள் வேண்டுமென்று இரண்டு சண்டைக் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அவை இல்லாதபோதும் கதையில், திரைக்கதையில் எந்த பற்றாக்குறையும் ஏற்படப்போவதில்லை. அதாவது, ரவி பாபு, பாலுவின் தங்கையை கிண்டல் செய்யும் காட்சி., அடுத்து கல் குவாரி அருகே வரும் கிரிக்கெட் பேட் சண்டைக் காட்சி.  

படம் நிறைய மாநில அரசு விருதுகளை வென்றதுதான். ஆனால் பாடல்கள் எல்லாமே ஆங்கில ஆல்ப பாடல்களைப் போன்றே உள்ளது. இசை தேவா.

பவன் கல்யாணை இறுதிக்காட்சியில் அவரைத் திட்டிக் கொண்டேயிருக்கும் அப்பா தழுவிக்கொள்வது நெகிழ வைக்கும் காட்சி. பாலுவாக நடித்துள்ள பவன் கல்யாண், அவரது தங்கை, அனுவாக நடித்துள்ள கீர்த்தி ரெட்டி, பாலுவின் பெரியப்பா நாகேஷ் ஆகியோர்  படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.  

காதலே லட்சியம்

கோமாளிமேடை டீம்

தொலி பிரேமா என்றால் அண்மையில் வருண் தேஜ் நடித்துள்ள படம் முன்னால் வரும். அந்தப்படம் அல்ல. தொலி பிரேமா 1998 என தேடுங்கள். அதுதான் கிளாசிக்கான பவன் கல்யாணின் காதல் படம்.  


நன்றி –

யூட்யூப் – ஷாலிமார் சினிமா சேனல்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை