இடுகைகள்

தேசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாடா - தேசத்தை வளர்ந்த நிறுவனத்தின் கதை - ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன்

 மறுவாசிப்பு நூல்கள் டாடா - நிலையான செல்வம்  ஆங்கிலத்தில் ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் மூல நூல் -கிரியேஷன்ஸ் ஆப் வெல்த் வணிக நூல் டாடா குழுமம், நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. அதாவது அதன் குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொழிலை நடத்தி வருகின்றன. பார்சி இனத்தவர்களே டாடா குழுமத்தின் இயக்குநர்கள், தலைவர்கள்.  365 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது முதல்முறையிலேயே டாடா குழுமத்தினர் எந்தளவு உயரிய கொள்கை கொண்டு உழைக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு ஆட்படுவார்கள். நூலை எழுதிய நூலாசிரியர் லாலாவின் நோக்கமும் கூட அதுதான். ஆனால், அவர் டாடா நிறுவனத்தில் வேலையைப் பெற்றுள்ளதும், இந்த நூலுக்கு ரத்தன் டாடா உரை எழுதிக் கொடுத்ததும் நூலை சற்று பின்னுக்கிழுப்பது போல தோன்றுகிறது. இதை நூலை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.   ஒரு பத்திரிகையாளராக லாலா நூலை எழுதி இருந்தால் அந்த நூலில் டாடா குழுமத்தில் உள்ள பிரச்னைகள், செயல்பாட்டில் உள்ள தவறுகள், அவர்கள் மீது மக்கள் கூறிய புகார்கள், ...

சோனம் வாங்சுக் எனும் கல்வியாளர் லடாக்கை எப்படி மாற்றினார்? - லடாக்கில் உதிக்கும் சூரியன்

படம்
லடாக்கில் உதிக்கும் சூரியன் தன் அறிவைக் கொண்டு சமூகத்திற்கே புதிய பாதை அமைக்கும் மனிதநேய மனிதர்களுக்கு மகுடம் சூட்டி உச்சிமுகர்ந்து பாராட்டும் ரோலக்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி(லாஸ் ஏஞ்சல்ஸ் 2015) அது. கண்கவர் மேடையில் இந்தியாவிற்கான தனித்துவ கனவை தன் மூளையில் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார் சிறிய மனிதரொருவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள லடாக்கின் ப்பே என்ற கிராமத்தைச் சேர்ந்த அம்மனிதர், பாரம்பரிய உடையில் மக்கள் பங்களிப்புடன் தான் கட்டிவரும் சுற்றுச்சூழலுக்குகந்த பல்கலைக்கழகம் பற்றிக் கூறியது அங்கிருந்த பலரது புருவத்தையும் உயர வைத்தது. கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் 3 இடியட்ஸ் ஹிந்தி திரைப்படத்தின் அமீர்கான் கேரக்டரான புன்சுக் வாங்குடுவின் அசல் இவர்தான் என்றால் உங்களுக்கும் புரிந்திருக்குமே! 1988 ஆம் ஆண்டு லடாக்கில் அப்பகுதி மாணவர்களுக்காக செக்மோல்(Student's Educational and Cultural Movement of Ladakh(SECMOL)) என்ற பள்ளியை தொடங்கி நடத்திவரும் சோனம் வாங்சுக், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரி. பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா செல்ல விசாவுக்காக க்யூவில் ந...

சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..

படம்
  ஜேபுதொங்கா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது  ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.  சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமண...

காதலியைத் தேடுவதற்காக தண்ணீர் கேன் போடும் இதய அறுவைசிகிச்சை வல்லுநர்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

படம்
                    டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் 10 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்    Written by: Park Jin-woo, Kim Joo Directed by: Jin Hyuk, Hong Jong-chan     தண்ணீர் கேன் விற்பனை செய்பவன் , குழந்தையின் உடைந்த விரலை சரி செய்கிறான் . குழந்தையின் அப்பாவுக்கு ஆபரேஷன் செ்ய்துவிட்டு மாயமாகிறான் . யார் அவன் என்பதை பார்வையாளர்கள் அறிந்தால் அதுதான் டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் . இந்த தொடர் வெறும் காதல் மட்டும் கொண்டது அல்ல . வடகொரியா , தென்கொரியா என இருநாட்டு அரசியலும் தீவிரமாக பேசப்படுகிறது . இதில் எதிர்மறையாக திடமாக காட்டப்படும் நாடு வடகொரியாதான் . இரு நாட்டு அரசியல்வாதிகளும் எப்படி மக்களை பயன்படுத்தி தங்கள் நலன்களை வளர்த்துக்கொள்கிறார்கள் , அதற்கு பலியாகும் மனிதர்கள் , அவர்களின் குடும்ப வாழ்க்கை என உணர்ச்சிகரமாக தொடரை எடுத்திருக்கிறார்கள் . பார்க் குவான் பள்ளி சென்று கொண்டிருக்கும் சிறுவன் . அவனது அப்பா , மியாங் சாங் மருத்துவமனையில் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரை வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்ச...

காந்தி கேட்ட நான்கு கேள்விகள்! - காந்தி 150

படம்
பின்டிரெஸ்ட் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு விழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளது. காந்தி, ஏன் பிற தலைவர்களை விட முன்னே நிற்கிறார்? காரணம் தான் வலியுறுத்திய கொள்கைகளை அடையாளமாக்கினார். அவரின் கண்ணாடி , இடுப்பில் உடுத்திய ஒற்றைத்துணி, பாக்கெட் வாட்ச், கைத்தடி என அனைத்துமே எளிய நாடோடி  மனிதருக்கானவை. அவரை சந்திக்கும் எந்த வெளிநாட்டவருமே அவரை நாடோடி பக்கிரியாகவே கருதுவார்கள். ஆனால் அவரின் எழுத்துகள், சிந்தனைகள் வழி அவரை அணுகுபவர்கள் அவர்மீதான நேசத்தில் விழுவார்கள். காரணம், யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகர எளிமையான எழுத்து அவருடையது. இன்றும் அவரது கொள்கைகளைப் படித்து அதன்பால் ஈர்ப்பு கொண்ட காந்தியர்கள் உண்டு. இவர்கள்தான் இன்று சமூகத்தை இயக்கி வருகிறார்கள். மதம் காந்தி இறுதிவரை இந்து மத சார்பானவராகவே இருந்தார். மத வர்ணங்களை ஆதரித்தார். அதில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றார். மதம் என்பதை மக்களுக்கு வழிகாட்டும் பாதையாக, உண்மையை கண்டறிய உதவும் ஒளியாக அவர் கண்டார். ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அவலத்திற்குள்ளாக்க...