அதிக நேரம் வேலை செய்யக்கூடாது என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கி கூறுகிற நூல்!
டு நத்திங் - ஹவ் டு பிரேக் அவே ஓவர் வொர்க்கிங் செலஸ்டி ஹெட்லி கட்டுரை நூல் 167 பக்கங்கள் பொதுவாக இந்தியர்கள் விடுமுறை எடுக்காமல் கடுமையாக உழைத்து மேற்கத்திய ஆட்களுக்கு நிறைய சம்பாதித்து கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் சிறந்த மேனேஜர்களாக இருப்பார்களே ஒழிய கண்டுபிடிப்பாளர்களாக மாறவில்லை. அப்படி அதிக நேரம் உழைப்பதால் என்ன பாதிப்பு தனிமனிதர்களுக்கு, சமூகத்திற்கு, ஏற்படுகிறது என்பதை எழுத்தாளர் செலஸ்டி ஹெட்லி நிதானமாக விவரித்து உள்ளார். அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்வது ஆசிய நாடுகளில் பெரிதும் போற்றப்படுகிற பழக்கம். ஆனால், மேலைநாடுகளில் அதை திறமையின்மையாக பார்க்கிறார்கள். அங்கும் ஆசியர்கள் சென்று அதே பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். உண்மையில் அதிக நேரம் வேலை செய்வதன் அர்த்தம் என்ன என்பதை நூலாசிரியர் ஆராய்ந்து, நிறைய நூல்களைப் படித்து விளக்கியிருக்கிறார். அவர் ஆய்வுப்பூர்வமாக சொல்லும் தகவல்கள் எவையும் மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை. அடிப்படையில் அலுவலகம் முடிந்தால் வீட்டுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது ஆகியவற்றை தேசப்பற்று, நாட்டை காப்பாற்றுவது, பொருளாதார வலிமை, பணவீ...