திறமையான வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவை! - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

 




ஹர்பஜன் சிங்








கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங்

நேர்காணல்

இந்தியாவுக்கு விளையாட வந்துள்ள ஆஸ்திரேலிய அணிகளில் தற்போதைய அணி, இதுவரை வந்து விளையாடியதில் மிகவும் பலவீனமான அணியாக உள்ளதா? எப்படி சொல்கிறீர்கள்?

முன்னர், இந்தியாவில் விளையாடுவதற்கு வந்த ஆஸி. அணியைப் பார்த்தாலே வேறுபாடு தெரியும். அதற்காக முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னே போகவேண்டாம். எனக்குத் தெரிந்து இப்போது வந்து விளையாடும் அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது இங்கு நான் கூறுவது திறமையைப் பற்றியல்ல. அவர்களின் மனநிலையைப் பற்றி…

முந்தைய அணி வீரர்களைப் போல இவர்களால் களத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த அணி, ஆஸியைப் போல இல்லை. நாங்கள் விளையாடிய ஆஸி. அணியைப் போல இல்லை என்று கூறுகிறேன்.

அணியில் என்ன போதாமை இருக்கிறது என கூறுகிறீர்களா?ஆ

ஆஸி அணி, எப்போதும் ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் வருவதற்கு முன்னரே பல்வேறு திட்டங்களைத் தீட்டி வைத்திருப்பார்கள். விளையாடும் நாட்டின் தட்பவெப்பநிலை பற்றிய தீர்க்கமான அறிவு ஆஸி அணிக்கு உண்டு. இதனால்தான் அவர்கள் பிற அணிகளை விட அதிக வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வந்து விளையாடியபோது கூட அப்படித்தான் இருந்தனர்.

இப்போது இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸி அணியிடம் எந்த திட்டமும் இல்லை. முதல் பந்தை எதிர்கொண்டபோது, ஸ்பின்னாகி வந்ததை. அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பந்து இப்படி சுழன்று வருவது இங்கு சகஜம். எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாக நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

2012-13 காலகட்டத்தில் இப்படித்தான் ஆஸி. அணி இப்படித்தான் தனது விக்கெட்டுகளை இழந்தது. அந்த இடத்தில் சற்று தடுமாறினாலும கூட பிறகு சமாளித்துக்கொண்டு நன்றாக விளையாடினார்கள். ஆனால் இப்போதுள்ள அணி முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து தடுமாறத் தொடங்கிவிட்டார்கள். களம் எப்படி இருந்தாலும், அஸ்வின், ஜடேஜா எப்படி பந்துவீசினாலும் நீங்கள் சவால்களை எதிர்கொண்டு விளையாடினால் விளையாட முடியும். 200-250 ரன்களை அடித்தாலே அது நல்ல ஸ்கோர்தான். ஆனால் இந்த ஆஸி அணியிடம் விளையாடுவதற்கு எந்த திட்டங்களும் இல்லை.

இந்திய கிரிக்கெட் போர்டு, தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அதிக சம்பளம் கொடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த பதவியை ஏற்பீர்களா?

பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவர் என இருவருக்கும் ஒரே சம்பளம் கொடுத்தால் அதை முயன்று பார்க்கலாம். ஏன் கூடாது? பயிற்சியாளர் தனது கிரிக்கெட் அணியுடன் இருந்து , விளையாடுவதற்கான திட்டமிடல்களை செய்வார். தேர்வுக்குழுத் தலைவர் பதவியும் இந்த வகையில் முக்கியமானதுதான். பயிற்சியாளர், அணித்தலைவர் ஆகியோருக்கு தேவைப்படும் வீரர்களை தேர்வுக்குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் அவருடைய பதவிக்கு எந்த மதிப்பும் இருக்காது.

ஆசியா கோப்பை பிரச்னையில், இந்திய கிரிக்கெட் போர்டு எடுத்த முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்திய கிரிக்கெட் போர்டு எடுத்த முடிவு சரியானதுதான். நாம் நமது அணியை பாக்கிற்கு அனுப்ப கூடாது. அண்மையில் அங்கு கராச்சி மைதானம் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. எந்த சமயத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத இடத்திற்கு கிரிக்கெட் அணி வீரர்களை அனுப்பக்கூடாது?

வீரர்கள் அதிக காலம் விளையாடுவதை உறுதிப்படுத்த அவர்களின் வேலைச் சுமையை இந்திய கிரிக்கெட் போர்டு கவனிக்க வேண்டும் என் நினைக்கிறீர்களா?

ஒரு எந்திரம் நன்றாக வேலை செய்யும். ஆனால் அதை அதிகம் பயன்படுத்தினால் விரைவில் பழுதாகிவிடும். பந்துவீச்சாளர் பும்ரா அல்லது வேறுவீரர் என யாராக இருந்தாலும் இதுதான் நிலைமை. யுவேந்திர சாகலைப் பாருங்கள். இன்று அவரை யாரும் அணிக்கு எடுக்க கூட யோசிப்பதில்லை. இத்தனைக்கும் அவர் பந்துவீச்சில் நிறைய சாதனைகள் செய்தவர்தான். அதைப்போலத்தான் அஸ்வினும் கூட.

விளையாடும் வீரர்களுக்கு சரியானபடி ஓய்வுகொடுத்தால் அவர்களால் நீண்டகாலத்திற்கு விளையாடமுடியும். அவ்வாறு இல்லாதபோது, அவர் உடல் காயம்பட்டு மீள ஆறுமாதங்கள அல்லது ஒரு ஆண்டு கூட ஆகலாம்.  இதை உறுதியாக கூற முடியாது.

 

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்