ஆதரவற்றோரைக் கொன்றால் உடையும் லாபம், உடலும் லாபம்!

 











‘’பழைய துணிகளை ஆதரவற்றோருக்காக கொடுங்கள்’’ என சிலர் வந்து வீட்டு படியேறி கேட்டிருப்பார்கள். அப்படி பெற்ற துணிகளை சலவை செய்து ரோட்டோரக்கடையில் போட்டு விற்பார்கள். இதுபோல மோசடிகள்  உலகமெங்கும் நடப்பவைதான். அதைத்தான் ஹார்மன் செய்தார். இவர் ஆதரவற்றோரை கொலை செய்து உடலை கறிக்கடைக்கும். உடைகளை பழைய துணிகள் விற்கும் சந்தையில் விற்றார்.

1879ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹனோவரில் பிறந்தவர் ஹார்மன். ரயில்வேயில் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் தந்தைக்கு ஆறாவது பிள்ளை. அம்மா செல்லமாக வளர்ந்தார். இதனால், அப்பாவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். சக நண்பர்கள் விளையாட்டு என வெளியில் சுற்றும்போது ஹார்மன் பொம்மைகளை வைத்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். பதினாறு வயதில் ராணுவப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், வலிப்பு இடையறாமல் வந்த காரணத்தால் படிப்பை தொடர முடியவில்லை. திரும்பி ஹனோவருக்கு வந்த பிறகு சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த காரணத்தால், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஆறே மாதங்களில் அங்கிருந்து தப்பி ஓடினார்.

சிறு குற்றங்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது ஆகியவற்றை செய்து வந்தவருக்கு, திருமணம் நிச்சயமானது. அந்தபெண்ணுடன் உடலுறவு கொண்டு, கர்ப்பிணியாக்கிவிட்டு ராணுவப்பணிக்கு சென்றார். 1903ஆம் ஆண்டு ராணுவப் பணியிலிருந்து திரும்பியவர், அப்பா சொல்படி உணவகம் ஒன்றை நடத்தினார். ஆனால் அதில்  பெரிய ஆர்வம் காட்டவில்லை. எனவே, அந்த வணிகமும் தோற்றுப்போனது. இந்த நேரத்தில் கடை ஒன்றுக்கு சென்று கொள்ளையடித்தார். அந்த வழக்கில் மாட்டி ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

 1918ஆம் ஆண்டு பிணையில் வந்தவர், கள்ளக்கடத்தல் குழுவில் செயல்படத் தொடங்கினார். இந்த வேலையில் நிறைய பணம் சம்பாதித்தார். அதேநேரம் அங்குள்ள காவல்நிலையத்திற்கு துப்பு கொடுப்பவராக வேலை செய்து டிடெக்டிவ் ஹார்மன் என்ற பெயரை சம்பாதித்தார். அப்போது போர் நடந்த காரணத்தால் வீடற்ற மக்களின்  எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்களை  ஹார்மன் வேட்டையாடத் தொடங்கினார்.

ரோத் என்ற இளைஞனை முதலில் கொலை செய்தார். இவர் காணாமல் போவதற்கு முன்னர் ஹார்மன்தான் சந்தித்தார் என்று அவரது பெற்றோர் கூறினர். எனவே, ஹார்மனின் வீட்டை காவல்துறை சோதனை செய்தது. ஆனால் அங்கு சந்தேகப்படும்படி எதுவும் கிடைக்கவில்லை. உண்மையில் அவரது வீட்டில் அடுப்பின் கீழ்தான் ரோத்தின் வெட்டப்பட்ட தலையை செய்தித்தாளில் சுற்றி வைத்திருந்தார். காவல்துறையினர் டேபிள், கப்போர்டு என சோதித்துவிட்டு ஆதாரம் கிடைக்கவில்லை என்று வந்துவிட்டனர்.

ஹார்மன் ஒன்றும் தனியாள் அல்ல. அவருக்கு காதலரும் உண்டு. கிரான்ஸ் என்பவர்தான் பழைய துணிகளை விற்பதில் உதவினார். பிறகு, ஆதரவற்ற சிறுவர்களை காசுக்காக கொல்வதை நடைமுறைப்படுத்திய ஹார்மனின் படைத்தளபதி. சிறுவர்களை வீடு, சாப்பாடு என ஆசை காட்டி அழைத்து, தொண்டையைக் கடித்துக் கொல்வது ஹார்மனின் பாணி. அவர்களை வல்லுறவு  செய்துவிட்டு உடலை துண்டாக  வெட்டி மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறியோடு கலந்து விற்று வந்தார். உண்மையில் இப்படி விஷயங்கள் நடக்கும்போது ஹனோவர் பகுதி காவல்துறை, நகர நிர்வாகம் அமைதியாக இருந்தது. அநேகமாக,  காசு சிறப்பாக வேலை செய்திருக்கிறது என புரிந்துகொள்ளலாம்.

லெய்ன் என்ற ஆற்றின் அருகில்தான் கொன்ற சிறுவர்களின் மிச்சம் மீதிகள் புதைக்கப்பட்டன. ஆற்றின் கரையில் மண்டையோடுகள் எடுக்கப்பட்டபோது நகர நிர்வாகம் பெரிதாக கவலைப்படவில்லை. ஏராளமான மனித எலும்புகளை எடுத்து தொகுத்து பார்த்தால், 27 நபர்கள் என எண்ணிக்கை தெரிந்தது. ஆதரவற்ற சிறுவன் அணிந்த கோட், ஒன்றை ஹார்மன் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டு முதலாளியின் மகன் அணிந்திருந்தார். இதைப் பார்த்துத்தான் காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. இருபதோ, நாற்பதோ எண்ணிக்கை நினைவில்லை என்று சொன்ன  ஹார்மனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது காதலரான கிரான்ஸூக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்