சிறுமிகளை, இளம்பெண்களை சித்திரவதை செய்த அரச குடும்பத்துப் பெண்மணி

 
எலிசபெத் பாத்தோரி

ஹங்கேரியைச் சேர்ந்த அரச குடும்ப உறுப்பினர்களில் ஒருவர். ராணுவத்தில் எலிசபெத்தின் அப்பா வேலை செய்தார். அந்த நாட்டில் மரியாதையான குடும்பமாக இனக்குழுவாக இருந்தது. மன்னர், நீதிபதி, பாதிரியார்  என்றெல்லாம் பதவி வகித்தவர்கள் பின்னாளில் சாத்தானை வழிபடுபவர்களாக, தாந்த்ரீகத்தில் ஈடுபடுபவர்களாக மாறினர். அந்த சமயத்தில் பிறந்த எலிசபெத், அவரது மாமாவால் பிறரை வருத்தி துன்புறுத்தி மகிழ்வதை ரசிக்கத் தொடங்கினார். பதினொரு வயதில் எலிசபெத்திற்கு திருமணம் நிச்சயமானது. பதினைந்து வயதில் மணம் செய்து கொடுக்கப்பட்டார். கணவரும் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்தான்.

கணவர் வீட்டில் இல்லாதபோது தான் வாழ்ந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். பிறகுதான், அங்கேயும் தனது பிறந்த வீட்டில் இருப்பதைப் போலவே சித்திரவதை செய்யும் அறைகளை கட்டி, கருவிகளை அமைத்துக்கொண்டார். நோ ஸ்டேட்மென்ட்ஸ் ஒன்லி ஆக்சன் என களமிறங்கிய எலிசபெத், அருகிலுள்ள கிராமங்களில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என சொல்லி படிப்பறிவு இல்லாத சிறுமிகளை, இளம்பெண்களை அழைத்து வந்தார். இப்படி வந்தவர்கள் யாரும் திரும்ப வீட்டுக்கு போகவில்லை. உயிரோடு இருந்தால்தானே போகமுடியும்.

பணிப்பெண்களின் உடலை அறுத்து, ரத்தத்தை கசியவிட்டு அதை நீரில் கலந்து குளித்தால் தனது இளமை தீராது என எலிசபெத் நம்பினார். பிறகு, பெண்களோடு சல்லாப உறவு கொண்டு அவர்களின் உடல் உறுப்புகளை கடித்து துப்பி வேதனைப் படுத்துவது, உடலின் தசைகளை அறுத்து சமைத்து, சித்திரவதைக்குள்ளானவரையே சாப்பிடச் சொல்லுவது, முலைகளை வெட்டி எடுப்பது, யோனியை மெழுகுவர்த்தி சுடரால் பொசுக்குவது என பல்வேறு கொடுமைகளை செய்தார். சித்திரவதையைப் பொறுத்தவரை குமுதம் சினிமா விமர்சனம் போல எந்த ரேட்டிங்கிலும் அடங்குவதாக இல்லை. முழுமையாக மயங்கி விழும்வரை சித்திரவதைகள் தொடர்ந்தன. எலிசபெத்தின் உறவினர்கள் அரசு பணிகளில் இருந்ததால், அவர் செய்த பிரச்னைகள் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் விஷயம் பரவலாகி எலிசபெத்தின் வீட்டுக்கு காவல்துறை வந்து ரெயடு நடத்தியது. 650 உடல்கள் மாட்டின. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். இறந்த சிறுமிகளை பெண்களை ஓநாய்களுக்கு உணவாக வீசுவது, மண்ணில் புதைப்பது ஆகியவற்றை எலிசபெத் செய்தார்.

எலிசபெத்தின் கணவரும் கூட மனைவியில் சித்திரவதை சடங்கில் பங்கேற்றிருக்கிறார். அவரே அதிர்ச்சியடையும்படி சித்திரவதை முறைகள் இருந்துள்ளன.  கணவராக இருந்தாலும் மனைவியில் ஆக்ரோஷ சித்திரவதை முறைகளை அவரால் தடுக்க முடியவில்லை. கொலைகளுக்கு தண்டனையாக எலிசபெத் அவரின் வீட்டில் காற்று வர வழி கொண்ட அறையில் அடைத்து வைக்கப்பட்டார். மூன்ற்ரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து கொடுத்த உணவை சாப்பிடாமல் பட்டினியாக இருந்து இறந்துபோனார். தனது வீட்டில் சிறை வைக்கப்பட்டது அவரை பாதித்திருக்கலாம்.  இளம்வயதில் அவரது மனதை கெடுத்த உறவுகளால், எலிசபெத்தில் வாழ்க்கை வலி நிரம்பியதாக அவரால் பிறரும் வேதனை அனுபவிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

 படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்