பெண்களை அடைத்து வைத்து மாரத்தான் வல்லுறவு கொண்ட குற்றவாளி

 











டெக்சாஸின் எல்பாசோ எல்லை அருகே உள்ள இடம்தான், சியூடாட் ஜூவாரெஸ். மெக்சிகோவில் உள்ள இந்தப் பகுதியில்தான் அதிகளவு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இங்கு,  கொலை, வல்லுறவு காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகம். 1990ஆம்ஆண்டில், தொடர் கொலைகாரர்களின் விளையாட்டு மைதானம் என மெக்சிகோவின்  ஜூவாரெஸ் அழைக்கப்பட்டது.

இங்கு, போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம். மேலும் இது தொடர்பாக இங்கு நடைபெறும் வன்முறைக் குற்றங்களின்  எண்ணிக்கையும்  அதிகம். 2003ஆம் ஆண்டு எல்பாசோ டைம்ஸ் என்ற பத்திரிகை, இங்கு ஆண்டுக்கு 340 கொலைகள் நடைபெறுவதாக கூறியது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கொலையாகும் நபர்களின்  எண்ணிக்கை  370 என எண்ணிக்கையை உயர்த்திக் கூறியது.

தொடர் கொலைகாரர்களின் நிலம், மைதானம் என கூறினாலும் இங்கு நடைபெறும் கொலைகளுக்கு எந்த கொலைகார ர்களும் பொறுப்பே ஏற்கவில்லை. காவல்துறையினர் சந்தேகப்படும் ஆட்களையெல்லாம் பிடித்து சிறையில் வைத்திருந்தனர். ஆனாலும் ஜூவாரெஸில் உள்ள பெண்கள் தெருக்களில் இறங்கே நடுங்கும் நிலைதான் அங்கிருந்தது. குற்றங்கள் குறையவே இல்லை.

தொண்ணூறுகளில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான முதல் பெண்மணி, சவிரா ஃபாரெல். இவர் வல்லுறவு செய்யப்பட்டு அடித்து கொல்லப்பட்டிருந்தார். வீரேயெஸ் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார். காவல்துறை கண்டுபிடிக்க முடியாத பெண்களின் வழக்குகளும் நிறைய  இருந்தன. கழுத்தை நெரித்தல், கத்தியால் குத்தப்படுதல், துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகிய முறைகளில் அதிகளவு கொலைகள் செய்யப்பட்டன. 1994ஆம் ஆண்டு, எட்டு வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை என காவல்துறை கூறியது.

1947ஆம் ஆண்டு பிறந்த, அப்டல் லத்தீப் ஷரீப் என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர் ஏராளமான பெண்களை வல்லுறவு செய்து சித்திரவதைக்கு ஆட்படுத்தி கொன்ற கொலைகாரர். லத்தீப் குற்றப்பாதைக்கு வந்தது எப்படி? லத்தீப்பின் சிறுவயதில் அவரின் அப்பா, உறவினர்கள் அவரோடு பலவந்த மலப்புழை வழி உடலுறவு கொண்டனர். பின்னாளில் அமெரிக்காவிற்கு வந்தவர், நியூயார்க் நகரில் குடியேறினார்.குடிக்கும் பெண்களை சீர்திருத்தும் வேலையில் புகழ்பெற்றவர். புகழ்பெற்றாலும் கூட அந்த வேலையில் நீடிக்க முடியாதபடி மோசடி செய்தார். இதனால் அந்த வேலையை விட்டு விலக நேர்ந்தது.

விலங்குகளை சித்திரவதை செய்து கொல்லும் பழக்கம் லத்தீபிற்கு இருந்தது என அவரது நண்பர்  ஜான் பாஸ்கோ கூறினார். ஜானுடன் நட்பு இருந்த காலத்திலேயே ஏதோ ஒரு பெண்ணை அழைத்து வந்து பேசிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டிருக்கிறார். பிறகு அந்த பெண்ணைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டபோது, ஜானுக்கு லத்தீப்தான் அந்த பெண்ணை ஏதோ செய்துவிட்டார் என தோன்றியிருக்கிறது. இதனால் நட்பை அத்தோடு சரி என துண்டித்துக்கொண்டிருக்கிறார்.   

1981ஆம் ஆண்டு புளோரிடாவிற்கு வந்தவர், செரோகா என்ற நிறுவனத்தில் வேதியியல் விஞ்ஞானியாக பணிக்குச் சேர்ந்தார். லத்தீபின் துறை சார்ந்த அறிவால் மகிழ்ந்த நிறுவனம் அவருக்கென தனி பிரிவு ஒன்றை உருவாக்கி கொடுத்தது. ஆனால் லத்தீபின் குற்றமனம் அவரை வேலை செய்ய விடவில்லை.

 23 வயது இளம்பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து அடைத்து வைத்து இடையறாத மாரத்தான் வல்லுறவு செய்தார். இதனால் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் சூழல் உருவானது. இந்த பெண்ணுக்கான செலவை செரோகா நிறுவனம் ஏற்றது. லத்தீப் அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் நல்லபிள்ளையாக நடந்துகொண்டார். பிறகு மீண்டும் ஒரு பெண்ணைத் தாக்கி 45 நாட்களை சிறை தண்டனை விதிக்கப்பட, இம்முறை கம்பெனி அவரை வேலையிலிருந்து நீக்கி தனக்கு ஏற்பட்ட சட்ட செலவுகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டது.     

 பிறகு கெய்ன்ஸவில்லே என்ற நகருக்குச் சென்றவர், திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணமும் நிலைக்கவில்லை. மனைவியை சுயநினைவு இழக்கும்வரை அடித்துக்கொண்டே இருந்தார். இதனால் அந்த பெண் விரைவில் விவகாரத்து பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

லத்தீப்,  தனது கால்நடைகளை பார்த்துக்கொள்ள பாதுகாவலர் ஒருவர் வேண்டும் என நாளிதழில் விளம்பரம் கொடுத்தார். அந்த வேலைக்கு வந்த பெண்ணை அடித்து உதைத்து மாரத்தான் வல்லுறவு செய்தார். பிறகு ‘’உன்னை  கொன்று காட்டில் புதைக்கும் முன்னர் கூட வல்லுறவு செய்வேன் நினைவில் வைத்துக்கொள்’’  என மிரட்டினார். இந்த வழக்கில் பெண் கொடுத்த புகாரின் பேரில், லத்தீபிற்கு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 1989ஆம் ஆண்டு பிணை கிடைத்தது.

பிறகு டெக்சாசிற்கு சென்று அங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அரசியல்வாதி ஒருவருடன் புகைப்படம்  எடுத்து தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொண்டார். ஆனால் அதனால் குற்றம் செய்வதை நிறுத்தவில்லை. அப்போதும் கூட அமெரிக்காவை விட்டுச் செல்ல போலி ஆவணங்களைக் காட்டிய வழக்கில் மாட்டிக்கொண்டார். வீட்டில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து மாரத்தான் வல்லுறவு செய்து மகிழ்ந்துகொண்டிருந்தார். அரசு, லத்தீப் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்துகொள்ள நினைத்தது. அதற்கு பதிலாக அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் ஒற்றை நிபந்தனை. அதற்கு அவர் சம்மதித்தார்.

1994ஆம் ஆண்டு லத்தீப், மெக்சிகோவின் ஜூவாரெஸில் உள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனத்தின் வேலை செய்த பெண் ஒருவர், தன்னை லத்தீப் அவரது வீட்டில் அடைத்து வைத்து வல்லுறவு செய்தார். என புகார் கொடுத்தார். தனக்கு இணங்காவிட்டால் உன்னை கொன்று லோட்டே பிராவோ எனும் பாலைவனத்தில் புதைத்துவிடுவேன் என மிரட்டினார் என இளம்பெண் கூறினார். உண்மையில் அந்த பாலைவனப் பகுதியில் நிறைய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் லத்தீப்  நிறைய கொலைகளை செய்திருப்பாரோ என காவல்துறை சந்தேகப்பட்டது.

17 வயதான எலிசபெத் என்ற பெண் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவருடன் லத்தீப் டேட்டிங் செய்தார் என காவல்துறை கண்டறிந்தது. எனவே, லத்தீப் ஒரு சீரியல் கொலைகாரர் என உறுதி செய்து நீதிம்மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதன் விளைவாக, 30 ஆண்டுகள் சிறைதண்டனை லத்தீபிற்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு  சிறை தண்டனை இருபது ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

 லத்தீப் கைதானபிறகு ஒருமாதம் கழித்து, காவல்துறை ஒரு செய்தியை வெளியிட்டது. கடந்த பதினொரு மாதங்களில் 520 உள்ளூர் மக்கள் காணாமல் போயுள்ளனர். இதில் அதிகம் பெண்கள்தான் காணவில்லை என கூறியது. இதிலிருந்தே அவர்கள் லத்தீபின் மீது கண் வைத்துள்ளது தெரியும்.

லத்தீப் கைதாகி தண்டனை விதிக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் பதினான்கு பெண்கள் கொலையானதை காவல்துறை கண்டறிந்தது. இவர்களின் தோராய வயது பத்து வயது முதல் 30 வயது ஆகும்.  இதில் பதினைந்து வயதான பெண் அட்ரியான டோரஸ். இந்த பெண்ணின் இடது மார்பக காம்பு கடித்து துண்டாக்கப்பட்டிருந்தது. வலது காம்பு கத்தியால் வெட்டப்பட்டிருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.

 லத்தீப் சாதாரண ஆள் கிடையாது. தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என மிகவும் கடினமான முயற்சிகளை செய்தார். அதில் முக்கியமானது. தான் சிறைக்குள் இருந்தாலும் கொலைகாரர்கள் வெளியே இருப்பதாக காவல்துறைக்கு மாயக்காட்சியைக் காட்டுவது . இதற்காக தி ரெபல்ஸ் என்ற உள்ளூர் ரவுடி கும்பல், காசு வாங்கிக்கொண்டு அவருக்கு உதவியது. ஆனால், காவல்துறை சான்ஸே இல்லப்பா என்று சொல்லி புரட்சிக் குழுவையும்  வழக்கில் இணைத்து தண்டனை வாங்கிக் கொடுத்தது. ஏறத்தாழ லத்தீப் செய்த கொலைகளின் எண்ணிக்கை 17 ஆகும்.

 

gif -tenor.com

கருத்துகள்