கொடைக்கானலை உருக்குலைத்து வரும் பாதரசக் கசிவு!

 






எழுத்தாளர் அமீர் சாகுல்




கொடைக்கானலில் கசியும் பாதரசம்

ஆங்கிலோ டச்சு  நிறுவனம் யுனிலீவர், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர். இதன் தொழிற்சாலை கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு தொடங்கி தெர்மோகோல் தயாரிப்பு யுனிலீவரின் தொழிற்சாலையில் நடந்து வருகிறது. இங்கு சரியான பாதுகாப்பு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக தொழிற்சாலையில் வேலை செய்த இருபத்தெட்டு பேர் உயிரிழந்தனர். 2001ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பும், உள்ளூர் மக்களும் இணைந்து போராடியதால் தொழிற்சாலை மூடப்பட்டது.

தொழிற்சாலை மூடப்பட்டாலும் கசிந்த பாதரசத்தால் இயற்கை வளமும் கெட்டது. ஊழியர்களும் நரம்பு நோய்கள், சிறுநீரக பாதிப்பு ஆகிய சிக்கல்களுக்கு உள்ளாகினர். இதற்கு என்ன பதில் என சூழல் அமைப்புகளும், ஊழியர்களும் போராட 2016ஆம் ஆண்டு, யுனி லீவர் நிறுவனம் வேலை செய்த 591 முன்னாள் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக அறிவித்தது.

இந்த விவகாரம் பற்றி முன்னாள் பத்திரிகையாளரும், க்ரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான அமீர் சாகுல் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஹெவி மெட்டல் ஹவ் எ குளோபல் கார்பரேஷன் பாய்சன்டு கொடைக்கானல் என்பது நூலின் பெயர்.

பாதரசக் கசிவு சம்பவம் நடைபெற்று ஏழாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நேரத்தில் கொடைக்கானல் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். யுனிலீவர் கூட இழப்பீட்டை வழங்கிவிட்டதல்லவா?

நீங்கள் விஷயத்தை தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள். யுனிலீவர் தொழிலாளர்களுக்கு தரவேண்டிய இழப்பீட்டைப் பெற பணியாளர்கள் பத்து ஆண்டுகளாகப் போராடினர்.

சென்னையில் வழக்கு நடைபெற்றது. அப்படித்தான் இழப்பீடு பெறப்பட்டது. 22 ஏக்கர் தொழிற்சாலை நிலத்தை கழிவுகளை அகற்றும் வேலைகளை செய்து வருகிறார்கள். இதனால் தொழிற்சாலை அருகிலுள்ள மக்களை மறு குடியேற்றம் செய்யவேண்டும்.  பதினெட்டு ஆண்டுகளாக நடைபெற்ற இயக்கத்தில் வெளியேறிய பாதரசத்தின் பாதிப்பு நிலத்தில் உள்ளது. கொடைக்கானலில் ஏற்பட்ட பாதரச பாதிப்பு, தொழிற்சாலைகள் அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள சூழலை பாதரசம் எந்தளவு பாதித்துள்ளது?

பேரிடர் ஏற்படுத்தும் அளவுக்கு காற்று, நிலத்தின் மேற்பரப்பில் பாதரசம் உள்ளது. ஆசியாவில் பாதரச பாதிப்புள்ள இடங்களில் கொடைக்கானல் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டு ஐஐடி ஹைதராபாத் செய்த சோதனையில் கொடைக்கானல் காடுகளில் உள்ள பாதரச அளவு, பல நூற்றாண்டுகளுக்கு மண்ணில் தங்கியிருக்கும்  என கண்டறிந்திருக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழத்தின் அறிவியலாளர்கள் செய்த ஆய்வில், கொடைக்கானல் ஏரி மண்ணில் 19 -30 மில்லிகிராம்(கிலோவுக்கு) பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இயற்கைச் சூழலில் காணப்படும் பாதரச அளவு ஒரு கிலோவுக்கு பதினைந்து மில்லி கிராமாக உள்ளது. பாதரசத்தின் அளவு பிற இடங்களை விட  கொடைக்கானலில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

1984ஆம் ஆண்டு போபாலில் நடைபெற்ற விஷவாயு கசிவு சம்பவத்தைப் போல இருக்கிறது…. நீங்கள் சொல்லும் தகவல்கள்?

 போபாலுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுக்கு அடுத்து அதிகளவு மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு,, கொடைக்கானல் பாதரசம் சம்பவத்திற்குத்தான் என நிறைய செய்திகள் வலம் வருகின்றன. போபாலில் காற்றில் கசிந்த மெத்தில் ஐசோசயனைட் , பத்தாண்டுகளுக்கு மேலாக சூழலை சிதைத்தது. கொடைக்கானல் தொழிற்சாலையில் இருந்து ஆவியான பாதரசம் இன்றும் அங்குள்ள சூழலில் உள்ளது. தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இயற்கையாக அல்லாமல் இறந்த அல்லது அங்கிருந்து விலகிய பணியாளர்கள் பற்றிய தகவல்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்துள்ளோம்

வைகை ராம மூர்த்தியைப் பற்றி இந்தியாவின் எரின் புரோகோவிச் என்று கூறியிருக்கிறீர்கள். அதைபற்றி விளக்கி கூறுங்கள்.

மனித உரிமை வழக்குரைஞரான வைகை ராமமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் யுனிலீவர் ஊழியர்களுக்கு ஆதரவாக வாதாடினார். சுயநலம் இல்லாத பெண்மணி. பயமில்லாதவர். குரலற்றவர்களுக்காக ஊக்கத்துடன் போராடினார். பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாளர்களுக்காக ஊக்கமுடன் நின்று போராடினார். வைகையின் உழைப்பு மட்டும் இல்லாவிட்டால் ஊழியர்களின் உடல்நலக் குறைபாடு பற்றிய விவகாரம் இன்று பலருக்கும் தெரிய வந்திருக்காது.

திவ்யா காந்தி

தி இந்து ஆங்கிலம்

கருத்துகள்