சொந்த சகோதரிகளை வல்லுறவு செய்த காமக்காளை!

 










பீட்டர் கர்டன்

ஜெர்மனியைச் சேர்ந்த கொலைமகன். 1883ஆம் ஆண்டு கோலன் முல்ஹெய்ம் எனும் நகரில் பிறந்தவர். வன்முறை நிறைந்த சிக்கலான குழந்தைப் பருவத்தைக் கொண்டவர். மொத்தம் பதிமூன்று பேர்களைக் கொண்ட குடும்பம். இவர்கள் வாழ்வதற்கு ஒற்றை அறை. ஒரே அறை என்பதால் கணவன், மனைவி, மகள், மகன் என அனைவரும் நெருங்கித்தான் படுக்கவேண்டிய சூழல், இதுவே அவர்கள் குடும்பத்தில் பாலியல் ரீதியான சிக்கலை உருவாக்கியது.

குடிநோயாளியாகிவிட்ட பீட்டரின் தந்தை, பிள்ளைகளின் முன்பே அம்மாவை உறவுக்கு அழைத்து, உடலுறவு கொள்வார். பின்னாளில் அவர் தனது மகளுடன் வல்லுறவு கொள்ள முயன்று அப்புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். அப்பா செய்ய முடியாததை மகன் பீட்டர், தனது சகோதரிகளுக்கு செய்தார். கிடைத்த வாய்ப்புகளில் சகோதரிகளை தடவினார்.தேய்த்தார். ஆக மொத்தம் மகிழ்ச்சி கொண்டார். இவருக்கு ஊக்க உந்துதலைக் கொடுத்தவர், அருகில் வாழ்ந்த நாய் கண்காணிப்பாளர். இவர், நாய்களை அடித்து உதைத்து கொடுமை செய்ததோடு, விலங்குகளை சுய இன்பம் அனுபவிக்கச் செய்து அதை பார்த்து வந்தார்.

ஒன்பது வயதில் பீட்டரின் குற்ற வரலாறு தொடங்குகிறது. தன்னோடு விளையாடிக் கொண்டிருந்த இரு நண்பர்களை ரைன் ஆற்றில் தள்ளிக் கொன்றார். இறந்துபோனவர்களைப் பார்த்த எவருமே பீட்டரின் மீது சந்தேகப்படவில்லை. பனிரெண்டு வயதில் பீட்டர், தனது குடும்பத்துடன் டசல்டார்ட் எனும் இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

உடலுறவு சார்ந்த பார்வை அப்போது பீட்டருக்கு நிறைய மாறியிருந்த து. அறையில் சுய இன்பம் அனுபவிப்பது, தனது சகோதரிகளுடன் உடலுறவு கொள்வது, படிக்கும் சக பள்ளி மாணவிகளுடன் உறவு கொள்வது என நிறையவே மாறியிருந்தார். இதெல்லாம் கடந்த ஆடு, பன்றி, செம்மறி ஆடு ஆகியவற்றுடன் உடலுறவு கொள்ள முயன்றார். செம்மறி ஆட்டுடன் உறவு கொண்டு உச்சம் எட்டும்போது அதை கத்தியால் குத்திக் கொல்வது பீட்டரின் சிறப்பு அம்சம். அப்படி செய்தால்தான் அவருக்கு திருப்தி ஏற்பட்டது.

வீட்டை விட்டு வெளியேறிய பீட்டர், நாடோடி போல சுற்றித் திரிந்தார். அப்போதும் சிறுமிகள், இளம்பெண்களை குறிவைத்தார். பதினாறு வயதில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. தன்னைப்போல உள்ள நண்பருடன் வெளியே சுற்றத் தொடங்கியிருந்தார். குற்றங்களைச் செய்து வந்தார்.

1899ஆம் ஆண்டு பீட்டர், அதிகாரப்பூர்வ முதல் கொலையை செய்தார். சிறுமியை வல்லுறவு செய்து கழுத்தை நெரித்துப் போட்டார். அந்த சிறுமியின் உடல் கிடைக்கவில்லை என்பதால், அவர் உயிர் பிழைத்திருக்கலாம். மோசடி, ரைபிள் மூலம் சிறுமியைக் கொல்ல முயன்றது காரணமாக பீட்டரை சிறையில் அடைத்தனர். கம்பிகளுக்கு பின்னே தனது செக்ஸ் கற்பனைகளை செய்தபடி உட்கார்ந்திருந்தார். வெளியே வந்தவர் நெருப்பை ஆயுதமாக்கினார். ஆதரவற்று தூங்குபவர்களை உயிரோடு நெருப்பு வைத்து கொழுத்தினார். வீடுகளை கொள்ளையிட்டு தீ வைத்து கொளுத்தினார். 1905ஆம் ஆண்டு, திருட்டு வழக்கு ஒன்றில் எழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறை சென்றவர் அங்கும் சும்மாயிருக்கவில்லை. அங்கு செயல்பட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு விஷம் வைத்தார். பீட்டரின் சகோதரருடன் சண்டை போட்ட காரணத்திற்காக பப் உரிமையாளரின் மகளை கழுத்தை அறுத்துக் கொன்றார். பிறகு அந்த பெண்ணை வல்லுறவு செய்தார். தனது பெயர் இனிஷியல் கொண்ட கர்ச்சீபை அங்கேயே விட்டு வந்தார். பப்புக்குச் சென்று அங்குள்ளவர்களுடன்  தகராறு செய்து உடைத்து நொறுக்கினார். இப்படியான வன்மம் கொண்ட காமக்காளையாக பீட்டர் மாறியிருந்தார்.

இருபெண்களை கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்த வழக்கில் பீட்டருக்கு எட்டு ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. சிறையில் இருக்கும்போது தனது எதிர் கால மனைவியை சந்தித்தார். அவர், தனக்கு நிச்சயிக்கப்பட்ட காதலரை சுட்டுக்கொன்றுவிட்டு சிறைக்கு வந்திருந்தார். அவரிடம் ‘’திருமணம் செய்துகொள்ளலாமா?’’ என்று பீட்டர் கேட்டார். ‘’முடியாது’’ என்று சொன்னவரை ‘’ஆமாம் என்று சொல்லாவிட்டால் அடுத்த கொலை நீதான்’’ என்று அன்பாக சொன்ன பீட்டரை அவர் மணம் செய்துகொண்டார். மணம் செய்துகொண்ட பிறகு பீட்டரின் வாழ்க்கை சற்று அமைதியாகத்தான் சென்றது.

ஆனால் கொலை செய்வது என்பது பீட்டருக்கு தினசரி பல் துலக்குவது போல இயல்பானதாக தோன்றியது. எனவே, 1925 முதல் மீண்டும் இளம்பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என வேட்டையைத் தொடங்கினார். ஒரு பெண்ணை கடத்தி வல்லுறவு செய்ய முயன்றார். ஆனால் அந்த பெண் வல்லுறவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், ‘’அப்படி செய்யப்படுவதற்கு நான் செத்துவிடுவேன்’’ என உணர்ச்சிவசப்பட்டு சொன்னார். பீட்டர் யோசிக்கவேயில்லை. ‘’அப்படியா சரி சாவு’’ என கத்தியால் குத்தி இளம்பெண்ணைக் கொன்றார்.

வல்லுறவு செய்வது, பிறகு கத்தியால் குத்தி கொல்வது, சில சமயங்களில் உடலை நெருப்பிட்டு எரிப்பது ஆகியவற்றை செய்தார். தான் சிறைபடித்த மரியா என்ற பெண்ணைப் பிடித்து வல்லுறவு செய்துவிட்டு விட்டுவிட்டார். ஆனால் அவர் காவல்துறைக்கு சென்று தகவல் கொடுத்து பீட்டரை பிடித்துக்கொடுத்துவிட்டார். இதனால், ஒரு கொலைகாரனா, கொலைக்கூட்டமாக என சந்தேகத்தில் இருந்த காவல்துறை தெளிவான முடிவுக்கு வந்தது. 1931ஆம் ஆண்டு பீட்டர் மாட்டிக்கொண்டார். ஒன்பது கொலைகளுக்கு அவரை குற்றம்சாட்டி மரணதண்டனை வழங்கப்பட்டது. ஜூலை 21 அன்று பீட்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 படம் - பின்டிரெஸ்ட் 

தலைப்பு உதவி - ராங்கோ - ஃபேமிலி கய்

 

 

கருத்துகள்