பணத்திற்காக வயதானவர்களை அடித்துக் கொல்லவும் தயங்காத கொடூரன் - ஆலன்
ஆலன், ஆப்பிரிக்க அமெரிக்க தொடர் கொலைகாரர்களில் ஒருவர்.
இந்தியன் போலிஸ் பகுதியில் கொலைகளை செய்து பழகியவர் சும்மா இருப்பாரா? தனக்கான பலவீனமான
இரையைத் தேடிக்கொண்டிருந்தார்.
1974ஆம் ஆண்டு, ஓபல் கூப்பர் என்ற 85 வயது பெண்மணியின்
வீட்டில் கொள்ளையடிக்கப் புகுந்தார். ஓபல் என்ற அந்தப் பெண்மணியை அடித்துக் கொன்றார்.
இதற்காக குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்திற்கு
தண்டனை 21 ஆண்டுகள். இந்த குற்றத்தை ஆலன் செய்தபோது அவரின் வயது 24. பிறகு பிணை கிடைக்க
1985ஆம் ஆண்டு வெளியே வந்தார். வந்தவர் இந்தியன் பொலிஸ் பகுதியில் இருந்த கார்களை சுத்தம்
செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அமைதியாக இருந்தார் என்றால் வருந்தி
திருந்தியதாக அர்த்தமில்லை.
1987ஆம் ஆண்டு, மேமாதம் 18 அன்று, 73 வயது பெண்மணி
வீடு புகுந்து தாக்கப்பட்டார். இறப்பில் இருந்து சற்றே அதிர்ஷ்டம் இருந்து பிழைத்தார்
என்றுதான் கூறவேண்டும். இரண்டு நாட்கள்தான். அடுத்த குற்றம் நடைபெற்றது. அதில் லாவர்னே
ஹாலே என்ற பெண்மணி மாட்டினார். ஆனால் குற்றச்சம்பவத்தில் இவருக்கு கிடைத்த
அடிகளும் குத்துக்களும் அவரை உயிரோடு வாழ விடவில்லை. 87 வயதான பெண்மணி
சித்திரவதைகளை அனுபவித்து மே 29 அன்றே காலமானார்.
இந்த வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்த வயதானவர்
வசித்த வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்தவர், கொள்ளைக்காரர் வரும்போது
இல்லை. எனவே, ஆக்ரோஷமான கொள்ளையாளி, வீட்டை தீக்கிரையாக்கிவிட்டு சென்றார்.
ஜூலை 14 ஆம் தேதி, இந்தியன் பொலிஸில் எர்னஸ்டைன் என்பவர்
கறிவெட்டும் கத்தியால் எட்டு முறைக்கு மேல் வெட்டப்பட்டிருந்தார். பிரட் டோஸ்டர் சாதனத்தால் எர்னஸ்டைனின் தலை சிதைக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவரின்
பணம், கேமராவோடு கொலையாளி தப்பிச்சென்றுவிட்டார் என உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.
1987ஆம் ஆண்டு மேற்கண்ட வழக்குகள் எல்லாம் தீரவிசாரிக்கப்பட்டு
முடிவுக்கு வந்தன. கார்களை துடைத்து சுத்தம் செய்து வந்ததாக நினைத்த ஆலன் வசமாக மாட்டிக்கொண்டார். பல்வேறு குற்றச்சாட்டுகளை
காவல்துறையினர் அவர் மீது சுமத்தினர். லாவர்னே
ஹால் என்பவரின் வீட்டுக்கு அருகில்தான் ஆலன் வீடு இருந்தது. எர்னஸ்டைன் வழக்கிலும்
ஆலன் மீது சந்தேகம் உறுதியாக இருந்தது. இவை இல்லாமல் கொலை, கொள்ளை என பதினொரு வழக்குகளில்
ஆலனுக்கு தொடர்பிருப்பதாக காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
1988ஆம் ஆண்டு, ஆலன் செய்த குற்றங்களுக்கு 88 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
எர்னஸ்டைன் கொலை வழக்கில் ஜூரிகள் பரிந்துரைப்படி மரண தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.
பிக்சாபே
கருத்துகள்
கருத்துரையிடுக