இரு குடும்பங்களின் பகையைத் தீர்க்கும் காரியஸ்தன் - காரியஸ்தன் - திலீப், அகிலா சசிதரன், ஹரிஶ்ரீ அசோகன்

 





காரியஸ்தன் - மலையாளம் -திலீப்

அகிலா சசிதரன் - திலீப் - காரியஸ்தன்






காரியஸ்தன்

திலீப், அகிலா சசிதரன், சுரேஷ் வெஞ்சரமூடு, ஹரிஶ்ரீ அசோகன்

நட்பாக பழகிய இரு குடும்பங்கள் பிரிந்துகிடக்கின்றன. குடும்பங்கள் பிரிவதற்கு காரணமான ஒருவரே பின்னாளில் அதை ஒன்றாக சேர்க்க முயல்கின்றார் ஒருவர். அவ்வளவே கதை.

வடக்கு, கிழக்கு என இரு குடும்பங்கள் முதலில் சுவர்களே இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு குடும்பங்களுமே மூடநம்பிக்கை கொண்ட ஆணாதிக்க வாதி குடும்பங்கள்தான். தங்கள் குடும்பத்திற்குள் திருமண உறவு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கிழக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தபிள்ளைக்கு, ஏற்கெனவே ஒரு காதல் இருக்கிறது. ஆனால்,அவரது அப்பா சொன்னதால் அவரது பேச்சையும் உடனே தட்டமுடியவில்லை. டௌரி பணமாக பத்து லட்சத்தையும் பெண் வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராஜன் என்ற கல்யாண மாப்பிள்ளை, சுசீலன் என்பவரிடம் டௌரிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வடக்கு குடும்பத்திடம் பணத்தை சேர்க்குமாறு சொல்லிவிடுகிறார். பிறகு, கல்யாண வீட்டிலிருந்து தப்பி, தனது காதலியோடு ரயிலில் ஏறப்போகிறார்.

இவர்களது காதலை அறிந்து ராஜனுக்கு நிச்சயமான வடக்கு குடும்ப பெண்ணே வாழ்த்து சொல்லி வழியனுப்புகிறார். ஆனால் ரயில் வரும் நேரத்தில்தான், வடக்குப் புறத்து குடும்பம். ‘’தங்கள் பெண்ணை கொன்றுவிட்டாயே’’ என ராஜனை அடிக்க வருகிறார்கள். உண்மையில் அந்த பெண் ஏரியில் விழுந்து இறந்து போயிருக்கிறார். அதற்கு காரணம், ராஜன் என அக்குடும்பம் குற்றம்சாட்டி, நம் இரு குடும்பம் இனி எப்போதும் இணையாது. எதிரிகள்தான் என சவாலாக எச்சரிக்கை சொல்லி பிரிகிறார்கள்.

இதுதான் தொடக்க கதை.

ராஜனுக்கு இப்போது ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர். அதில் ஆண் பிள்ளைதான் கிருஷ்ணன் உண்ணி. அவர்தான் அப்பாவால் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க தனது தாத்தாவின் வீட்டைப் பார்த்து வருகிறார். உண்மையில் கிருஷ்ணன் உண்ணி இரு வீட்டுக்கு இடையில் உள்ள பிரச்னைகளை தீர்த்தாரா, தனது சவாலில் வென்றாரா என்பதே கதை.

படம் ஏராளமான பிற்போக்குத் தனங்களைக் கொண்டுள்ளது. ஒருவகையில் அன்றிருந்த கலாசார, சமூக , சாதிப் படிநிலைகளைக் காட்டுகிறதாக வைத்துக்கொள்ளலாம்.

அடச்சே

திருமணம் பற்றி பெண்களை பிடித்திருக்கிறதா என சாங்கியத்திற்காக வார்த்தையைக் கூட கேட்காமல் கல்யாணம் நிச்சயிக்கிறார்கள். இரு குடும்பமுமே பெருமைக்காக வெட்டி கௌரவத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிற ஆட்கள்தான். முரட்டுத்தனமும், முன்கோபமும் கொண்ட பைத்தியக்காரர்கள். கிருஷ்ணன் உண்ணியும் இதே மாதிரிதான் இருக்கிறார். கொஞ்சம் நவீனமாக அவர் யோசிப்பது, கல்யாண விஷயத்தில்தான். வடக்கு குடும்பத்தில் காரியஸ்தனாக வேலை செய்துகொண்டு இரு குடும்பத்தையும் இணைக்கிற வேலையை செய்கிறார்.

அந்த குடும்பத்தின் பெண்ணை கிறிஸ்துவ குடும்பத்திற்கு மணம் செய்து கொடுக்கிறார். உண்ணியின் மனநிலையை ஒப்பிட்டால், அவர் மணக்கப் போவதாக காட்டும் ஶ்ரீபாலா மிகவும் பிற்போக்கான ஆள். காதல் மனதில் இருந்தாலும் கூட காரியஸ்தன் பணியில் உள்ள ஆளை மணப்பதா என வாய்விட்டே கேட்டுவிடுகிறார். ஆண்கள் சாதியை, கட்டுப்பாட்டை சொன்னாலும் பெண்கள்தான் அதை அப்படியே ராணுவக்கட்டுப்பாடுடன் கடைபிடிக்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்த பெண் இவள். பாட்டி கால சிந்தனையுடன் நவீன காலத்தில் பிறந்துவிட்டவள்.

ஆஹா

படமே பிற்போக்கான முட்டாள்தனமாக சிந்தனைகளை கொண்டுள்ளதுதான். திலீப்பின் நடிப்பிற்காக, ஹரிஶ்ரீ அசோகன், சலீம் ஆகியோரின் நகைச்சுவைக்காக படத்தைப் பார்க்கலாம். இதில் சலீம் படம் முழுக்க கிருஷ்ணர் சிலையை திருட முயன்று கொண்டே இருப்பார். அந்த முயற்சியில், தொடர்ச்சியாக காரியஸ்தன் உண்ணியால் தோற்றுக்கொண்டே இருப்பார். இந்த நகைச்சுவை காட்சிகள்  நன்றாக உள்ளது. அடுத்து, அவர் தங்கை மணம் செய்துகொள்ளும் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.  

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்