குற்றவுணர்ச்சியால் கொலைகளை ஒப்புக்கொண்டவர் - எட்வர்ட்ஸ்

 










எட்வர்ட்ஸ், மேக் ரே

1919ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்கான்சாவில் பிறந்தவர். 1941ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். கனரக வாகனங்களை இயக்கும் தொழிலாளி. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கிய சாலைப் பணிகளை செய்த தொழிலாளர்களில் இவரும் ஒருவர். திருமணமாகி இரு குழந்தைகள் உண்டு.

எட்வர்டுக்கு பதினாறு ஆண்டுகள் குற்ற வரலாறு உண்டு.இதை உலகம் பின்னாளில்தான் அறிந்தது.  22 உடல்களைக் கண்டெடுத்த காவல்துறையிடம் ‘’நான் செய்த கொலைகள் ஆறு மட்டும்தான்’’ என சாதித்தவர். நீதிபதியிடம் மின்சார நாற்காலியில் அமர வைக்கவேண்டும்  என்று கோரினார். கேட்டதை கொடுப்பதற்காக நீதிமன்றம் உள்ளது? சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, எட்வர்ட்ஸ் தற்கொலை செய்துகொண்டார்.

1970ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அதில் கொள்ளைக்காரர்கள் கொள்ளைப் பொருட்களோடு இரு சிறுமிகளையும் கடத்திக்கொண்டு வந்தனர். அதில் இரு சிறுமிகள், தங்களை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்தனர். ஆனால், ஒரு சிறுமியைக் காணவில்லை. அங்குதான் எட்வர்ட் வருகிறார். காவல்நிலையத்திற்கு வந்த எட்வர்ட், தான்தான் அந்த இன்னொரு சிறுமியை பிடித்து வைத்துள்ளேன்  என்றார். பிறகு  அவர் சொன்ன காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, சிறுமி காயப்படாமல் உயிரோடு கிடைத்தார். ‘’குற்றவுணர்ச்சி தாங்காமல் எனது குற்றத்தை ஒப்புக்கொண்டேன்’’ என ரிவால்வரை காவல்துறையில் ஒப்படைத்தார்.

பிறகு அவர் கொடுத்து வாக்குமூலப்படி, சான் காப்ரியல் மலைப்பகுதியில் புதைத்த உடல்களைத் தேடத் தொடங்கினர். இப்படித்தான் பதினாறு ஆண்டுகளாக எட்வர்ட் செய்த 22 கொலைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

 அடுத்து, வெஸ்லி காரெத் பற்றி பார்ப்போம். வெஸ்லி, கனடாவைச் சேர்ந்தவர். பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்லாதவர். இதனால் பள்ளிப்படிப்பை மெல்ல இழந்தார். ஒன்பது வயதில் ரயிலில் அடிபட்டு பிழைத்தார். ஆனால் உடலும், மனதும் விபத்தால் பாதிக்கப்பட்டு விட்டது.

தலையில் கடுமையாக அடிபட்டதால் எட்டு நாட்கள் கோமாவில் இருந்தார். பிழைத்து எழுந்தாலும்  இடது பக்கம் செயலிழந்து போய்விட்டது. தற்காலிகமான நிலைதான். நான்கு மாதங்கள் தெரபி எடுத்தவர், பிறகுதான் துணைக்கருவிகள் வைத்து நடமாட முடிந்தது. பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு,  சிகரெட் லைட்டர் வைத்து சின்னப்பிள்ளையாக மாறி விளையாடியவர், உடலில் இருபது சதவீதத்தை எரித்துக்கொண்டார். இதனால் உருவம் அலங்கோலமானது. அதை பார்த்து சிரித்த பெண்கள் மீது வன்மம் வளர்த்துக்கொண்டார்.

1984ஆம் ஆண்டு வான்கூவரில் லாவன் வில்லியம்ஸ் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். படுக்கையறையில் இறந்து கிடந்தவரின் பேன்ட் திறக்கப்பட்டிருந்தது. இவர் உடலில் 25 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. கொலையில் பாலியல் ரீதியான நோக்கம் இருந்த து என தடய வல்லுநர்கள் சொன்னாலும் இதில் குற்றவாளிகளை யாரென கூற முடியவில்லை. அடுத்த ஆண்டு, கிளப்பில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவரான பெவர்லி சீடோ, கொலை செய்யப்பட்டார். சீடோவின் தொண்டை அறுக்கப்பட்டு, இருபது முறை குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். ஸ்கர்ட், அவரது வயிற்றின் மீது கிடந்தது. மனைவியின் உடலைப் பார்த்த கணவர்,  வல்லுறவுக் கொலை என குற்றத்தை காவல்துறையிடம் புகார் செய்தார்.

இதில் வேடிக்கை என்னவெனில், குற்றவாளி தானாகவே காவல்துறையிடம் மாட்டி குற்றத்தை ஏற்றுக்கொண்டதுதான். அடித்து உதைத்து ஏற்றுக்கொள்ள வைப்பதல்ல. போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக வெஸ்லி என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போதே அவர் தானாகவே செய்த கொலைகளை ஒப்புக்கொண்டார். கொலையான இருவரின் வீட்டுக்கும் அருகில்தான் வெஸ்லி வாழ்ந்து வந்தார். இவருக்கு 25 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

 படம் - பின்டிரெஸ்ட் 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்