தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நண்பனைக் கண்டுபிடித்து குடும்பத்தின் திருட்டு பழி நீக்கும் வளர்ப்புமகன் - கல்யாண

 










கல்யாண சௌகாந்திகம்

மலையாளம் 

திலீப், திவ்யா உண்ணி, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார்


முதல் காட்சியில் ஜெயதேவ் சர்மா(திலீப்), சகோதரர்கள் இருவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். வைத்தியர் ஒருவரிடம் வேலை செய்யும் நண்பரிடம் அடைக்கலம் தேடுகிறார். ஆனால் அவரிடம் சகோதரர்கள் வந்து ஜெயதேவைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவர் அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்புவதில்லை.

இதனால் அவர், ஜெயதேவை தப்பிக்க வைக்க வேறு மார்க்கம் தேடுகிறார். அப்போதுதான் வைத்தியர், அடிக்கடி வணங்கும் வைத்திய குரு ஒருவரின் சீடராக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கிறார். இதன்மூலம், வைத்தியரிடம் கணக்கு வழக்கில் மோசடி செய்த பிரேமதாஸ் என்பவரும் ஜெயதேவிற்கு நட்பாகிறார். அவர், வைத்தியச் சாலையில் உள்ள வசுமதி என்ற பெண்ணை விரும்புகிறார். ஜெயதேவ், வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் பேத்தியான ஆதிரையின் பல்வேறு பிரச்னைகளை சொல்லி தன்னை நம்ப வைக்கிறார். ஆதிரைக்கும், ஜெயதேவ் தனது பிரச்னை தொடர்பாக தேடி வரும் ஆளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதுதான் மீதிக்கதை.

படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்கவேண்டாம். அப்படி பார்த்தால் திலீப்பின் நகைச்சுவை எனும் மேஜிக் மிஸ் ஆகிவிடும். இதில், உறுத்தலாக அமைவது ஆதிரை போனில் ஏற்கெனவே ஆனந்தன் என்பவரிடம் பேசிவருகிறாள். அதாவது முகம் பார்க்காமல் காதலிக்கிறாள். இந்த நேரத்தில் சில உதவிகளை செய்தார். என சாமியார் வேடத்தில் உள்ள ஜெயதேவை காதலிப்பதாக கூறுவது ஏன்? என்று புரியவில்லை.

உண்ணிகிருஷ்ணன் ஆவி என்று சொல்லிவரும் காட்சிகளை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வதா, தீவிரமாக எடுத்துக்கொள்வதா என்று புரியவில்லை. ஆதிரை (திவ்யா உண்ணி)யைப் பொறுத்தவரை அவள் ஜெயதேவை ஏன் காதலிக்கிறாள் என்பதற்கான காரணத்தை அவளும் அறிவதில்லை. பார்வையாளர்களாக நமக்கும் புரிவதில்லை. கலாபவன் மணி, ஆதிரைக்கான மணமகனாக வந்து நகைச்சுவை செய்கிறார். அந்த மட்டுக்கு அவருக்கான வாய்ப்பு அவ்வளவுதான்.

தனது வளர்ப்புத் தந்தை திருடன் என்ற பழி தீராமல் இறந்துவிட, அம்மாவையும், தங்கையையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஜெயதேவுக்கு வருகிறது. அந்த நிலையில் நகைக்கடையில் இருந்து ஆசாரிக்கு வழங்கப்பட்ட தங்கம், ஆனந்தனால் களவாடப்படுகிறது. அதை மீட்கும் பொறுப்பை உரிமையாளர்கள் ஜெயதேவை மிரட்டி ஒப்படைக்கிறார்கள். அதை அவன் செய்யாவிட்டால் அவனது குடும்பத்தை அழித்துவிடுவோம் என்கிறார்கள். இந்த நிலையில் ஆனந்தனை ஜெயதேவன் கண்டுபிடிக்க அவனது நண்பர்கள் குழு உதவுகிறது.

போலியாக வந்து வைத்தியரை ஏமாற்றியது வெளிப்பட ஜெயதேவ் எப்படி அந்த குற்றத்திலிருந்து தப்பினான், வைத்தியரை சம்மதிக்க வைத்து ஆதிரையை மணப்பது எப்படி என்பது இறுதியான காட்சி. அதையும் ஜாலியாக முடித்து வைத்திருக்கிறார்கள்.

கோமாளிமேடை டீம் 

Directed byVinayan
Written byJ. Pallassery
V. C. Ashok
Produced byKasim Vengola
StarringDileep
Jagadish
Divya Unni
Captain Raju
CinematographyVipin Mohan
Edited byG. Murali
Music byJohnson
Release date
  • 2 March 1996
Running time
138 min
CountryIndia
LanguageMalayalam

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்