வாழ்ந்து அனுபவித்தலே உண்மையை புரிந்துகொள்வதற்கான வழி - ஜே கிருஷ்ணமூர்த்தி
வரையறுக்கப்படாதபடி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்தல்
நம்மில் பெரும்பாலானோர் உண்மையான வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள்.
அதை அழியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஒருவர் , வாழ்க்கையில் அழியாத தன்மை கொண்ட விஷயங்களை
உணர்வது அரிதிலும் அரிதாகவே வாழ்க்கையில் நடைபெறுகிறது.
என்னைப் பொறுத்தவரை நிஜம் என்பது, கடவுளாக இருக்கலாம்.
அதை அமரத்துவம், அழியாத தன்மை அல்லது வேறு
எந்த பெயர்களைக் கொண்டும் குறிப்பிடலாம்.
உயிர்வாழக் கூடிய புதுமைத்திறன் கொண்ட விஷயங்களை வரையறை
செய்து குறிப்பிட முடியாது. நிஜ வாழ்க்கை என்பது இந்த வரையறைகளைக் கடந்தது. உண்மையை
நீங்கள் வரையறை செய்து கூறினால்,அது நிலையானதாக இருக்காது. வார்த்தைகளைப் பயன்படுத்தி
உருவாக்கும் மாயமாகவே இருக்கும்.
பிறர் கூறும் வார்த்தைகளின் அடிப்படையில் காதலை நீங்கள்
புரிந்துகொள்ள முடியாது. காதலை நீங்கள் அனுபவித்தால்தான் அதை உணர முடியும். உப்பின்
சுவையை அறிய, நீங்கள் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும்.
நாம் பெரும்பாலான நேரம், உண்மையைத் தேடி உணர்வதை விட அதைப் பற்றி குறிப்புகளை வரையறைகளையே
விரும்புகிறோம். நான் அதை வரையறை செய்யப்போவதில்லை.
வார்த்தைகளுக்குள் அதை நிறுத்தி வைக்க விரும்பவில்லை. உண்மை என்பது சிந்தனை, அதன் வளர்ச்சியைக்
கடந்து செல்லக்கூடியது.
நாம் வாழும் சூழலை ஒருவர் வரையறை செய்து கூறினால், அவரிடம்
கவனமாக இருக்கவேண்டும். உண்மையில் நிஜத்தை ஒருவர் அப்படி கூற முடியாது. வாழ்ந்து அனுபவித்தால்தான்
உண்மையை அறியமுடியும்.
உண்மையை உணர்வது என்பது காலத்தின் இயக்கத்தைப் பொறுத்தது
அல்ல. மனதின் இயல்பைப் பொறுத்த விஷயம். காலத்தைப்
பொறுத்து உண்மையை உணர்ந்தேன் என்று கூறினால், நிகழ்காலத்தின் விஷயங்களை நீங்கள் தள்ளிப்போடுகிறீர்கள்
என்று அர்த்தம்.
வாழ்க்கையின் முழுமை
பற்றி மனம் உணர்ந்தால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலத்தின் பல்வேறு அடுக்குகளிலிருந்து
விடுதலை பெற்று விடலாம். இந்த வகையில் நாம்
அழியா நிஜ வாழ்க்கையை வாழ முடியும்.
Talk at stresa, Italy on 2 july 1933
Collected works vol.1 page 4
கருத்துகள்
கருத்துரையிடுக