நாம் வாழும் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடையாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

 










ஜே கிருஷ்ணமூர்த்தி



நாம் உண்மையைத் தேடவில்லை; ஆறுதலைத் தேடுகிறோம்


மனம், இதயம் ஆகியவை பற்றி ஆராயத் தொடங்கினால் புதிய சிந்தனை, வாழ்க்கைத் தெளிவு, உணர்வு நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். வாழ்க்கையை இந்த வகையில் மாறுபட்டதாக்கி அமைத்துக்கொள்ளலாம்.  நீங்கள் உண்மையில் உங்களுக்கு  மனதில் திருப்தி ஏற்படுத்தும் விளக்கங்களை தேடுகிறீர்கள்.

உங்களில் பெரும்பாலானோர் உண்மையைப் பற்றிய வரையறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரையறையைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் வாழ்வை அழியாத பெருஞ்ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொள்ள முடியும்.

உங்கள் தேடுதலின் லட்சியம் உண்மைதான் என்றால்,  நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையல்ல. ஆறுதல் அல்லது சொகுசான வேறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் தினசரி வாழ்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், முரண்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள்.

உண்மையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்களைக் கடந்து பார்த்தால், நாம் பிறந்ததே உண்மையைத் தேடி அறிவதற்குத்தான் என புரிந்துகொள்ள முடியும்.  உண்மையைத் தேடுவதில் உள்ள சிரமங்கள், மனநிலையைக் குலைத்து தேடலைக் கைவிட நிர்பந்தப்படுத்தலாம். ஆனால், அவை உண்மை அல்ல. நீங்கள் உண்மையைத் தேடுவதில் கடினமான சூழல்களை சந்திக்கிறீர்கள் என்றால், நம்மில் பெரும்பாலானோர் அதுபோல சூழல்களை சந்திக்கிறார்கள்தான். உடல்ரீதியாக வலியைச் சந்திக்கிறீர்கள் என்றால் அருகிலுள்ள மருந்துக்கடைக்குச் சென்று வலிநிவாரணி மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம்.

மனதளவில் கடினமான சூழ்நிலைகளைச் சந்திக்கிறீர்கள் என்றால், அதற்கான ஆறுதலை நீங்கள் பெறமுடியும். அதுபோலவே, உண்மையைத் தேடும் பயணத்தில் ஏற்படும் வலியையும் நீங்கள் தீர்த்துக்கொள்ள முடியும்.  ஒவ்வொருமுறையும், உங்களுக்கு ஏற்படும் வலிக்கு இழப்பீடு கோரினால் , அப்படி கோரும் முயற்சியை வலிந்து உருவாக்கவேண்டியிருக்கும். வலியின் உண்மையான காரணத்தைக் கவனிக்கவில்லையென்றால், கற்பனையான வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும்.

எப்போதும் உண்மையைத் தேடிக்கொண்டிருப்பதாக கூறும் மக்கள், அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் உண்மையைத் தவறவிட்டு விடுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றாக்குறை கொண்டதாக, திருப்தி இல்லாததாக, காதல் இல்லாததாக நினைக்கிறார்கள்.  எனவே, தங்கள் கவனத்தை உண்மையைத் தேடுவதில் மடைமாற்றி திருப்தியும் சொகுசும் காண்கிறார்கள்.

‘’வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு ஆறுதலும், இழப்பீடும் பெற நினைக்கிறேன்’’ என உங்களால் வெளிப்படையாக கூறமுடிந்தால், வாழ்வை புத்திசாலித்தனமாக நடத்திச்செல்ல முடியும். நான் தேடிக்கொண்டிருப்பது இழப்பீடு என்பதைக் கடந்தது என்று நீங்கள் கூறினால், உங்களால் விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளமுடியவில்லை என்று அர்த்தம். இப்போது முதல் விஷயம், நீங்கள் உண்மையில் தேடுவது உண்மையைத்தானா என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஒரு மனிதர் உண்மையைத் தேடுகிறார் என்றால், அவர் அதை பின்தொடர்பவர் என்று அர்த்தமல்ல. ‘’எனது வாழ்க்கையில் காதல் இல்லை. ஏழ்மையான வாழ்க்கையே கிடைத்தது, வலிகள் மட்டுமே நிறைந்துள்ளது. எனவே குறிப்பிட்ட சொகுசுக்காக உண்மையைத் தேடுகிறேன்’’ என்று நீங்கள் என்னிடம் கூறலாம். அப்போது, வாழ்க்கையில் சொகுசைத் தேடுவது என்பது முழுமையான கற்பனை என்று உங்களுக்கு சுட்டிக்காட்டுவேன். சொகுசு, பாதுகாப்பு என்பது வாழ்க்கையில் எப்போதும் கிடையாது. இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள நீங்கள் வெளிப்படையானவராக இருக்கவேண்டும். 

நீங்கள் எப்படி இருக்கவேண்டுமென  நினைத்தீர்களோ அப்படி இல்லாமல் நீங்கள், நீங்களாகவே இருக்கவேண்டும். சொகுசு, ஆறுதல், இழப்பீடு ஆகியவற்றைக் கடந்து வேறு விஷயங்களையும் நீங்கள் விரும்பலாம். குறிப்பாக சொகுசு, இழப்பீடு ஆகியவற்றையும் விட…

உங்கள் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஒரு சமயம், மனம் சொகுசு, இழப்பீட்டை அளித்தாலும், இன்னொரு சமயம் அவற்றை மறுப்பதாக செயல்படுகிறது.  இந்த வகையில் உங்களது வாழ்க்கை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. உண்மையில் நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும்.

நீங்கள் என்ன மாதிரியாக சிந்திக்க நினைக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்.  சற்று விழிப்புணர்வோடு இருந்தால்,  நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும். சுயமான ஆய்வு செய்யாமலேயே உங்களால் மனதிலுள்ள ஆசையை அறியமுடியும்.

உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பேற்றால், உங்களைப் பற்றிய ஆய்வு செய்யாமல், நீங்கள் என்ன விஷயங்களைத் தேடுகிறீர்களோ  அதைக் கண்டறியலாம். இந்த செயலுக்கு மனவலிமை, உடல் வலிமை தேவையில்லை. ஆனால் ஆர்வம் வேண்டும். நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள், நேர்மையாக இருக்கிறீர்களா அல்லது கற்பனையில் மாய உலகில் வாழ்கிறீர்களா என அறியலாம்.

உலக நாடுகளில் உள்ள மக்களிடம், பல்வேறு மக்கள் இனக்குழுக்களிடம் கலந்துரையாடி வருகிறேன். அதில் பெரும்பாலானோர் நான் சொல்வதைப் புரிந்துகொள்வதில்லை. காரணம், அவர்கள் என்னுடைய உரையைக் கேட்க வரும்போதே உறுதியான முன்முடிவுகளோடு வருகிறார்கள்.

 பாகுபாடான இயல்போடு, எனது பேச்சைக் கேட்கிறார்கள். நான், அவர்கள் மனதிலுள்ள ரகசியமான ஆசைகளை கண்டுபிடிக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உங்கள் சிந்தனை,  உணர்வு ஆகியவற்றைப் பற்றி அறியவேண்டும். அப்படி அறியாமல் ‘’என்னை நானே சுயமாக உருவாக்கிக் கொண்டு முன்மாதிரியாக உங்களுக்கு முன் நிற்கிறேன்’’ என்று பெருமையாக கூறுவதில் பயனொன்றும் இல்லை.

 

நீங்கள் என்ன உணர்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள் என்பதை எப்படி கண்டறிவது, என்னுடைய பார்வைக் கோணத்தில் உங்கள் முழு வாழ்க்கையிலும் உணர்வு, சிந்தனை பற்றி பிறரைவிட உங்களால் எளிதாக கண்டறிய முடியும். இதன் பின்னரே, உங்கள் மனதில் நினைத்துள்ள முன்மாதிரிகளுக்கு அடிமையாக இருப்பது பற்றியும், அவர்களை உங்களின் ஆறுதலுக்காக உருவாக்கிக் கொண்டிருப்பதும் புரியும். 

 

 

 

 

 

 

Talk in alpino, Italy july 1933

Collected works vol.1pp1-1

The patheless

Dec 2022 –mar 2023

image - open magazine

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்