இடுகைகள்

விதிஜெயின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹோம் ஸ்கூலிங்கை விட அன்ஸ்கூலிங்குக்கு கூடுது மவுசு!

படம்
இந்தியப் பெற்றோர்கள், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதைவிட மாற்றுவழிக் கல்வி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். காலையில் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பி வைத்து, பின் மாலையில் டியூசன் முடித்து அவர்களை இரவில் வீட்டுக்கு கூட்டிவருவது  இனி தொடரப்போவதில்லை. தற்போது பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் அமைந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல கல்வி அறிவுடன் உருவாவது சாத்தியம். இந்தியாவிலுள்ள பெற்றோர்கள் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள்  மீதான நம்பிக்கையினமை அதிகரித்து வருகிறது. இதனால், வீட்டிலேயே பாடங்களைக் கற்பிப்பது (Homeschooling), அனுபவங்கள் மூலமாக குழந்தைகளை சுதந்திரமாக கற்க அனுமதிப்பது (unschooling) ஆகிய முறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறி பாடம் சொல்லித் தருவதிலும் பாடத்திட்டம் உண்டு. அதில் வேலைவாய்ப்புக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற முடியும். அதேசமயம் அனுபவங்கள் மூலம் கல்வியைக் கற்றுவரும் குழந்தைகள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற நெருக்கடியைச் சந்திப்பதில்லை. இதற்கு காரணம் அவர்களின் பெற்றோரின் பொருளாதார பலம்தான்.  இவர்களும் விரும்பினால் தேர்வு