இடுகைகள்

ரவிசங்கர் பிரசாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்பிஆர், என்ஆர்சியில் ரகசியம் ஏதுமில்லை!

படம்
மக்கள்தொகை, குடியுரிமைத் திருத்தசட்டம் தொடர்பான தகவல்கள் எந்த அமைப்புகளுக்கும் அளிக்கப்படாது! சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை என்பதே இல்லை. மேலும் இதில் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வதற்கான உரிமை என்பதும் விடுபட்டுள்ளதே? குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்புப் படி சரியானதே. நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான சட்டங்களை இயற்ற நாடாளும்ன்றத்திற்கு உரிமை உண்டு. இதுபற்றி அரசமைப்புச் சட்டத்தில் 246 இதற்கான வழிகாட்டும் குறிப்புகள் கிடைக்கின்றன.  நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரமெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அங்கு இயற்றப்படும் சட்டம், அரசமைப்புச்சட்டம் அனைவருக்கும் வழங்கும் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கலாமா? நாங்கள் சட்டப்பிரிவு 14 படி, குடியுரிமைச்   சட்டத்தை உருவாகியுள்ளோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றிலுள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறியுள்ளோம். இந்திராகாந்தி, உகாண்டாவில் இடி அமீன் ஆட்சியின்போது அங்கிருந்தவர்களை இந்துக்களாக கருதி குடியுரிமையை அளித்தார்.மேலும் இந்