இடுகைகள்

நோக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்

படம்
  பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.   நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.  சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள் புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.  செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.    செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ஆறிலிருந்து பனிரெண்டு வயது வரை இந்

பொருட்களின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் - ஜே கிருஷ்ணமூர்த்தி - கேள்வி பதில்கள்

படம்
  அகம்புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. அன்பு அதன் தன்மையில் எத்தகையது? ப. அன்பு என்பது என்ன? அன்புக்கு உள்நோக்கம், அதன் பயன்கள் இல்லாமல் என்ன என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். கவனமாக கேளுங்கள். அதிலிருந்து பதிலைப் பெறலாம். நாம் கேள்வியை ஆராயப் போகிறோம். பதிலைக் கண்டுபிடிக்க போவதில்லை. கணிதம் சார்ந்த கேள்வியை ஒருவருக்கு கொடுத்தால் அவர் உடனே பதிலைக் கண்டுபிடிக்க முயல்வார். கேள்வியை சரியாக புரிந்துகொள்வதே முக்கியம். அதன் போக்கில் நாம் பதிலைப் பெறலாம். பகவத் கீதை, திருக்குரான், பைபிள் அல்லது பேராசிரியர் என எதிலும் உங்களுக்கு விடை கிடைக்காது. கேள்வியைப் புரிந்துகொள்வதே அடிப்படையானது. அதில்தான் பதில் அடங்கியுள்ளது. அது பிரச்னையிலிருந்து வெளியே இல்லை.   இப்போது பிரச்னையைப் பார்ப்போம். அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த நோக்கமும் இல்லை. அன்பு செலுத்தி அதற்கு பதிலாக அன்பையோ வேறு பயன்களையோ எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? தான் கொடுத்த அன்பு திரும்ப கிடைக்கவில்லை என ஒருவர் காயம்படுகிறார். இப்போது நான் உங்களை நண்பராக ஏற்றுக்கொள்ள நினைத்து அழைப்பு விடுக்கிறேன். ஆனா

பட்டினி கிடப்பவருக்கு உணவு கொடுத்தால் அன்பாகாதா? ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்  வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்ன? வாழ்க்கைதான். நீங்கள் வாழ்க்கையை எப்படியாக உருவாக்கிக் கொள்ளவேண்டுமென நினைக்கிறீர்களோ அதுவேதான். ஒருவரின் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்பது என்ன? அதாவது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி பேசவில்லை. பொதுவாக அனைவரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி கேட்கிறேன். லட்சியத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள். யார் அதை உங்களுக்கு காட்டுவார்கள்? வாசிப்பதன் மூலம் அறிந்துவிடமுடியும் என நினைக்கிறீர்களா?   ஒரு எழுத்தாளர் லட்சியம் என்பதை தான் புரிந்துகொண்ட முறையில் எழுதுவார். இன்னொரு எழுத்தாளர் இன்னொரு முறையை பின்பற்றுவார். கஷ்டத்தில் உள்ள மனிதனைச் சென்று லட்சியம் என்னவென்று கேட்டால் மகிழ்ச்சியாக வாழ்வது என்பான். பசியில் இருப்பவனைக் கேட்டால், வயிறு நிறைந்திருப்பது என்பான், பெண்ணைக் கேட்டால், குழந்தை பெற்றுக்கொள்வது என்பாள், அரசியல்வாதியைக் கேட்டால், முக்கியமான அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்பார். சன்னியாசியைக் கேட்டால் அவருக்கு கடவுளைக் காண்பது அடைவது லட்சியம் என்பார். லட்சியம்,

பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?

படம்
              பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் ? மனிதர்களை பழக்கங்களால் உருவானவர்கள் என்று கூறலாம் . இங்கு நடந்துள்ள பல்வேறு மாற்றங்கள் மனிதர்களின் தொடர்ச்சியான பழக்கங்களால் உருவானதுதான் . விமானத்தில் உள்ளது போல ஆட்டோபைலட் முறையில் தினசரி செய்யும் பழக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது . பரிணாம வளர்ச்சியுப் இப்படிப்பட்டதே . இதன்மூலம் ஒன்றை நாம் புதிதாக தொடங்குவது பற்றி யோசிக்காமல் முக்கியமான செயல்களின் மீது எளிதாக கவனம் செலுத்தலாம் . முடிவுகளை முன்னரே யோசித்தல் பாலூட்டி உயிரினமாக மனிதர்கள் உயிருடன் இருக்க முக்கியமான காரணம் , இறந்த காலத்திலிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுதான் . இதனால்தான் நெருப்பைக் கண்டால் சுடும் என விலகுவதும் , பாம்பைக் கண்டால் நடுங்குவதும் ஏற்படுகிறது . இந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகளாக நமது மரபணுவில் பதிந்து கடத்தப்பட்டுள்ளது . ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவுகளை யோசிப்பதும் இப்படி உருவாகி வந்ததுதான் . சில சமயங்களில் இது தப்பானாலும் பெரும்பாலான நேரம் முடிவு எடுத்த வழியில்தான் செயல்