சுயநலம் கொண்ட பணக்கார குழுக்களால் ஏற்படும் பேராபத்து!
அமெரிக்கா, முன்பு போல வலிமையான நாடு கிடையாது. அங்கு 85 மில்லியன் மக்களுக்கு மருத்துவ காப்பீடு கிடையாது. அரசு பள்ளிகள் பலவீனமாகி வருகின்றன. அரசு தொழிலாளர் உரிமை காக்கும் அமைப்பு மூடப்பட்டு விட்டது. இனவெறி, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போலி வதந்திகள் உருவாக்கப்பட்டு பரவி வருகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர், பணக்காரர்களுக்கு சரக்கு வாகன ஓட்டுநர், செவிலியர் ஆகியோரை விட குறைந்த வரியை விதிக்கிறார். இதற்கு காரணம் என்ன, சர்வாதிகாரம் எப்படி பணக்கார தொழிலதிபர்களால் நடைமுறைப்படுத்தப் படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் விளக்கி எழுதியிருக்கிறார். வலதுசாரி இன மதவாதம் வளருவது பற்றி கவலை கொள்கிறீர்களா? இந்த நூல் உங்களுக்காகவே!