வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி

டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன?

ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு

வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார். 

பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்?

தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர் பழைய காருக்கு ரிப்பேர் செலவாக செய்துகொண்டிருப்பது. 

கல்வி என்பது தனிநபர் சார்ந்ததா?

ரஷ்யாவைச் சேர்ந்து உளவியலாளர் லெவ் வைகாட்ஸ்கி, கல்வி என்பது மாணவர், தன்னைவிட அறிவுத்திறன் கொண்டவர்களோடு சேர்ந்து புதிய விஷயங்களை தேடி கற்பது என்று கருத்து கூறினார். கல்வி கற்பது தனிநபர் அணுகுமுறை அல்ல அது ஒரு சமூக கூட்டு செயல்பாடு என வரையறுத்து கூறினார். லெவின் கருத்துகள் நவீன கல்விமுறையில் விவாதம், குழு ஆலோசனை, ஆசிரியரை மையப்படுத்தாத இயல்பில் அமைந்தவை. சைக்கிளை ஓட்ட நீச்சலைக் கற்க ஒருவர் முனைந்தால் முதலில் அதற்கு வழிகாட்டுவதற்கு ஒருவர் தேவை. அவர் உதவியுடன் கற்றபிறகு தன்னம்பிக்கை மனதில் வளரும். பிறகு ஆதரவின்றி தனித்து இயங்க முடியும். இந்த வகையில் கல்வி கற்க ஆசிரியர், பெற்றோரின் உதவி தேவை. இல்லையென்றால் முடியாது என்றில்லை. செயல்பாடு கடினமான இருக்கும். அவ்வளவுதான். சுயமாக முயன்று வெல்பவர்களும் உண்டு. அது கடினமான பாதை. 

லெவின் கூறிய ஸ்கேஃபோல்டிங் என்ற முறை பற்றி கூறுங்கள். 

ஒரு கட்டிடத்தை கட்ட தற்காலிகமாக சாரங்கள் அமைப்பார்கள். முற்காலத்தில் மூங்கில் சாரங்கள் இருக்கும். இப்போது அது இரும்பு குழாய்களாக உள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டபிறகு அந்த சாரங்கள் அகற்றப்படும். அதற்குமேல் கட்டிடத்திற்கு அவை தேவையில்லைதானே? சைக்கிளை ஓட்ட அப்பா உதவி செய்வது பையன் அதை கற்கும் வரைதான். கற்றபிறகு அவர் கேரியரை பிடிக்க வேண்டியதில்லைதானே? அதேதான். கணக்கு, அறிவியலில் உள்ள வினாக்களுக்கு ஆசிரியர் எப்படி யோசித்து விடை கண்டுபிடிப்பது என வழிகாட்டுவார். நான்கு பதில்கள் தேட வேண்டியிருந்தால், ஒன்றைக் கண்டுபிடித்து காட்டுவார். மீதி மூன்றை மாணவர்கள் கண்டறிய வேண்டும். இதைத்தான் ஸ்கேஃபோல்டிங் என உளவியலாளர் லெவ் கூறுகிறார். இதில் மாணவர் பதில் கண்டறிய முடியாமல் திணறும்போது ஆசிரியர் உதவி செய்வார். மாணவர் திறமை பெற்றபிறகு ஆதரவை விலக்கிக் கொள்வார். 

மொழி என்பது சுதந்திர சிந்தனைக்கானதா?

அது ஒரு கருவிதான். நாம் அறிந்த மொழி வழியாக இன்னொருவரின் சிந்தனையை அறிகிறோம். மொழியை ஒருவர் தனது குடும்பத்தினர் வழியாக, ஆசிரியர்கள் வழியாக கற்கிறார்கள். பின்னர், அதன் வழியாக யோசிக்கும் திறனை அடைகிறார்கள். அதுவே சுதந்திர சிந்தனைக்கு உதவுகிறது. மொழியைக் கற்பது, தனக்குள்ளாக அமைதியாக பேசி அதை வலுவாக்கிக்கொள்வது ஆகியவை குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகள் ஆசிரியர்களிடமிருந்தும், சம மாணவர்கள், உறவுகள், நண்பர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். சமூக, வரலாற்று சூழலும் அவர்கள் மீது தாக்கம் செலுத்துகிறது. அதனால்தான் இந்து பாசிச சக்திகள், சிறு பிள்ளைகளை மதவெறி கொண்டவர்களாக மாற்ற பாட நூல்களில் உள்ள வரலாற்றை போலியாக திரித்து வன்முறையை தூண்டும்விதமாக வெறுப்பை வளர்க்கும் விதமாக எழுதி படிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். 

மகிழ்ச்சி என்பது என்ன?

கல்யாணத்திற்கு போய் சோறு தின்றுவிட்டு ஐஸ்க்ரீம் வாங்கி நக்கி தின்னாவிட்டாலும் பலருக்கும் திருப்தி வருவதில்லை. அப்படி பார்க்கும்போது பீடா கடைக்காரர் தனியாக ஆதரவின்றி நிற்கிறார். ஐஸ்க்ரீம் எளிதாக கிடைக்காது. விலையும் அதிகம். ஆனால், பீடா அப்படியல்ல. அது ஒரு மலிவான பொருள். அப்படியல்லாதபோதும் வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு நவீன தலைமுறையினருக்கு ஷோக்கு தருவதில்லை. மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியைத் தேடுவது, அதேநேரம் வலி, வேதனையை எதிர்கொள்ளாமல் என்பதை அடிக்கோடு போட்டுக்கொள்ளலாம். இன்னொரு மகிழ்ச்சி என்பது வாழ்வின் காரணத்தை தேடுவது. நீண்டகால நோக்கில் மகிழ்ச்சியை பெற உங்களை வலுப்படுத்திக்கொண்டு உறவுகளை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது இலக்கல்ல. அது ஒரு பயணம். அந்த பயணம் நாம் தினசரி வாழ்வில் செய்யும் முடிவுகளால் உருவாகிறது. மகிழ்ச்சி என்பது அனுபவம், மற்றும் இருப்பதைப் பற்றிய நிறைவுதானே  ஒழிய நம்மிடம் உள்ள பொருட்களை அடிப்படையாக கொண்டது அல்ல. 

இன்னும் அதிகம் என மனம் தேடுவது ஏன்?

முழு உலகமும் எலி பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகம் ஒருவரை எளிதாக சுதந்திரமாக இருக்க விடாது. பணம், பதவி, அந்தஸ்து, தங்கம் என தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்குமாறு சமூகம் தனது பார்வையை மாற்றிக்கொண்டுவிட்டது. அப்படியான தகுதிகளுக்குள் இல்லாதவர்களுக்கு எந்த மரியாதையும் கிடைக்காது. அடிப்படையில் அவர்கள் இருப்பதில் மகிழ்ச்சி கொண்டிருக்கலாம். ஆனால், பொருட்கள் இன்மை பிறரின் பார்வையில் குறையாக தோன்றலாம். அந்தவகையில் அடுத்தவர்களின் பேச்சுகள், பாராட்டுகளுக்காக ஏங்குபவர்கள் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள். ட்ரெட்மில் எந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? அதில் ஓடுவது, நடப்பது என்பது எந்திரத்தை முற்றாக நிறுத்தாதவரை நிற்காது. ஓடிக்கொணேட இருக்கவேண்டும். ஒரு பொருள் கிடைத்துவிட்டதா, அடுத்த பொருள் என மனம் அடுத்தடுத்து ஓடிக்கொண்டே இருக்கும். உடல் களைத்து சலித்தாலும் மனம் அதை விடாது. 

பணம் மகிழ்ச்சிக்கு அவசியமா?

பணம் என்பது இந்த உலகில் அடிப்படையானது. உங்கள் தேவை என்ன என்பதை தீர்மானித்து அதற்கேற்ப அதை பெற முயலவேண்டும். மற்றபடி கண்ணில் படும் சொத்துக்களை வாங்குவது, வெளிநாட்டு வங்கியில் போடுமளவு பணத்தை சம்பாதிப்பது. வரி வாங்கி மக்களின் ரத்தத்தை உறிஞ்சி மத கலவரங்களை உருவாக்கிவிட்டு வெளிநாடு சுற்றுலா சென்றுவிடுவது என்று இருப்பது மனச்சிதைவின் அறிகுறி. ஒரு இடத்திற்கு பணம் இருப்பவர் பேருந்தில் காசு கொடுத்து செல்லலாம். கார் வாங்கியிருந்தால் அவர், அதை பயன்படுத்தலாம். பணம் இல்லாதவர் அதே இடத்தை நடந்து சென்று அடைவார். பணம் சில சொகுசு விஷயங்களை உருவாக்கித் தருகிறது. மனிதர்கள் இறந்தாலும் இருந்தாலும் பணம் என்பது அல்டிமேட். ஜெர்மனி நாட்டில் தயாரித்த காரில் இருந்து இறங்கி வந்துதான் நாட்டின் ஆட்சித்தலைவர் சொந்த நாட்டில் பொருட்களை சுயமாக தயாரிப்போம் என தன்னம்பிக்கை பேச்சு பேசுகிறார். சாமியார்கள் அனைவருமே மன அமைதியை மக்களுக்கு வழங்கும் பணியில் உள்ளனர். அவர்களின் கார், உண்ணும் உணவு, அணியும் ஆடைகளை பார்த்தாலே தெரியும் அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று. உங்களுக்கு நன்மையை, ஆலோசனையை சொல்லக்கூட ஒருவருக்கு தகுதி தேவை என எண்ணத் தொடங்கிவிட்டீர்கள். அப்படியான சூழலில் பணம் இல்லை என்றால் என்னாவது? மூன்றாம் உலக நாடான இந்தியாவில் பணம் என்பது உடலில் நகையாக கண்ணாடியாக மோதிரமாக காராக வெளியே தெரியாவிட்டால் செல்லும் இடங்களில் எந்த மரியாதையும் கிடைக்காது.  

பணத்தை வைத்து அனுபவங்களை பெறுகிறீர்களா, அல்லது சொத்து வாங்கி குவித்து கொண்டிருக்கிறீர்களா என்பது முக்கியம். ஏனெனில் மகிழ்ச்சி என்பது ஒருவருக்கு ரஹ்மானின் கான்செர்ட் செல்வதாக, வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதாக இருக்கிறது. இன்னொருவருக்கு நிலங்களை வாங்கிப் போடுவதாக இருக்கிறது. பயணமாக, உணவுகளை உண்பதாக அமைத்துக்கொள்வது உங்களை திறந்த மனம் கொண்டவராக அனுபவங்கள் நிறைந்தவராக புதிய உறவுகளை பெறக்கூடியவராக மாற்றும். 





















































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!